தலையங்கம்

எட்டு வழிச்சாலைக் கொண்டு வரவிடமாட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அமைச்சர் எ.வ.வேலு, எல்லார் வீட்டிலும் கார் இருக்கிறது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் கார் வைத்துள்ளார்கள், வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சாலைகள் விரிவுபடுத்தத்தான் வேண்டும், அதைச் செய்யும் போது நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஒரு கார் அல்ல மூன்று கார்கள் கூட வைத்திருக்கலாம். அவர் தலைவர் வீட்டில் அதைவிடக் கூடுதலாகக் கூட வைத்திருக்கலாம்.

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 'இது பாடம் படிப்பதில் ஏற்பட்ட மன உளைச்சலால் நடந்த தற்கொலைதான்' என வழக்கு விசாரணை முடியுமுன்பே தீர்ப்பு எழுதியுள்ளார்.

மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்ற ஒன்றிணைவோம்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 6-9 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 அன்று, “சமூக நல்லிணக்கத்தைக் காப்போம், மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஅய்(எம்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சி மாநாடு

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.

செப்டம்பர் 22, 2022 CPIML கள்ளக்குறிச்சி மாவட்ட கமிட்டி முடிவுகள்!

2022, செப்டம்பர் 22, அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கள்ளக்குரிச்சி மாவட்டக் கமிட்டி கூட்டம்(2) கெடிலத்தில் நடைபெற்றது. மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும்  கலந்துகொண்டனர். அஞ்சலி கூட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் மறைந்த தோழர் பி. சீனிவாசராவ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள், இந்த மாதத்தில் தியாகிகளான தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர், சுப்பு, பாலன் உள்ளிட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர்கள், தேச விடுதலை இயக்கப் போராளிகள் உள்ளிட்டோரும் மற்றும் பலரும் நினைவு கூரப்பட்டனர்.

செப்டம்பர் 15, 2022 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் AICCTU ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 15, 2022 ஆம்பூர் வாணியம்பாடி புளோரின் யுனிஸ்கோ தொழிலார்களின் வாழ்வாதரத்திற்கு நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தோழர் சுகுந்தன் தலைமையில், தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதிஸ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AICCTU மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன், மாநில செயலாளர்கள் திருநாவுக்கரசு, U.அதியமான், AIPWA மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி மற்றும் CPIML மாநில செயலாளர் NK நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரையாற்றினர்.