அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு), தமிழ்நாடு 10ஆவது மாநில மாநாடு 2023 டிசம்பர் 16-17 தேதிகளில் கரூர், பசுபதி பாளையம், டி.பி.மகாலில் தோழர்.என்.கே.நடராஜன் நினைவரங்கத்தில், தோழர் சுகுந்தன் நினைவு மேடையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு ஏற்றினார். தொடர்ந்து தியாகிகள் நினைவுத் தூணிற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல் நாள் நடைபெற்ற பொது அமர்விற்கு ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் தோழர் த.சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் கே.ஞான தேசிகன் அஞ்சலித் தீர்மானத்தை முன்வைத்தார். ஏஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் பால்ராஜ் வரவேற்புரையாற்றினார். ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர், பொதுச் செயலாளர் தோழர் ராஜுவ்டிம்ரி சிறப்புரையாற்றி னார்கள். மேலும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை துணைச் செயலாளர் தோழர் சு.பாண்டியன்,ஏஐடியுசி மாநிலத் தலைவர் தோழர் எஸ்.காசிவிஸ்வ நாதன், சிஐடியு மாநில உதவிப் பொதுச் செயலாளர் தோழர் வி.குமார், ஹெச்எம்எஸ் மாநிலத் தலைவர் திரு மு.சுப்பிரமணியன் ஏஐயூடியுசி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாய்குமார், உழைக்கும் மக்கள் மாமன்ற தொழிற்சங்க துணைத் தலைவர் தோழர் சம்பத், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் தோழர் பேரறிவாளன், ஐஎன்டியுசி கரூர் மாவட்ட கௌரவத் தலைவர் திரு. பேங்க் சுப்ரமணியன், விவசாயிகள் போராட்ட முன்னணி யின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன் தீர்மானங்களை முன்வைத்தார். மாநிலச் செயலாளர் தோழர் வேல்முருகன் நன்றி கூறினார். 16ம் தேதி மதிய உணவிற்குப் பின்னர் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. தோழர்கள் இரணியப்பன், பாலசுப்பிர மணியன், பால்ராஜ், கிருஷ்ணவேணி, வேல்முருகன், முத்து, மதியழகன் ஆகிய தலைமைக்குழு தோழர்கள் மாநாட்டை நடத்தினார்கள். தோழர்கள் வேல் முருகன், வெங்கடாச்சலம், கணேசன் ஆகியோர் உதவிக்குழுவாகச் செயல்பட்டனர்.

மாநாட்டு அறிக்கையை ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் தோழர் க.ஞானதேசிகன் முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதிகள் தங்கள் கருத்துக் களை முன்வைத்தார்கள். டிசம்பர் 17 அன்றும் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. மாநாட்டில் அனைத்திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநிலப் பொதுச் செயலாளர் அ.சந்திரமோகன், நீதிக்கான மக்கள் இயக்கப் பொறுப்பாளர் தோழர் அ.சிம்சன், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாநிலக்குழு உறுப்பினர் தேன்மொழி, புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தனவேல், அகில இந்திய மாணவர் கழக மாநிலக்குழு உறுப்பினர் பாண்டித் துரை, அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் சோ.பாலசுப்பிர மணியன் வாழ்த்துரை வழங்கினார்கள். மத்திய பார்வையாளர் தோழர் உதய் கிரண், புதிய பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக் குழுவிற்கான தேர்தலை நடத்தினார். 105 பேர் கொண்ட பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் 45 தோழர்கள் செயற்குழுவிற்குத் தேர்வு செய்யப் பட்டனர். அதில் 19 தோழர்கள் ஏஐசிசிடியு மாநில நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக தோழர் த.சங்கரபாண்டியன், சிறப்புத் தலைவராக தோழர் சொ.இரணியப்பன், பொதுச் செயலாளராக தோழர் க.ஞானதேசிகன், துணைத் தலைவர்களாக தோழர்கள் க.பாலசுப்பிர மணியன், ஜி.ரமேஷ், எஸ்.எம்.அந்தோணிமுத்து, சுசீலா, கோ.கோவிந்தராஜ், பால்ராஜ், சதீஸ், மதிய ழகன் ஆகியோரும் செயலாளர்களாக தோழர்கள் திருநாவுக்கரசு, வேல்முருகன்(சேலம்), அதியமான், வெங்கடாச்சலம், முருகன் (மி.வா), முத்து, சிவா கிருஷ்ணவேணி (நிதி) ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ஏஐசிசிடியு தேசியத் தலைவர் தோழர் வீ.சங்கர் நிறைவுரையாற்றினார். காவிப் பாசிச மோடி அரசை வீழ்த்திடுவோம் என்கிற முழக்கங்களுடன் மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில்,

கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர்கள்,விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி ஆட்சியை 2024 தேர்தலில் தோற்கடிப்போம்!

ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை போராடி முறியடிக்க மாநாடு உறுதி ஏற்றுக் கொள்கிறது. மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து நடத்த உள்ள நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை பெரும் வெற்றியடையச் செய்ய அனைத்து வகையிலும் பாடுபடுவோம்!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்குள் புகுந்து கண்ணீர்ப் புகையை திறந்து விட்ட நிகழ்வு வெறும் பாதுகாப்புக் குறைபாடு மட்டுமின்றி, பாஜகவினரால் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் ஆகும். இச்சம்பவம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய தமிழக எம்பிக்கள் உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருக்கிற ஒன்றிய மோடி அரசின் ஜனநாயக விரோத செயலை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 36,000 பெற்றிட போராட மாநாடு உறுதியேற்கிறது.

முப்பெரும் குற்றவியல் சட்டங்களை மக்களுக்கு விரோதமாகவும் இந்தியில் பெயரிட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மாநாடு உறுதிப்பட கூறுகிறது. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும் என மாநாடு கோரிக்கை விடுக்கிறது.

ரயில்வே பணிமனை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பாரத மிகுமின் நிலையம் ஆகிய மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழர் களுக்கே வழங்கப்பட வேண்டும் என மாநாடு கோருகிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.