கர்நாடக முதலமைச்சரை சந்தித்து ஏஐசிசிடியு குழு முன்வைத்த தொழிலாளர்களின் கோரிக்கைகள்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை ஜூன் 1, 2023 அன்று, ஏஐசிசிடியு அகில இந்திய செயலாளர் தோழர் கிளிஃப்டன் தலைமையில் சந்தித்த ஏஐசிசிடியு பிரதிநிதிகள் குழு முன் வைத்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை களாவன:

கடந்த டிசம்பர், 2021 முதல் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உரிமைகளுக்காக போராடிவரும் 80 தொழிலா ளர்கள் மீண்டும் பணிக்கமர்த்தப்பட வேண்டும். இது சம்பந்தமான உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும்.

அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் (இணைப்பு ஏஐசிசிடியு)

4ஆவது அகில இந்திய மாநாடு

2023 ஜூலை 8-9

தோழர் என். கே. நடராஜன் நகர்

தோழர் ஹரி சிங் ஜாபர் நினைவரங்கம் தோழர் ஓம் பிரகாஷ் சர்மா தோழர் பொன்ராஜ் நினைவு மேடை -

(புனித பீட்டர் மையம் - சர்ச்)

சி.எஸ்.ஐ சர்ச் ரோடு

கன்னியாகுமரி

கௌரவமான ஊதியம், தொடர்ச்சியான வேலை, சமூக பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்க்கைக்காக போராடுவோம்!

நலவாரியம் நம்முடையது! அது அரசாங்கம் கொள்ளையடிப்பதற்கான கருவி அல்ல!

நமது கடினப்பட்ட போராட்டத்தின் விளைவாக பெற்ற நல வாரிய உரிமையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்! 

ஏஐசிசிடியு முயற்சியால் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, அம்பாசமுத்திரம் கிராமத்தில் மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பேர் 7 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தமிழ்நாடு சிபிஐ(எம்எல்) தோழர்களுக்குக் கிடைத்தது. அந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிரா வின் பீட் மற்றும் பார்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை அண்ணா கோத்வே என்கிற ஒப்பந்தக்காரர்தான் அடிமைகளாக வைத்திருந்துள்ளார். அவர் சரத்பவாரின் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்.

ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு - பயிற்சிப் பட்டறை

தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் முறியடித்த பின்னணியில் மே 7,8-2023 இரு நாட்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு கூட்டமும் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர்கள் இரணியப்பன், கோவை பாலசுப் பிரமணியன், கரூர் பால்ராஜ், சேலம் வேல் முருகன் ஆகியோர் கொண்ட குழு தலைமை தாங்கி நடத்தியது. நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 100ஆவது மே நாள்

தோழர் சிங்காரவேலரால் 1923 மே 1 அன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. 2023 மே 1 இந்தியாவின் 100ஆவது மே நாள். இந்த மே நாளில் கார்ப்பரேட் ஆதரவு காவிப் பாசிசத்தை இந்தியாவை விட்டே வெளியேற்றும் இலட்சியத் தோடு இகக(மாலெ), ஏஐசிசிடியு சார்பாகமே 1 அன்று நாடெங்கும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடியேற்றுதல், உறுதியேற்புக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மே 1 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றன.

டாஸ்மாக் தொழிலாளர்கள் வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை பணி வரன்முறை காலமுறை ஊதியம் கிடையாது. அவர்கள் வாங்கும் தொகுப் பூதியத்தில் உயர்வு அளித்தாலும் கூட அவர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் சொற்பமே. மேற்பார்வையாளர் ரூ.13,750ம், விற்பனையாளர் ரூ.11,600ம், உதவி விற்பனையாளர் ரூ.11,500ம் தான் பெற்றுவருகின்றனர். சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, மிகை நேர ஊதியம் போன்ற எதுவும் கிடையாது.

மே நாள் அறைகூவல் 2023 இந்திய மே நாள் நூறாண்டு நிறைவு!

இந்தியாவிலேயே முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது சென்னை மெரீனா கடற்கரையில்தான். மே 1, 1923 அன்று, தோழர் சிங்காரவேலரால் சென்னையில் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. அதே போல, சென்னையில்தான் முதல் தொழிற்சங்கமும் தோழர் சிங்காரவேலரால் துவக்கப்பட்டது. 2023ல் இந்திய தொழிலாளர் வர்க்கம் அனுசரிக்கும் மே முதல் நாள், மே நாள் கொண்டாட்டத்தின், மே நாள் சூளுரையின் ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதாகும்.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏஐசிசிடியு

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப்  பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.