இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), தனது உன்னதமான வர்க்க லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும், இந்திய பாட்டாளி வர்க்கத்தின், அதிஉயர்ந்த அரசியல் அமைப்பாகும். அது, மக்களின் முன்னேறிய பிரிவினரை தன்னகத்தே கொண்டுள்ளது. நிலப்பிரபுத்துவ தளைகளில் இருந்தும் பெருமூலதனம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் சூறையாடல் மற்றும் ஆதிக்கத்தில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான இந்திய மக்களின் தேடலில், அதன் தலைமைக்கருவாக விளங்குவதுடன், பால், சாதி, நம்பிக்கை, மொழி அல்லது தேசிய இனம் எதுவாயினும் அவற்றைப் பொருட்படுத்தாது, அனைவரும் சுதந்திர குடிமக்களாக சம உரிமைகளையும், துரித முன்னேற்றத்தையும் பெறுவதற்காக நிற்கிறது.

இந்தியாவில், புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதை, குறைந்தபட்சத் திட்டமாகக் கொண்டுள்ளது, உயர்ந்தபட்சத் திட்டமான சோசலிச மாற்றத்தையும், கம்யூனிசத்தையும் கொண்டுவரவும், தனது இறுதி இலட்சியமான, மனிதரை மனிதர் சுரண்டும் அனைத்து வகைச் சுரண்டலையும் ஒழித்துக் கட்டவும், கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.

கட்சி, தனது உலகக் கண்ணோட்டத்தை மார்க்சிய சித்தாந்தத்திலிருந்து பெறுகிறது; ஒருங்கிணைந்த முறையான மார்க்சிசம்-லெனினியம் மாசேதுங் சிந்தனையை செயலுக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறது. இந்தியப் புரட்சியின் சரியான வழியை வளர்த்தெடுக்க, கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும், சீர்திருத்தவாதம், திரிபுவாதம், அழிவுவாதம், முதலாளித்துவ தாராளவாதம், அராஜகவாதம் மற்றபிற அனைத்து தவறான கருத்துக்களுக்கும், போக்குகளுக்கும் எதிராக, கட்சி, சளைக்காத போராட்டத்தை நடத்துகிறது.

கட்சி, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது. செயல்படுத்துகிறது. சர்வதேச உறவுகளில், எல்லா வகையான ஏகாதிபத்தியம், மேலாதிக்கம், காலனியம்/நவகாலனியம், விஸ்தரிப்புவாதம், இனவாதம், குறுகிய வெறிவாதம், ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கிறது. உலகின் எல்லா பகுதிகளிலுமுள்ள, எல்லா புரட்சிகர கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுடனான, அமைப்புக்களுடனான ஒற்றுமையைக் கட்சி பெரிதும் மதிக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசங்களது போராட்டங்களைக் கட்சி ஆதரிக்கிறது. அத்துடன், மானுடம் முழுவதும் முழுமையாக விடுதலை அடைய வேண்டுமென்ற இறுதி லட்சியத்தை அடையும் நோக்கத்திற்காக, ஏகாதிபத்தியம், பிற்போக்கு சக்திகளுக்கெதிரான, எல்லா இயக்கங்களோடும் கட்சி அய்க்கியப்படுகிறது. சகோதரத்துவ உறவுகள் குறித்த விசயங்களில் சுதந்திரம், தலையிடாமை, சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை கட்சி கடைபிடிக்கிறது.

கட்சி வேலை நடையில், தத்துவத்தை நடைமுறையோடு ஒன்றிணைப்பது, மக்களோடு நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது, விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் நடைமுறைப்படுத்துவது உரிய நேரத்தில் தவறுகளைத் திருத்திக் கொள்வது ஆகியவை மூன்று பிரதான கோட்பாடுகளாகும். கட்சி தன் நடைமுறையை வளர்த்தெடுப்பதற்கு எப்போதுமே யதார்த்த விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது என்ற கொள்கையைப் பின்பற்றுவதுடன், ஆழமான ஆய்வுகளையும் காத்திரமான படிப்புகளையும் மேற்கொள்ளுகிறது.

கட்சி உறுப்பினர்கள், மக்கள் மீது அதிஉயர்ந்த நேசம் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்திய சமுதாயத்தின் அனைத்து மிகச் சிறந்த புரட்சிகர மரபுகளையும் உயர்த்திப் பிடிப்பவர்கள். அவர்கள் உண்மை மற்றும் கம்யூனிசம் என்கிற பதாகையை உயர்த்திப் பிடிப்பதற்கு தங்கள் இன்னுயிரையும் விலையாகக் கொடுக்கும் துணிச்சல் கொண்டவர்கள்.

