எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், ஆர்எஸ்எஸ்-பிஜேபியை வீதியின் நின்று போராடி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்

தோழர்களே! இந்த மாநாட்டிலே பேச வாய்ப் பளித்தமைக்காக மக்கள் அதிகாரத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் திபங்கர் அவர்கள் 5 'சி' மூலம் எதிரிகளின் நடவடிக்கை பற்றி மிகத் துல்லியமாக நம் மத்தியில் புரிய வைத் துள்ளார்கள். எதிரிகளிடம் எவ்விதக் குழப்பமும் இல்லை. கார்ப்பரேட்டிடம் எந்தக் குழப்பமும் கிடையாது. காவிப் பாசிசத்திற்கு எந்தக் குழப்பமும் கிடையாது. அதை எதிர்த்துப் போராடுபவர்களிடத்தில் அதற்கு ஏற்ப ஒன்றுமை வர வேண்டும். அதை தமிழகத்தில் ஏற்படுத்துகிற வகையில் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும். வெள்ளிக் கிழமை ராஜினாமா செய்தவர் சனிக்கிழமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

சனாதனப் பாசிசத்தை வெல்வதற்கு போராட்டம் மட்டுமே, புரட்சி மட்டுமே ஒரே வழி

தோழர்களே! சகோதர சகோதரிகளே! பொதுச் செயலாளர் அவர்கள் உரையாற்றி பல்வேறு வரலாற்று செய்திகளையும் இன்றைக்கு இருக்கக் கூடிய நிலைமைகளையும் எடுத்துரைத் திருக்கிறார்கள். பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக நாம் இருந்தாலும் இன்றைக்கு ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய சனாதன பாசிச மோடி அரசை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் இணைந்திருக் கிறோம். அமித்ஷா சிஏஏ எப்படியும் அமல்படுத் தப்படும் என்று கூறுகிறார். மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும்போது நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்தன. முஸ்லீம் இளைஞர்கள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டார்கள். ஊடகங்கள் அப்படியே பரப்பின.

நாட்டின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பாசிச பாஜக ஒன்றிய அரசின் அடியாட்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

தோழர்களே! சிபிஐஎம்எல் கட்சியின் மாநாடு வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் நாட்டின் நிலைமைகளை எல்லாம் தெளிவுபட எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி என்கிற அரசியல் கட்சி ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமாகச் செயல்படுகிறது. அவர்களுக்கு நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கிடையாது. மனுதர்மத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரண்டு கடமைகள் நமக்கு இருக்கிறது, பாசிச பிஜேபியை வீழ்த்துவது என்பது ஒன்று; இடதுசாரி பாதையிலே பயணிக்க வேண்டியது மற்றொன்று

தோழர்களே! சிபிஐஎம்எல் கட்சியின் பொது மாநாடு இன்று வெகு எழுச்சியோடு தொடங்கி யிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு நடக்கவிருக்கிறது. மாநாடு வெற்றிபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிபிஐஎம்எல் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நான் தோழர் நடராஜனிடம் 10ஆவது மாநாடு எங்கே நடந்தது என்று கேட்டேன். அவர் செங்குன்றத்தில் நடந்தது என்று சொன்னார். 11ஆவது மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிற எனக்கே அது நடந்தது தெரியாது. அது எங்களுடைய தவறும் அல்ல. உங்களுடைய தவறும் அல்ல.

சனாதன பாசிசத்தை எதிர்த்து இடதுசாரி, ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகும்

தோழர்களே! இந்த மாநாட்டின் 13 தீர்மானங் களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார வரவேற்று எனது நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு இரண்டு முக்கியமான நோக்கங்களுக்காக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. கூட்டாட்சி முறையை நடைமுறைப் படுத்திட வேண்டும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும். தேவையான ஒரு சூழலில் இந்த கோரிக்கை களை முன்வைத்து ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. சனாதன பாசிசத்தை எதிர்த்து இடதுசாரி, ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது தான் இன்றைய உடனடித் தேவையாகும். நானும் அப்துல் சமது அவர்களும் இடதுசாரிகளுடன் சேர்ந்து அமர்ந்துள்ளோம்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பாஜக ஆர்எஸ்எஸ் காவிப்பாசிசத்தை தனது மதவெறுப்பு அரசியல் நிகழ்ச்சிநிரலை மூர்க்கத் தனமாக திணித்திட, ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கிறது; இந்திய சமூகத்தின் பன்மொழி பண்பாட்டுத் தன்மையை, கூட்டாட்சித் முறையை ஒழித்துக் கட்டி, சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது. பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைத்து வருகிறது. மாநில உரிமைகளை பறித்து வருகிறது. ஒற்றை ஆட்சிமுறைக்கு எதிராக, கூட்டாட்சி முறைக்காகவும்!

நூற்று முப்பது கோடி மக்களின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் பாசிச ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னால், இந்த ஆட்சி முடிவுக்கு வரும்

தோழர்களே!

நாம் பதினோராவது கட்சிக் காங்கிரசை நோக்கிய தயாரிப்பில் இருக்கும்போது தமிழ் நாட்டில் 11ஆவது மாநில மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். 11வது கட்சி காங்கிரஸ் வரும் பிப்ரவரியில் பாட்னாவில் நடக்க விருக்கிறது.

இகக(மாலெ) 11ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அஞ்சலி தீர்மானம்!

மார்க்சிய-லெனினிய- மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து இந்திய கம்யூனிச இயக்கத்தில் புரட்சிகர கம்யூனிச இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டை) தோற்றுவித்த தோழர்கள் சாரு மஜும்தார், நாக பூஷண், சரோஜ் தத்தா உள்ளிட்ட தலைவர்களுக்கும் இகக(மாலெ) தோற்றத்துக்கு முன்னோட்டமாக திகழ்ந்த நக்சல்பாரி தியாகிகளுக்கும் வெள்ளை அரச பயங்கரவாத ஒடுக்குமுறையால் களப்பலியான எண்ணிலடங்கா தியாகிகளுக்கும் சாம்பல் மேட்டிலிருந்து மாலெ-வை மீண்டும் கட்டி எழுப்பி ஒரு அகில இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக நிறுவிய தோழர்கள் ஜாகர், வினோத் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் நாட்டுப்புர, நகர்ப்ப

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையிலிருந்த ஆறு பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற உத்தரவை சிபிஐஎம்எல் வரவேற்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறுபேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 17ல் இதே வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்த பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, அதே அடிப்படையில் ஆறு பேர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.