சத்தியம் என்றால் காந்தி; நீதி என்றால் கோட்சே!

கடந்த 8 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியரான இவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டார். 90% மாற்றுத் திறனாளி இவர். சக்கர நாற்காலி இல்லாமல் இவரால் நகர முடியாது. தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் அவர் அடுத்தவர்களை நம்பித்தான் இருக்க வேண்டும். சிறையில் இவருக்கு குளிர் தாங்குவதற்கான போர்வை கூட கொடுக்கப்படாமல் விரைவில் நான் செத்துவிடுவேன் என்று தன் இணையருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

இன்றைய காலகட்டத்தில் இந்திய, சர்வதேச சூழல்

இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையான பாசிச தாக்குதலின் மெய்யான, வளர்ந்து வரும் ஆபத்தை எதிர்கொள்கிறது என மேலும் மேலும் அதிக இந்திய மக்களும் உலகம் முழுவதிலுமுள்ள இந்திய அரசியல் நிகழ்வுகளை கரிசனத்துடன் கவனிப்பவர்களும் அதிகரித்த அளவில் ஏற்றுக் கொள்கிறார்கள். பாசிசம் என்னும் சொல்லை அவர்கள் அனைவரும் பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். பல்வேறு எழுத்தாளர்களும், தற்போதைய இந்திய சூழலை விவரிக்க வலதுசாரி பரப்பியம் (ஜனரஞ்சகவாதம்), அதிகாரத்துவம், தேர்தல் எதேச்சதிகாரம், பேரின ஜனநாயகம் இன்னும் இதுபோன்ற சொற்களை விரும்புகின்றனர்.

மோடி-அதானி இரட்டையர்கள் நடனம்:

நரேந்திர மோடியின் 72 ஆவது பிறந்த நாளுக்கு முந்தைய நாள் செப்டம்பர் 16 அன்று, அவரின் நெருங்கிய முதலாளித்துவ நண்பர் கௌதம் அதானி போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் பட்டியல் படி உலகத்தில் மூன்றாவது பணக்கார நிலைக்கு தள்ளப்படுவதற்கு சற்று முன்பு உலகில் இரண்டாவது பணக்காரராக சொற்ப காலம் இருந்தார். அவர் 152.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இருக்கும்போது அவருடைய நெருக்கமான உலகளாவிய போட்டியாளர்களாக பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர் பெர்னார்டு அர்னால்ட்டும் அமெரிக்க தொழில் முனைவோரும் அமேசான் இணைய வணிக தளத்தின் நிறுவனருமான அமேசான் ஜெப் பேசோஸ்ம் இருக்கின்றனர்.

தலையங்கம்

அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் அன்று ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. சென்னை உயர்நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட்டது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதி கோரியது. அது அனுமதி கோரிய நாள்தான் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே அக்டோபர் 2 அன்றுதான் காந்தியைக் கொன்றார். அந்த அக்டோபர் 2ஐ திட்டமிட்டு காந்தியை சிறுமைப்படுத்தும் வகையில் அந்த நாளைத் தேர்வு செய்துள்ளார்கள்.

மத்திய கமிட்டி கூட்ட தீர்மானங்கள்

2022 ஆகஸ்ட் 25 முதல் 27, வரை இகக (மாலெ) யின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் விஜயவாடாவில் உள்ள எம்.பி. விஞ்ஞான கேந்திரத்தில் நடை பெற்றது. கூட்டம் தியாகிகளான தோழர்களுக்கும் மறைந்த தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தி துவங்கியது.

ஆட்சியிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பாஜகவை அகற்றுவதே நமது இலக்கு

பாட்னா மாவட்ட 12வது மாநாட்டை யொட்டி புல்வாரி சரிப் என்ற இடத்தில் 2022 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற குடிமக்கள் கருத்தரங்கில் பேசிய இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், பாஜக போன்ற பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, சமூகத்திலிருந்தே அகற்றிட வேண்டும் என்றார். பீகார் காட்டிய பாதையின் வழிசென்று, 2024ல் பாஜக அபாயத்தில் இருந்து நாட்டை நாம் கண்டிப்பாக விடுவிக்க முடியும்.

பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியாக இகக(மாலெ)வை வலுப்படுத்திட"மாநாடு உறுதி ஏற்கிறது!

கள்ளக்குரிச்சி 4வது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 20, 2022 அன்று கெடிலத்திலுள்ள தோழர் சம்மனசு மேரி அரங்கின் முன் கட்சிக் கொடியை மாநிலச் செயலாளர் என் கே ஏற்றி வைக்க தியாகிகள் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி தொடங்கியது. தோழர்கள் ஜெயந்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட தலைமைக்குழு தோழர்கள் மாநாட்டை வழி நடத்தினர்.

250 கட்சி உறுப்பினர்கள், 26 கட்சிக் கிளைகள், 7 உள்ளூர் கமிட்டிகள், 3200 வெகு மக்கள் உறுப்பினர்கள், உறுப்பினர் கட்டணம் முழுவதும் செலுத்தியது உள்ளிட்ட தகுதிகளை சரிபார்த்த மாநிலக் கமிட்டி பார்வையாளர் தோழர் ஜி. தனவேல் மாநாட்டை தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.