தலையங்கம்:நீரோ மன்னனின் பிடிலும் நவீன நீரோ மன்னரின் செங்கோலும்

'தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விசயங்களுக்காகப் போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்'. டெல்லி சென்று மோடியிடம் செங்கோலைக் கொடுத்துவிட்டு வந்த பின்னர் மதுரை ஆதினம் பேசியது இது. மோடி-அமித்ஷா எதிர்பார்த்தது இதைத்தான். இந்த மட அதிபதிகளுக்கு நிதிப் பங்கீடு, கல்வி உரிமையெல்லாம் எதற்கும் உதவாத ஒன்றாம். ஊரை அடித்து உலையில் போட்டு என்பார்களே, அப்படி உட்கார்ந்து தின்னும் இவர்களுக்கு மக்கள் படும்பாடு எப்படி கண்ணுக்குத் தெரியும்.

தலையங்கம்:மோடியின் வெத்துவேட்டு மேளாக்கள்

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மெகா மேளாக்களைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பிரதமருக்கு இருக்கக் கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு 'சாலைக் காட்சிகளை' (Road Shows) நடத்தினார். கர்நாடகத்தில் இருந்த பூக்களையெல்லாம் தன் மீது அள்ளி வீசச் சொல்லி ஷோ காட்டினார். ஆனால், அந்த ஷோவுக்கெல்லாம் கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டுள்ளார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததும் எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, ஏழைகளுக்கும் வங்கிக் கணக்கு என்று சொல்லி காசில்லாமல் வங்கிக் கணக்கை துவக்கச் சொன்னார். அதில் நான் பணம் போடுவேன் என்றார்.

தலையங்கம்

ஏப்ரல் 15 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்க, பிரயாக்ராஜ் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் அகமது இருவரும் தண்டனைக் கைதிகளாக போலீஸார் புடை சூழ கையில் விலங்குடன் அழைத்துச் செல்லப்படும்போது, அவர்களுக்கு மிக அருகில் வந்து சங் பரிவார் குண்டர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்களைக் கொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார்கள். அவர்கள் இருவரும் இறக்கும் வரை சுடுகிறார்கள். அதை போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலையங்கம்:ராமர் பெயரால் சங்கிகளின் அட்டூழியங்கள்

தேர்தல் வந்தாலே பாஜக-சங்கிகளின் அட்டூழியங்கள் அதிகமாகத் தொடங்கிவிடும். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இஸ்லாமிய ஓட்டுநரை பசுவைக் கடத்தினார் என்று பசுப் பாச பாஜக குண்டர்கள் அடித்தே கொன்றுவிட்டார்கள். கடந்த ஆண்டு ராம நவமியின் போது சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழுமிடங்கள், பள்ளிவாசல்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று, கலவரங்கள் செய்து காவிக் கொடியை பள்ளிவாசல்களில் கட்டினார்கள். வாளை ஏந்திக் கொண்டு, இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களைக் கத்திக் கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். அனுமன் ஜெயந்தியின் போதும் இதுபோன்ற கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது சங்கிகள் கூட்டம்.

தலையங்கம்:அனிதாவும் ஆன்லைன் ரம்மியும்

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதாவின் பெயரைச் சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அனிதா இன்னும் நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டாரோ அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. அது கண்டு கொள்ளப்படாமல் இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமியற்றப்பட்டு ஆளுநர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்:பொய்ப் பிரச்சாரகர்களும் பசுக் குண்டர்களும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அடுத்த அவதூறுப் பிரச்சார ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். இப்போது அவர் கார்ல் மார்க்ஸை நேரடியாகக் குறி வைத்துவிட்டார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்துவிட்டது என்கிறார். கூடவே டார்வினையும் வம்புக்கிழுக்கிறார். 'இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்கைத் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று கூறி மானுட குலம் தழைத்தோங்க வறுமையில் வாடிய மாமேதை கார்ல் மார்க்ஸ். அவரைப்பற்றி ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் ராஜ் பவனில், மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆர்.என்.ரவி பேசுகிறார்!.

தலையங்கம்

வேங்கை வயலில் குடி தண்ணீரில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாறாக, எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கிறது. வேங்கை வயல் பிரச்சினை வெளியில் வந்தபோது அங்குள்ள கோயிலுக்குள் தலித் மக்கள் செல்வதற்கு மறுக்கப்பட்ட விசயமும் வெளியே வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அந்த மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது அதைத் தடுக்க சாமியாடினார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டார்.

தலையங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக, கடந்த 2022 நவம்பர் 25-27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் தோழர் என்.கே.நடராஜன். நீலகண்ட நடராஜன் என்பதைச் சுருக்கி என்.கே.நடராஜன் என்று வைத்துக் கொண்டார். எல்லாருக்கும் அவர் என்கே. அவருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் சண்முகராஜ். 2019ல் இகக(மாலெ) தமிழ்நாடு கட்சி சந்தித்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற தோழர் என்.கே. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார்.