தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு முதல் மாநாடு தென்காசியில் 1.10.2023 அன்று காலை நடைபெற்றது. சிவில் சப்ளை குடோன் முன்பு உள்ள லோடுமேன் சங்க கொடிக்கம்பத்தில் சங்கத்தின் மூத்த தோழர் ஆர். முருகையா மாநாட்டுக் கொடியேற்றினார். ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அயுப்கான், புதியவன் என்ற சுப்பிரமணியன், பேச்சிமுத்து, பொட்டுச்செல்வம், அழகையா, சுப்பிரமணியன், பரமேஸ்வரி ஆகியோர் கொண்ட தலைமை குழு மாநாட்டை வழி நடத்தியது. மாவட்ட நிர்வாகி மாதவன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டைத் துவக்கி வைத்து ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் கே.ஞானதேசிகன் சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட பொது செயலாளர் எம். வேல்முருகன் முன்வைத்துப் பேசினார், மாநாட்டு வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் எஸ் குருசாமி முன்வைத்தார். பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பின்பு ஏஐசிசிடியு மாநில தலைவர் டி. சங்கரபாண்டியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட நிர்வாகி பேச்சிமுத்து நன்றி கூறினார். ஏஐசிசிடியு தென்காசி மாவட்டத் புதிய தலைவராக அயூப்கான், கெளரவத் தலைவராக தி.புதியவன் (எ) சுப்பிரமணியன், பொதுச் செயலாளராக எம்.வேல்முருகன், பொருளாளராக செ.மாதவன் மற்றும் 8 துணைத் தலைவர்களும் 7 துணைச் செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.