நாட்டின் தென்கோடியிலுள்ள கன்னியா குமரியில் 2023 ஜூலை 8-9 தேதிகளில் இந்தியா முழுவதுமிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்ட மாநாடாக, அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் 4வது தேசிய மாநாடு அமைந்தது. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், கார்பி, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு என இந்தியா முழுவதுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். ஜூலை 8 துவக்க நாளில் மாநாட்டு அரங்க நுழைவு வாயிலில் AICWF கொடியை தேசியத் தலைவர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன் ஏற்றி வைத்தார்.