இந்திய சமூகம்

இந்தியா எழுந்து வரும் ஆசிய சக்தி என விவரிக்கப்பட்டாலும், இந்த பூமியிலுள்ள பெருமளவு ஏழைகளின் இருப்பிடமாகவே இன்னும் இருக்கிறது. இந்திய பெருந் தொழில் குழும முதலாளிகள், உலகெங்கும் அவர்க ளுடைய இறக்கையை விரித்து வான் வெளிகளில் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமது நாடு இன்னும், மனிதவள உலக பட்டினிக் குறியீட்டிலும் மேம்பாட்டுக் குறியீட்டிலும், பரிதாபகரமான தனிநபர் வருமானத்துடன், தரவரிசையில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது.

ஒரு சிறிய மேல்மட்டபிரிவினர், தங்கு தடையற்ற செல்வக் குவிப்பிலும், பளிச்செனத் தெரியும் படாடோப நுகர்விலும் திளைத்துக் கொண்டிருக்க, எல்லா செல்வத்தையும் உற்பத்தி செய்யும் அடித்தளமாக உள்ள ஒரு பெரும் பிரிவினர் அனைத்தும் பறிக்கப்பட்டு இருண்ட அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இந்தக் குரூர வேறுபாடு மிகவும் தாறுமாறான ஒரு வளர்ச்சிப் போர்த்தந்திரத்தால் ஏற்பட்ட விளைவாகும். மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்புக்கும் பிழைப்புக்கும் இப்போதும் ஆதாரமாக இருப்பது விவசாயம் தான். ஆனால், அது மேலோங்கிய அரை நிலப்பிரபுத்துவ சிறுவீத விவசாயப் பொருளா தாரத்தால் அழுத்தப்பட்டு, நிலப்பிரபுத்துவ பாதை வாயிலாக, முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் ஒரு நீடித்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. மேலும், ஊழல் அதிகாரிகள், அரசியல் தாதாக்களுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு வணிக நோக்கத்திற்காக, மூர்க்கத்தனத்துடன் நிலப்பறியில் ஈடுபடும் நிலக் குற்றக் கும்பல் தோற்றத்தின் மூலம் விவசாயம் சரிய விடப் பட்டுள்ளது. பெரும்பாலான மரபுவழித் தொழில்கள் தேங்கி நிற்கின்றன. ஏற்றுமதிச் சந்தைகள், அயல்நாட்டுச் சந்தைகளுக்கான அல்லது மேட்டுக்குடியினர் நுகர்வுக்கான துறைகளே முன்னேற முடிகிறது. வளர்ச்சியின் இயந்திரங்களாக ஊகவணிக நடவடிக்கைகளும் ரியல் எஸ்டேட் துறைகளும் முன்னுரிமைப் படுத்தப்படுகின்றன; நம் நாட்டின் இயற்கை வளங்களும், மனித வளங்களும் பெரும் தொழில்குழும-ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கு அதிகரித்த அளவில் ஆட்படுத்தப்படுகின்றன.

விவசாயம் உட்பட எல்லாத் துறைகளிலும் துரிதப்படுத்தப்பட்ட, அனைத்தும் தழுவிய மூலதன ஊடுருவல் நடைபெறுகிறது. இந்த மூலதன ஊடுருவலானது, உற்பத்தி உறவுகளிலும் விழுமிய முறைகளிலும் விடாப்பிடியாய் இருக்கின்ற நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை ஒழிக்காமல், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே நடக்கிறது. அதன்மூலம் நிலப் பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் புதிய வடிவங்களில் மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுபோன்ற எச்சங்கள், பெருமூலதனத்திற்கு மலிவான உழைப்புச் சக்தியையும், மூலப்பொருட்களையும் வழங்குவது மட்டுமின்றி, விடாப்பிடியான பலவகை இருண்மைவாத, குறுகிய கருத்துகள், பல நேரங்களில் காட்டுமிராண்டித்தனமான வடிவங்கள் எடுக்கும் திட்டமிட்ட சாதிய, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு, ஒரு கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தை வழங்குகின்றன. சுருங்கச் சொன்னால், தேசத்தின் பொருளாதார வாழ்வுத் தடங்கள், நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் பெருந்தொழில் குழும கட்டுப்பாட்டோடு, குறிப்பாக அதி உயர் தனிச் சலுகை பெற்றுள்ள அரசு சலுகைசார் முதலாளி களோடு சேர்ந்து கொண்டு, (இந்த) நிலப் பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடக்குகின்றன; சிதைக்கின்றன. இந்திய சமூகத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் ஒரு முற்றூடான ஜனநாயகமயப் படுத்துதலுக்கு மிகப் பெரிய தடைக்கற்களாய் இருக்கின்றன.

