குஜராத் இனப்படுகொலை: உண்மை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது.

டிசம்பரின் செய்திகள்: நாட்களும் நடப்புகளும்!

டிசம்பர், 2022க்கு பிரியாவிடை கொடுக்கும் மாதம். 2023அய் கைகொடுத்து வரவேற்கும் மாதம். டிசம்பருக்குள் நுழைவோம்.

டிசம்பர் 1: "மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப் போல அவனப்போல

அச்சம், பொய்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

உலகளாவிய கோவிட்19 பெருந்தொற்றின் கொடூரப் பரவல் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும், அதன் இடையூறு மிகுந்த பின்விளைவுக ளிலிருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டி யுள்ளது. வேறு எங்கேயும் உள்ளதை விடவும் இந்த பெருந்தொற்று உருவாகிய சீனா, அதன் தீவிரப்பரவலின் பின்னதிர்வுகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு உள்ளது. மேலும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது என்னும் பெயரில் நடந்து வரும் அடக்குமுறை அரசின் தலையீடுகளுக்கு எதிரான, மிகப் பரவலான சமூகப் போராட்டங்களையும் கூட கண்டது.

துன்புறுத்திய பார்ப்பனீயத்தை தூக்கிச்சுமப்பவர்கள்

சூழ்ச்சிமிக்க, கொடூரமான, மாந்தநேயமற்ற அமைப்பான சாதி பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் பரிணமிக்கிறது. அண்டாமை, தீண்டாமை, காணாமை என்பவை நாடெங்கும் நடக்கும் எல்லோரும் அறிந்த இழி நடவடிக்கைகள். தாழ்த்தப் பட்ட மக்களை அருகே வராதே, நெருங்காதே, உன் நிழல்கூட எங்கள்மீது பட்டுவிடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கிறார்கள் ஆதிக்கச்சாதியினர். “எதிரே வராதே, எங்கள் தெருவுக்குள் நுழையாதே" என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து காலுக்குள் போட்டு மிதிக்கின்றனர். "நாங்களும் உங்களைத் தொட முடியாது, நீங்களும் எங்களை அணுகக்கூடாது” என்று தீண்டாமையை வாழ்க்கை முறையாக்கி வைத்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை அறிக்கையே மனுஸ்மிருதி!

(விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிட்ட “மனுஸ்மிருதி பெண்கள்-சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது? என்ற புத்தகத்திற்கு விசிக நிறுவனர்-தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய முன்னுரை)

இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!

கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4000 தொழி லாளர்கள் பணி புரிகிறார்கள். கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்தும்கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தமுறையிலேயே தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.333 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வும் வழங்கப் படவில்லை. கொரோனா பொது முடக்க காலத்தில் தங்களின் உயிரைப் பொருட்படுத் தாமல் பணி புரிந்த முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை எதுவும் கொடுக்கப் படவேயில்லை.

சமூக நீதி பேசும் ஆட்சியில் சாதியாதிக்கமும் பெண்ணடிமையும் தலைவிரித்தாடுகிறது!

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் சாதிய வன்மத்துடன் அங்கிருந்த கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு பொருள்கள் கொடுக்க மறுத்ததன் காரணமாக பிரச்சனை எழுந்து, போராட்டங்கள் நடத்திய பின்னர் சாதி ஆதிக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் ஆறு மாத காலத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தால். அதே தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் என்ற ஊரில் உள்ள 7ம் வகுப்பு படித்து வந்த சீனு என்கிற அருந்ததியர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தலித்துகள் புத்தமதத்திற்கு மாறுவது கண்டு சங்கிப் படைகள் அஞ்சுவதேன்?

1956, அக்டோபர் 14 அன்று, பாபாசாகேப் அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களுடன் புத்தமதத்தை தழுவினார். அந்த ஊர் நாக்பூர், அந்த இடம் தீக்ஷாபூமி(மதம் மாறிய மண்) என்று அழைக்கப்படுகிறது, அந்த இடத்தில், டிசம்பர் 18, 2001 அன்று அப்போதைய ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களால் ஒரு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அது, நாக்பூரிலுள்ள ஒரு பாரம்பரிய கலாச்சார மய்யமாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அசோகா விஜய தசமியான இந்த நாள், பேரரசர் அசோகர் கலிங்கப் போரால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு மனம் மாறி வன்முறையை துறந்து புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிற நாளை, ஆண்டு தோறும் நினைவுகூரும் நாளாகும்.

இந்தியாவின் நீதித்துறை ஒரு 'நிர்வாக நீதிமன்றமாக' சுருக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்!

செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.