கர்நாடகா முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு பணிகளை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், மாநிலத்தில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். 31 மாவட்டங்களில் நான்கு நாட்கள் நீண்ட வேலை நிறுத்தத்திற்கு பிறகு துப்புரவாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், உதவியாளர்கள், சுமை தூக்குபவர்கள், நேரடியாக சம்பளம் வழங்கும் முறையின் கீழ் பணியாற்றிய நிலத்தடி வடிகால் (யூஜிடி) திட்டப் பணியாளர் கள், மறைமுக ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலிகள், போன்றவர்களோடு மற்ற செயற்கையாக வேறுபடுத்தப்பட்ட தொழிலா ளர்கள் ஆகிய அனைவரும் நிரந்தரமாக்கப் படுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் அவர்க ளுடைய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இந்த நான்கு நாட்களும் குப்பைகளை சேகரிக்கவோ அல்லது அப்புறப்படுத்தவோமறுத்துவிட்டனர். இதன் காரணமாக அவர்க ளிடம் மாநில அரசாங்கம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களின், அவர்களுடைய சங்கங்களின் ஒற்றுமை தான் இந்த வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
பெருநகர பெங்களூரு மாநகராட்சியின் (பிபிஎம்ப்பி) சுகாதாரப் பணியாளர்கள் சங்கம், கர்நாடகா முற்போக்கு சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் (இரண்டுமே ஏஐசிசிடியூ உடன் இணைக்கப்பட்டது) மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள வேறு பல சுகாதாரப் பணியாளர்களின் சங்கங்களும் ஒன்றிணைந்து, பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு, ஜூலை ஒன்றிலிருந்து இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அவர்களுடைய கௌரவத்திற்காகவும் உரிமை களுக்காகவும் பத்தாண்டுகளின் பணிக் காலம் முழுவதும் விட்டுக் கொடுக்காமல் போராடிய தொழிலாளர்கள், கோவிட் 19 இன் போது பொதுமக்களின் உயிர்காக்க தங்களின் உயிரைப் பணயம் வைத்த தொழிலாளர்கள் இன்று கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த வர்கள். மேலும் மிக முக்கியமாக பெண்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க தாகும்.
"இதுவொரு கனவு நனவானதைப் போன்ற தாகும். எங்களுடைய சம்பளம் மாதம் ரூ.400 ஆக இருந்ததிலிருந்து நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இன்று எங்களது சங்கம் இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் பெண்களை சங்கமாக்கிய எங்களது விடாப்பிடியான முயற்சி தான்" என பெருநகர பெங்களூரு மாநகராட்சியின் (பிபிஎம்ப்பி) சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். ரத்னம்மா கூறினார்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் முதலமைச்சருடைய வீட்டின் முன்பு சாலைகளை சுத்தம் செய்வதை அவர் பார்த்திருக்கிறார் என சங்கத்தின் துணைத் தலைவர் கங்கம்மா கூறினார். "ஆனால் எங்களுடைய மாபெரும் கூட்டு முயற்சி தான் நாங்கள் இருப்பதை அவர் காண வழியேற்படுத்தியது. மேலும் நாங்கள் எங்க ளுடைய உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்" என்று மேலும் கூறினார்.
ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்ட, 2017 இல் இந்தத் தொழிலாளர்கள் இதே போன்றதொரு போராட்டத்தை நடத்திய போது, காங்கிரசால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட அப்போதைய மாநில அரசாங்கம் நேரடியாக சம்பளம் வழங்கும் முறையின் கீழ், சாலைகளை சுத்தம் செய்பவர் களை மட்டுமே கொண்டு வந்தது. ஆனால், குப்பைகளை சேகரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்களும் அதனை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்பவர்களும் சட்டவிரோத ஒப்பந்த முறையின் கீழ் தொடர்ந்து சுரண்டப்பட்டனர். அப்போதிருந்து இந்தத் தொழிலாளர்கள் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். ஆக, அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சம்பளப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புடன் நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கும் மற்ற பலன்களும் இந்த வெற்றியின் மூலம் கிடைக்கும்.
ஜூலை 4, 2022 திங்கள் அன்று, தொழிலா ளர்களின் கோரிக்கைகளை கர்நாடகா அரசாங்கம் இறுதியில் ஏற்றுக்கொண்டது. மேலும், சுகாதாரப் பணியாளர்களின் சங்கப் பிரதிநிதி களும் இடம்
பெறக்கூடிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அவர்களின் பணி நியமனத்திற் கான விதிகளை அது உருவாக்கும். அதன்படி, அவர்களுடைய பணிகள் நிரந்தரமாக்கப்படும். மேலும், தொழிலாளர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்குவதை உறுதி செய்யும். இந்தக் கமிட்டியினுடைய பரிந்துரைகள் அமல்படுத்தப் படுவதற்காக சட்டப் பேரவை வர இருக்கும் தனது கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டத்தை முன்வைக்கும். மறைமுக ஒப்பந்த முறையில் கீழ் தொடர்ந்து சுரண்டப்படும், பெருநகர பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்ப்பி) யின் தொழிலாளர்கள் தவிர, கர்நாடகாவின் மற்ற அனைத்து மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், உதவியாளர்கள், சுமை தூக்குபவர்கள் அனை வரும் நேரடி சம்பளம் வழங்கும் திட்டத்தின் கீழ் படிப்படியாகக் கொண்டுவரப் படுவார்கள். நமது சங்கமான ஏஐசிசிடியு இந்த சட்டவிரோத ஒப்பந்த முறையினால் தொழிலாளர்கள் சுரண்டப்படு வதற்கு எதிராக தொடர்ந்து போராடும். மேலும், அனைத்து தொழிலாளர்க ளுக்கும் அவர்களுக் குரிய உரிமைகளும் கௌரவமும் கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்.
மக்கள்தொகைக்கு இணையாக இருக்க வேண்டிய சுகாதாரப் பணியாளர்களின் விகிதம் (500:1), சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைக ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, அவர்களுக்கான குடியிருப்பு திட்டத்தை அமல்படுத்துவது, மகப்பேறுகால பலன்கள், பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய மற்ற பல பலன்கள் குறித்த ஐப்பிடி சாலப்பாவின் அறிக்கையை அரசாங்கம் அமல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சிறந்த வேலை நிலைமைகள், சுகாதாரப் பணியாளர்க ளின் வேலைக்கான கௌரவம் ஆகியவற்றுக்காக பெருநகர பெங்களூரு மாநகராட்சியின் (பிபிஎம்ப்பி) சுகாதார பணியாளர்கள் சங்கமும் கர்நாடகா முற்போக்கு சுகாதாரப் பணியாளர்கள் சங்கமும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. சாதிய ஒடுக்குமுறை, பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், கௌரவம், சமத்துவம், நீதிக்காக தொடர்ந்து போராடுவார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)