பொருளாதார வல்லமை வளர்ந்து வந்தாலும், ஆளும் அதிகாரத்துவ ஏகபோக முதலாளித்துவம், அரசியல்ரீதியாக, தனது தோற்றகால தரகுத் தன்மையை, தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது ஏகாதிபத்தியம் அல்லாத பல எல்லா வகைப்பட்ட நாடுகளுடனும், நெருக்கமான பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. பல பன்னாட்டு மன்றங்களிலும், பொருளாதாரக் கூட்டமைப்பு களிலும் பங்கேற்கிறது. வெவ்வேறு அந்நிய சக்திகளுடன் பேரம் பேசுவதற்கான கணிசமான ஆற்றலைக் கொண்டுள்ளது. அது அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் தனது பொருளாதார விரிவாக்கவாத பேரவாக்களுக்கு சேவை செய்ய, கனிம மற்றும் எண்ணெய் வளங்களுக்காகப் போட்டியிட, கணிசமான அளவு மூலதன ஏற்றுமதியில் ஈடுபடுகிற றது. ஆனபோதும் இவை அனைத்தும் ஏகாதிபத்தி யத்தைச் சாரமாகச் சார்ந்திருப்பது என்ற வரையறைக்குள் தான் செயல்படுகின்றன. இது நுண்தளத்தில் வெவ்வேறு தொழில்நுட்ப, நிதி மற்றும் விற்பனைப் பிணைப்புக்களாகவும் ஒட்டுமொத்த (மேக்ரோ) தளத்தில் நவதாராள வாத பொருளாதார சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதிலும் ஏகாதிபத்திய சதிகளுக்கு கீழ்படியும் அரசுக் கொள்கையிலும் மிக முக்கியமாக வெளிப்படுகிறது.

இது ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட பல்தள முகாமைகளும் பெரும் அந்நிய சக்திகளும் நமது உள்நாட்டு பொருளாதார அரசியல் விவகாரங்களிலும் கொள்கை விசயங்களிலும் அப்பட்டமாக தலையிடவும் 'போர்த்தந்திரக் கூட்டுகள்' என்ற போர்வையில் தமது புவிசார் அரசியல் விளையாட்டுக்களில் ஓர் இளநிலைக் கூட்டாளியாக செயல்படுமாறு இந்தியாவை இழுக்கவும் வழிவகை செய்கிறது. இப்படியாக நமது இறையாளுமைமிக்க தேர்வுரிமைகள், முன்னுரிமைகள் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன.

துரிதமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரால் வர்க்கங்கள், கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை ஆளும் எளிதாக்கும் வகையில் அரசின் பாத்திரத்தை மறு வடிவமைப்பு செய்யக் கூடிய ஒரு போர்த் தந்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. அதாவது உற்பத்தியிலும் விநியோகத்திலும் அரசின் நேரடிப் பங்களிப்பை கடுமையாகக் குறைத்துக் கொள்வது, மக்களின் அடிப்படை நலன்கள உத்திரவாதப்படுத்தும் அரசின் பொறுப்பைத் துறந்துவிடுவது, பொருளாதாரத்தின் கடிவா ளத்தை அரசிடமிருந்து, சந்தை சக்திகளை வழிநடத்தும் பெருமூலதனம் மற்றும் அந்நிய நிறுவனங்களோடு நெருக்கமான உறவுடன் செயல்படும் பெரிய இந்திய நிறுவனங்களிடத்தில் ஒப்படைப்படைத்து விடுவது. அரசால் ஊக்கப் படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் இம் மாதிரியான வளர்ச்சியானது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட் டத்தை ஏற்படுத்துகிறது. சிலர் கைகளில் பிரம் மாண்டமாக செல்வம் குவிவதற்கும் பணக்காரர் கள், ஏழைகளுக்கிடையிலான இடைவெளி பளீரெனத் தெரியும் விதத்தில் விரிவடைவதற்கும் உழைக்கும் மக்களின் பெரும் பிரிவினர் இடம் பெயர்தலுக்கும் உடைமை பறிக்கப்படுவதற்கும் வறுமைமயமாதலுக்கும் ஆளாக்குகிறது. கார்ப்பரேட் சார்பு, ஏகாதிபத்தியச் சார்புக் கொள்கையைக் கொண்ட இந்த ஆட்சி, ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட்களின் ஆதரவையும் மேல் நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்குமிக்க பிரிவினரின் விமர்சனமற்ற ஆதரவையும் பெற்றுள்ளது. அதே நேரம் விரிவடைந்து வரும் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பரந்த பிரிவினர், பெருந்தொழில் குழும சூறையாடல் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கெதிரான வெகுமக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்; பல நேரங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் விருப்பங்களின் அறுதியிடலுக்கான போராட்டத் திற்கு ஒரு கூர்முனையை வழங்குகின்றனர்.

