தலித்துகள் மீது முடிவின்றித் தொடரும் வன்கொடுமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில், தலித்துகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்குச் சில....

புதுக்கோட்டை வேங்கைவயல்

2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் சாதியாதிக்க சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயற்சிக்கப் பட்டது. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. 

தோழர் என்கேவின் புரட்சிகர வாழ்க்கை மரபை முன்னெடுத்துச் செல்வோம்; பாசிச எதிர்ப்பு புரட்சிகர அரசியல் சக்தியாக இகக(மாலெ)வை வலுப்படுத்த உறுதியேற்போம்!

"மக்கள் நலனே கட்சியின் நலன்” என்ற மாபெரும் புரட்சிகர மரபை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர் தோழர் என் கே.நடராசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)ன் தலைமறைவு புரட்சிகர ஊழியராக, கிராமப்புர ஆதிக்க நிலவுடமை சக்திகளுக்கு எதிரான அச்சமற்ற போராளியாக, பெருமுதலாளித்துவ தொழிலாளர் விரோத ஈவிரக்கமற்ற அடக்குமுறைக்கு சற்றும் அஞ்சாத தொழிலாளர் தலைவராக, புரட்சிகர சமூக மறுமலர்ச்சியின் உந்துவிசையான இக்க(மாலெ) வின் மாநிலச் செயலாளராக கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக,தளராத புரட்சிகர பயணத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் என் கே. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: இகக(மாலெ) கடும் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகமான 'பாலன் இல்லம்' மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் என்று குற்றச்சாட்டு பற்றி ஆளுநரும் அண்ணாமலையும் எழுப்பும் கூக்குரலுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

விசிக முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் மறைவுக்கு இகக(மாலெ) ஆழ்ந்த இரங்கல்!

இளம் வயதிலேயே புரட்சிகர கருத்துகளில் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்ட விசிக முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மார்க்சிய- லெனினிய சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட தோழர் உஞ்சை அரசன், மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் ஊக்கமிக்க செயல்வீரராகவும் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களப்போராளியாகவும் செயல்பட்டவர். மார்க்ஸ் - அம்பேத்கர்-பெரியார் சிந்தனை வழியில் தலித் விடுதலை, சமூகநீதி, சாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

அரைகுறையான, கைவிடப்பட்ட சிங்கூர் திட்டத்திற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு என்பது மேற்கு வங்க மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதி

சிங்கூரில் அரைகுறையான, கைவிடப்பட்ட நானோ தொழிற்சாலைத் திட்டத்திற்காக இழப்பீடு கோரிய வழக்கில், செப்டம்பர் 1, 2016 முதல் மீட்புக் காலம் வரை ஆண்டுக்கு 11% வட்டியுடன் ரூ. 765.68 கோடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்க மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பணத்தை மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகம் (WBIDC) கொடுக்க வேண்டும்.

காசாவில் இனப்படுகொலை: யுத்தத்தை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்!

இஸ்ரேல் மீது, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் ராணுவ தாக்குதல், இஸ்ரேலிய உளவுத்துறை, அதன் பாதுகாப்பு கட்டமைப்புகள் பற்றி சொல்லப்பட்டிருந்த கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தி விட்டது. சமீபத்திய இஸ்ரேலின் வரலாற்றில் அதிகமான உயிர் சேதங்களை இத்தாக்குதல் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சமூகம் ஹமாஸின் தாக்குதலையும் அதன் கொடூர தன்மையையும் கண்டிக்கும் போது, காசா மக்கள் மீது இனப்படுகொலை யுத்தத்தை நடத்த இஸ்ரேல் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

தோழர் அப்பு ஆரம்பித்த தீக்கதிர் பத்திரிகையின் 5வது - நெல்லை பதிப்பு துவக்க நிகழ்ச்சியில் தோழர் அப்புவின் இகக(மாலெ) தோழர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிர் பத்திரிகையின் 5ம் பதிப்பு 22.9.2023 அன்று நெல்லையில் துவங்கப்பட்டது. நெல்லை பதிப்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், இகக(மாலெ) மாநில நிலைக்குழு உறுப்பினரும் தீப்பொறி ஆசிரியருமான தோழர் ஜி.ரமேஷ் மற்றும் இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காத்திருப்புப் போராட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம், குறிச்சி கிராமத்தில் சிபிஐஎம்எல் கட்சியின் சார்பாக 25.9.2023 அன்று, வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை சம்பந் தப்பட்ட அதிகாரிகள், தாசில்தார், வருவாய்த் துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் பேச்சு வார்த்தை செய்தனர். 'ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்குகிறோம்" என்று உறுதி அளித்ததன் காரணமாக காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்திற்கு சிபிஐஎம்எல் கட்சி ஊராட்சி செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார்.

நியூஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை - ஊடகச் சுதந்திரம் மற்றும் மாற்றுக் கருத்து குரல்கள் மீதான மோடி- பாஜக ஆட்சியின் தாக்குதலுக்கு கண்டனம்

நியூஸ் கிளிக், தனியார் ஊடகத்தின் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் மீது அக்டோர் 3 அன்று பெரிய அளவில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டிருப்பதானது நாடு மிக மோசமான அவசரநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே பிரதிபலிக்கிறது. மோடி-பாஜக ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு குரல்களையும் மாற்றுக் கருத்துக்களையும் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களையும் மிகக் கொடூரமாக ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.

அரசியல் தலைமைக்குழு சுற்றறிக்கையிலிருந்து...

சாதிய அமைப்பு முறையை, மத வெறியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் அறைகூவலை வைத்துக்கொண்டு வெறித்தனத்தை கிளறிவிடும் முயற்சியை இப்போது அவர்களுடைய திட்டத்தில் புதிய அம்சமாக பார்க்க முடிகிறது. அமைச்சரவை சகாக்கள் இந்த (உதயநிதி ஸ்டாலினின்) அறிவிப்புக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நரேந்திர மோடியே சொல்லும்போது, பாஜக பிரச்சாரகர்கள் இதை இந்துத்துவத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆபத்து என்று விவரிக்கின்றனர்.