கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தில், கட்சிக் காங்கிரஸ், குறிப்பிட்ட அந்த சூழலில் மேற்கொள்ளவிருக்கும் வழியை வகுத்தளிக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும். இந்தியாவில் தற்போதுள்ள சூழலானது, சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தவற்றிலேயே மிகவும் சவால் மிக்க சூழலாகும். இத்தகைய பின்புலத்தில், இகக(மாலெ)வின் 11வது காங்கிரஸ், கட்சியின் உள்ளார்ந்த வலுவையும் விரிவடைந்து வரும் அமைப்பையும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும் சங்கப் படைக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் முன்முயற்சி, தலையீட்டை இயங்காற்றல் மிக்க வகையில் நிகழ்த்திக் காட்டியதெனலாம்.