தொகுத்துச் சொன்னால், கட்சி, இந்தியாவை மேலோங்கிய விவசாய பின்தங்கிய ஒரு முதலாளித்துவ சமூகம் எனவும் இச்சமூகம், விடாப்பிடியான நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்க ளாலும் அப்பட்டமான காலனிய தொடர்ச்சி களாலும் வாட்டி வதைக்கும் பேராசைமிக்க உலக மூலதனம், ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தாலும் முடக்கப்படுவதுடன் அச்சக்திகளை மறுஉறுதி செய்கிறதென்றும் கண்டுணர்கிறது. 

இந்திய அரசு

இந்தியாவில் உள்ள அரசு, நிலப்பிரபுக் களோடும் குலக்குகளோடும் கூட்டணி வைத்துள்ள ஏகாதிபத்திய சார்பு பெருமுதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்படுகிறது. உலக மூலதனத்தோடு கூட்டு சேர்ந்து, இந்திய மூலதனம் தனது கடல் கடந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் துவங்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகத் திட்டத்தில் ஒரு கேந்திரமான கூட்டாளி என்ற போதிலும், இந்திய அரசும் கூட அதிகரித்த அளவில் ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாக எழுந்து வருகிறது. 

இந்திய அரசின் விவகாரங்கள் வெளிப்படையாக, ஓர் அரசியலமைப்புச் சட்ட நாடாளுமன்ற ஜனநாயக வரையறைக்குள்ளேயே நடத்தப் படுகிறது. இங்கு மக்களுக்கு, பல்வேறு மட்டங் களிலான தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சம்பிரதாய உரிமை உண்டு. இருப்பினும், இந்தியாவின் சட்ட, நீதிபரிபாலன, நிர்வாகத்துறை மேல் கட்டுமானமும் ஆயுதப் படைகளும் இப்போதும் பெருமளவுக்கு காலனிய பழங்காலத்தவையாகவே உள்ளன. அடிமைக் குடிகளை ஒடுக்கும், நிர்வகிக்கும் நோக்கத்திற்காக, ஓர் அந்நிய சக்தியால் வடிவமைக் கப்பட்ட இந்த மேல்கட்டுமானம், ஏகப்பெரும் பான்மை இந்திய மக்களுக்கு, அவர்களது அடிப்படை கண்ணியத்தையும், சுதந்திர குடிமக்கள் தகுதியை யும் மறுக்கிறது. ஆட்சியாளர்-குடிமக்கள் என்ற உறவுமுறை, காலனிய சகாப்த கலாச்சாரம் குடியுரிமை தொடர்பான நவீன ஜனநாயக கருத்தாக்கத்தின் மீது தொடர்ந்து செல்வாக்கு செலுத்திவரும் அதே வேளை, ஓர் இறுக்கமான படிநிலை சாதிய சமூகம், இனக்குழுக்களின், சமூகக் குடிகளின் ஆணாதிக்கக் கட்டளைகள், தனிநபர் சுதந்திரம், உரிமைகளின் அறுதியிடலை கடுமையாகச் சுருக்குகின்றன; சிறுமைப்படுத்து கின்றன. காலனிய காலத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சிமுறையானது, கொடூரச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது; சட்டத் துக்குப் புறம்பான நீதித் துறைக்குப் புறம்பான ஒடுக்குமுறை; காவல் சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலைகள்; போலி 'மோதல்கள்', விசாரணையின்றி காவல்; சிறுபான்மையினர், பழங்குடியினர், அரசியல் மாற்றுக் கருத்துடையோர் மீது பழி சுமத்தும் வேட்டை; வெகுமக்கள் எதிர்ப்பின் மீது காவல்துறையின் கொடூர ஒடுக்குமுறை; 'கலவரப் பகுதிகள்' என்று அழைக்கப்படுகிற பகுதிகளில், தண்டனை பற்றிய அச்சம் ஏதுமின்றி, ஒடுக்கு முறையில் ஈடுபடும் 'சிறப்பு அதிகாரங்கள்' கொண்ட ஆயுதப்படைகளின் இராணுவத் தலையீடு ஆகிய வற்றால் குறிக்கப்படுகிறது.

