இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகமான 'பாலன் இல்லம்' மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் என்று குற்றச்சாட்டு பற்றி ஆளுநரும் அண்ணாமலையும் எழுப்பும் கூக்குரலுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
கட்சி அலுவலகங்கள், முக்கிய இடங்கள் மீது தாக்குதல் என்ற பெயரால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என சச்சரவு, பதட்டத்தை எழுப்ப அமைதி, நல்லிணக்கத்துக்கு எதிரான சக்திகளால் இத்தகைய தாக்குதல்கள் தூண்டிவிடப்படுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்திய இரண்டு தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இந்த தாக்குதல்களுக்கு பின்னுள்ள சக்திகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்திட வேண்டுமென அரசை இகக(மாலெ) மாநிலக் கமிட்டி வலியுறுத்துகிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள், உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.