சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள்

"காஸா இல்லாமல் பெண்ணிய போராட்டம் இல்லை! காஸா இல்லாமல் எதிர்காலம் இல்லை" என்ற முழக்கத்துடன் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதி ஏற்று சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள் 2024 தொடங்கியது. காஸாவில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பேர்களுள் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே செய்யும். முகாம்களில் உணவுப் பொருள் வழங்க பெரிய ட்ரக்குகள் வருகின்றன. பட்டினியால் தவிக்கும் மக்கள் அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.

தமிழகத்தில் தொடரும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்-படுகொடுலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் அதுவும் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல பட்டியலின மக்கள் படுகொடுலை செய்யப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை, மதுரை மாவட்டம் பெருங்குடி என தொடர்கிறது. நெல்லை மாநகரம், மணிமூர்த்தீஸ் வரத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மீது சிறு நீர் கழித்து அவமானப்படுத்தினார்கள் சாதியாதிக்க வெறியர்கள்.

வாச்சாத்தி பழங்குடியினர் மீதான வன்கொடுமையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய ஆளுங்கட்சி கொள்ளையர் களைக் காப்பாற்ற, அப்பாவி பழங்குடியினர் பலிகடாக்கள் ஆக்கப்பட்ட, படுமோசமான வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளான கொடூரமான சம்பவம் தான் வாச்சாத்தி வன்முறை' என்பதாகும். அது பழங்குடியினப் பெண்கள், சிறுமியர் மீது பாலியியல் கூட்டுப் பலாத்கார வன்முறையை நடத்திய வனத்துறை, காவல்துறை சார் குற்றவாளிகளின் ஆணாதிக்க வெறியாட்டத்தின் சாட்சியமும் ஆகும்.

வாச்சாத்தி வன்முறை, நீதிக்கான போராட்டம் : கடந்து வந்த பாதை :

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் சென்னை ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. நவதாரளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்த அரசும் தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகளின் போராட்டத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். நன்கு கட்டமைக்கப் பட்டத் தொழிற்சங்கங்களை கொண்டிருக்கிற ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்துக்கு மீண்டும் மீண்டும் வருகின்றனர்.

இந்தியாவைக் காக்க ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களுக்கும் மற்றுமுள்ள தலைவர் களுக்கும் மாநாட்டு பிரதிநிதிகளுக்கும் அனைத் திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் வணக்கத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களின் உரிமையை முடக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் முகம்மது யூசுப் மற்றும் முகம்மது அப்பாஸ் இருவரும் தேசிய புலனாய்வு முகமை(NIA)யால் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜரானார்கள் என்பதற்காக அவர்களையும் குற்றவாளிகள் ஆக்கி கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. இது வழக்கறிஞர்களின் உரிமையை மட்டுமின்றி வழக்கறிஞர்கள் தொழிலையே முடக்கும் செயல் ஆகும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும் அச்சட்டத்தின் படி குற்றவாளிகள் என்கிற சரத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மிகவும் மோசமான சரத்தாகும்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பஹல்வான்!

நமது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியை உறுதி செய்வதற்காக நமது முழு நாட்டையும் ஜந்தர் மந்தராக மாற்றுவதற்கான நேரம் இது !

மதுச்சேரியை மக்கள் புதுச்சேரியாக மாற்றப் போராடுவோம்!

பாஜகவின் பாசிச ஆட்சியில் மாநில ஆளுநர்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், பல போராட்டங்களுக்குப் பின்னால், தற்போது தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் ஆளுநர்களால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.