இந்தியா பல தேசிய இனங்கள், இன மொழிக் குழுக்கள் கொண்ட ஒரு நாடு. காலனிய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஜனநாயகப் போராட்டங்கள் ஆகியவற்றின் ஊடே வளர்த்தெடுக்கப்பட்ட சில பத்தாண்டு கால ஒற்றுமையின் பின்புலம் கொண்ட, வளர்ந்துவரும் பொருளாதார கலாச்சார உறவாடல்கள், பரஸ்பர உள்வாங்குதல் ஆகியவை, நமது சமூகத்தின் பல்தேசியஇன வண்ணக் கலவைக்கு ஓர் ஒன்றுபட்ட இந்திய முகம் தந்திருக்கின்றன. ஆனால் மக்கள் ஒற்றுமையின் இந்தப் பரிணாம வளர்ச்சிப் போக்கு, அழுத்தமாகத் தெரிகிற மிகப்பெரும் அளவிலான நன்கு புலப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளாலும், காஷ்மீரிலும் வடக்கிழக்கிலும், மிகவும் வெளிப்படையாக தெரிவது போன்று, பேரினவாத, அதீதமாக மய்யப்படுத்தப்பட்ட இந்திய அரசின் அப்பட்டமான பாகுபாடு, இடைவிடாத ஒடுக்குமுறை என்ற கொள்கையாலும் கூட்டாட்சி உரிமைகள், சுயாட்சி கோருகிற கோர்க்கர்களும், வேறுபலரும் தண்டிக்கப் படுவதாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, வெவ்வேறு தேசிய இனங்களும் தேசிய சிறுபான்மையினரும், வெவ்வேறு வடிவங்களிலான, வெவ்வேறு அளவுகளிலான சுயநிர்ணய உரிமைக்கான நீடித்த போராட்டங்களில் ஈடுபடுமாறு தள்ளப்பட்டுள்ள னர். இந்த விருப்பங்களையும், போராட்டங்களையும் மிருகத்தனமாக நசுக்குவதோடு அல்லாமல், பிரித் தாளும் தகிடுதத்தங்களைக் கையாள்வது, அரசு எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கு எதிரான சூழ்ச்சிகள், குறுகிய இன, சகோதர மோதல்களைத் தூண்டுவது அப்பாவி குடிமக்கள் எப்போதும் ஓயாத வன்முறை, பாதுகாப்பின்மை என்ற சூழலில் தொடர்ந்து வாழ்ந்து வருவதையும் அரசு செய்து வருகிறது. 

பார்ப்பனிய, புதிய பார்ப்பனிய கருத்தியல், கலாச்சாரத்தால் நெறிமுறையாக்கப்படும் சாதிய ஒடுக்குமுறையும், பாகுபாடும் இந்திய சமூகத்திலும் அரசிலும் நிலவுகிற மற்றுமொரு அருவருக்கத்தக்க அம்சமாகும். ஆகவே, சமூக ஒடுக்குமுறையை ஒழிப்பதும் சாதிகளை அழித்தொழிப்பதும் மற்று மொரு முதன்மையான புரட்சிகர இலக்காகும். இந்திய அரசு, பெண்கள் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பற்றி குழைய குழைய பேசிக்கொண்டே அனைத்துவிதமான ஆணாதிக்க கட்டமைப்புகளையும் சக்திகளையும் பாதுகாக் கிறது, முன்னெடுக்கிறது. மத அடிப்படை வாதம், மதவெறிவாதம், சாதியம், பாலின பாகுபாடு, இனரீதியாக தனிமைப்படுத்துதல், மொழி, பிராந்திய வெறி நிகழ்வுப்போக்குகள் ஆகியவை இந்திய ஆட்சி முறையின் வெவ்வேறு அடுக்குகளிலும் நிலவுகின்றன. இவை, கடந்துபோன நிலப் பிரபுத்துவ, காலனிய சகாப்தத்தின் வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல. 'நவீன' இந்தியாவின் மிகவும் பிரிக்க முடியாத பகுதிகளாக உள்ளன. இந்திய மக்களின் வளரும் ஜனநாயக ஒற்றுமையையும், விழிப்புணர்ச்சியையும் வலுவிழக்கச் செய்யவும், சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கங்களும் அவர்களது கட்சிகளும், இந்தக் கருவிகளை நன்கு கணக்கிட்ட விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றன. 

