கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4000 தொழி லாளர்கள் பணி புரிகிறார்கள். கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்தும்கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தமுறையிலேயே தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.333 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வும் வழங்கப் படவில்லை. கொரோனா பொது முடக்க காலத்தில் தங்களின் உயிரைப் பொருட்படுத் தாமல் பணி புரிந்த முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை எதுவும் கொடுக்கப் படவேயில்லை.

பணி நிரந்தரம் கோரி கர்நாடகா சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிகரமான வேலை நிறுத்தம்

கர்நாடகா முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு பணிகளை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், மாநிலத்தில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.