இந்தியாவின் 100ஆவது மே நாள்

தோழர் சிங்காரவேலரால் 1923 மே 1 அன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. 2023 மே 1 இந்தியாவின் 100ஆவது மே நாள். இந்த மே நாளில் கார்ப்பரேட் ஆதரவு காவிப் பாசிசத்தை இந்தியாவை விட்டே வெளியேற்றும் இலட்சியத் தோடு இகக(மாலெ), ஏஐசிசிடியு சார்பாகமே 1 அன்று நாடெங்கும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடியேற்றுதல், உறுதியேற்புக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மே 1 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றன.

டாஸ்மாக் தொழிலாளர்கள் வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை பணி வரன்முறை காலமுறை ஊதியம் கிடையாது. அவர்கள் வாங்கும் தொகுப் பூதியத்தில் உயர்வு அளித்தாலும் கூட அவர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் சொற்பமே. மேற்பார்வையாளர் ரூ.13,750ம், விற்பனையாளர் ரூ.11,600ம், உதவி விற்பனையாளர் ரூ.11,500ம் தான் பெற்றுவருகின்றனர். சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, மிகை நேர ஊதியம் போன்ற எதுவும் கிடையாது.

மே நாள் அறைகூவல் 2023 இந்திய மே நாள் நூறாண்டு நிறைவு!

இந்தியாவிலேயே முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது சென்னை மெரீனா கடற்கரையில்தான். மே 1, 1923 அன்று, தோழர் சிங்காரவேலரால் சென்னையில் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. அதே போல, சென்னையில்தான் முதல் தொழிற்சங்கமும் தோழர் சிங்காரவேலரால் துவக்கப்பட்டது. 2023ல் இந்திய தொழிலாளர் வர்க்கம் அனுசரிக்கும் மே முதல் நாள், மே நாள் கொண்டாட்டத்தின், மே நாள் சூளுரையின் ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதாகும்.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏஐசிசிடியு

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப்  பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு மேம்பட்ட பணி நிலைமைகள் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் தொடரும்.

தமிழ்நாட்டில் விசைத்தறி முக்கிய வேலை அளிக்கும் தொழிலாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு செலவானியையும் வேலைவாய்ப்பையும் உரு வாக்கித் தருவதால் தமிழக அரசு விசைத்தறி உற்பத்திக்கு மட்டுமே என சில துணி ரகங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் பாரம்பரிய தொழிலான கைத்தறி உற்பத்திக்கு என்று சில ரக துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தொழிலை பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு விசைத்தறிக் கூடங்களுக்கென இலவசமாக மின்சாரமும் வழங்குகிறது.

பாஜகவின் பொய் பிரச்சாரத்தை, போலிச் செய்திகளை, வதந்திகளை, அதன்தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்திடுவோம்!

பீகார் தொழிலாளர் மற்றும் பிற வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த போலி செய்திகள் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் வெள்ளமெனப் பெருகி ஓடியது. ஹோலி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளரை, அவர்கள் மீதான தாக்குதல் காரணமாக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்று கெடுநோக்குடன் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. இந்த போலிச் செய்தியை சரிபார்க்காமலே பல்வேறு ஊடகங்க ளும் பத்திரிகைகளும் எடுத்துக் கொண்டு செய்தி வெளியிட்டன.

2024 தேர்தலில் மோடி அரசைத் தோற்கடிப்போம்!

நவதாராளவாத கொள்கை அமுலாக்கத்தின் விளைவுகள் என்ன, தொழிலாளர் சட்டங்களை ஒழித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். தொழிலாளர் சங்கம் அழைக்கப்படாத தொழிலாளர் அமைச்சர்களின் திருப்பதி மாநாட்டில் நடந்தது அதுதான். தொழிலாளர் சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்ட மாநிலங்களில் தொழில்துறை வளர்ந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொகுப்புச் சட்டம் உருவாக்கியது சரிதான் என நிறுவப் பார்க்கிறது.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர் நலனை உயர்த்தி பிடித்து ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.

"ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்ற இந்தக் கருத்தரங்கத் தலைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதாரமான ஊதியத்தில் கை வைக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அமைப்பைக் கூட்டவே இல்லை. சமீபத்தில் திருப்பதியில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எந்த தொழிற்சங்கமும் அழைக்கப் படவில்லை. பதிலாக அவர்கள் எல்லா தொழிலுக்கும் பொதுவான தேசிய தரைமட்டக் கூலி என அறிவித்திருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான ரூபாய் 176 என்ற சொற்பத்தொகையை கொடுத்தால் போதும் என்கிறார்கள்.