இந்திய சமூகத்திலும், அரசியலிலும் உள்ளார்ந் துள்ள இந்த அனைத்து பலவீனங்களும், சிதைவு களும் ஏறக்குறைய நூற்றாண்டு கால இந்து தேசிய மேலாதிக்கவாதத்தின் கருத்தியல், அரசியல் இயக்கத் திற்கு வழிவகுத்து, அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வும், நமது நாட்டை அப்பட்டமான ஒரு மதவெறி பாசிச அரசாக, கொடுங்கோல் இந்து தேசமாக மறுவரையறை செய்வதற்கு கடும் முயற்சி கொள்ள உதவியிருக்கின்றன. ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தை நிறுத்தியும், ஜனநாயக மாற்றுக் கருத்துகளுக்கு எதிராக, வெளிப்படையான கடும் நடவடிக்கைகளுடன் வெகு மக்களின் உணர்வுகளைத் தூண்டும் தேசியவாத கவர்ச்சிகர அரசியலை, சமூகப் பொறியமைவை இணைத்தும், அதிகாரத்தைப் பெறுதல், தக்கவைத்துக் கொள்ளுதல்; அரசுப் பாதுகாப்பின் கீழான சங்கிப் பயங்கர - வாதத்தால் துணை செய்யப்படும் அரசு பயங்கர வாதம்; முன்னெப்போதும் கண்டிராத அளவிலான நிதி ஊழல், அரசியல் தீங்கும்; மாக்கியவல்லிய சட்ட, நிர்வாக சூழ்ச்சிகள்; கல்வியையும், கல்வித்துறையை யும் காவிமயமாக்குதல்; வரலாற்றியல், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றை மதவாதமாக்குதல்; கூட்டாட்சியை சிறுமைப்படுத்துவதற்கும், நாடாளு மன்றம், அனைத்து அரசியல் சாசன, அரை அரசியல் சாசன நிறுவனங்கள், நீதித்துறை மீதும்கூட நிர்வாகத்துறை மேலாதிக்கத்திற்கான வினோதப் பெருவிருப்பம் ஆகியவைதான் இன்று இந்திய அரசு செயல்படுவதை வரையறுத்துக் காட்டும் சில அம்சங்களாகும். சலுகைசார்ந்த நடவடிக்கைகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடையாளம் காட்டும் எண்கணித முறைமைகள், கொடிய உளவு (நிரல்கள்) மென்பொருள்கள், கெடுபிடியானத் தகவல் தொழில் நுட்ப விதிகள் ஆகியவற்றை . ஆயுதங்களாகக் கொண்ட பெருந்தரவு முதலா ளித்துவம், கண்காணிப்பு அரசு என்ற கொடிய இரட்டையர்களைத் தடையின்றி பயன்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டையும் மெய்யானதொரு சிறையாக மாற்றுவதற்கு இந்த அரசாட்சி முயற்சிக்கிறது. மொத்தத்தில், தற்போதைய ஆட்சிக்காலம், ஏற்கனவே பல பத்தாண்டுகளாக கடும் அரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பை எப்பாடுபட்டாவது மேலும் தாழ்த்தி, அதனை, சட்டத்தின் ஆட்சி, அரசியல் சாசனத்தைக் கடைப்பிடிப்பது போன்ற ஜனநாயகத்தின் தொடக்க நிலைக் கூறுகளைக் கூட மறுக்கும், அதிகரித்து வரும் கொடுங்கோல் மற்றும் அப்பட்டமான ஒடுக்கு முறைப் பொறியமைவை மறைப்பதற்கான ஒரு ஏமாற்று மறைப்பாக ஆக்கியுள்ளது. எனவே இந்தக் கொடூர சதித்திட்டத்தை முறியடிப்பதும், புதிதாகக் கண்டடைந்துள்ள அதிகார நிலையில் இருந்து பாசிஸ்டுகளை அகற்றுவதும், இந்திய ஜனநாயகப் புரட்சியின் மிகமிக அவசரமான பணியாகும்.