கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!
     மதிவாணன்

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.