சனாதன பாசிசத்தை எதிர்த்து இடதுசாரி, ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகும்

தோழர்களே! இந்த மாநாட்டின் 13 தீர்மானங் களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார வரவேற்று எனது நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு இரண்டு முக்கியமான நோக்கங்களுக்காக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. கூட்டாட்சி முறையை நடைமுறைப் படுத்திட வேண்டும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும். தேவையான ஒரு சூழலில் இந்த கோரிக்கை களை முன்வைத்து ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. சனாதன பாசிசத்தை எதிர்த்து இடதுசாரி, ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது தான் இன்றைய உடனடித் தேவையாகும். நானும் அப்துல் சமது அவர்களும் இடதுசாரிகளுடன் சேர்ந்து அமர்ந்துள்ளோம்.

தலையங்கம்

ஆர்எஸ்எஸ் அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரியது. அன்றைய நாளில் சமூகநீதி மனிதச் சங்கிலிக்கும் அனுமதி கோரப்பட்டது. எனவே யாருக்கும் அனுமதி இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அக்டோபர் 11 அன்று சமூகநீதிக்கான மனிதச் சங்கிலி எவ்விதப் பிரச்சனையும் இன்று நடந்து முடிந்தது. ஆனால், ஆர்எஸ்எஸ் 60 இடங்களில் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த நீதிமன்றம் மூலம் அனுமதி கோரியுள்ளது. இந்தப் பேரணியின் மூலம் பெரும் கலவரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இந்திய, சர்வதேச சூழல்

இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையான பாசிச தாக்குதலின் மெய்யான, வளர்ந்து வரும் ஆபத்தை எதிர்கொள்கிறது என மேலும் மேலும் அதிக இந்திய மக்களும் உலகம் முழுவதிலுமுள்ள இந்திய அரசியல் நிகழ்வுகளை கரிசனத்துடன் கவனிப்பவர்களும் அதிகரித்த அளவில் ஏற்றுக் கொள்கிறார்கள். பாசிசம் என்னும் சொல்லை அவர்கள் அனைவரும் பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். பல்வேறு எழுத்தாளர்களும், தற்போதைய இந்திய சூழலை விவரிக்க வலதுசாரி பரப்பியம் (ஜனரஞ்சகவாதம்), அதிகாரத்துவம், தேர்தல் எதேச்சதிகாரம், பேரின ஜனநாயகம் இன்னும் இதுபோன்ற சொற்களை விரும்புகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.