இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையான பாசிச தாக்குதலின் மெய்யான, வளர்ந்து வரும் ஆபத்தை எதிர்கொள்கிறது என மேலும் மேலும் அதிக இந்திய மக்களும் உலகம் முழுவதிலுமுள்ள இந்திய அரசியல் நிகழ்வுகளை கரிசனத்துடன் கவனிப்பவர்களும் அதிகரித்த அளவில் ஏற்றுக் கொள்கிறார்கள். பாசிசம் என்னும் சொல்லை அவர்கள் அனைவரும் பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். பல்வேறு எழுத்தாளர்களும், தற்போதைய இந்திய சூழலை விவரிக்க வலதுசாரி பரப்பியம் (ஜனரஞ்சகவாதம்), அதிகாரத்துவம், தேர்தல் எதேச்சதிகாரம், பேரின ஜனநாயகம் இன்னும் இதுபோன்ற சொற்களை விரும்புகின்றனர். தெளிவான கருத்தாக்கத்திற்காக, பாசிசம் என்னும் பொதுவான சொல்லை பயன்படுத்த இககமாலெ விரும்புகிறது. ஜனநாயகத்தை ஒழித்து கட்டிய எதேச்சதிகாரம் நிலவிய 1970களின் நடுப் பகுதியின் நெருக்கடி நிலை காலகட்டத்தைதவிர, எழுபது ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தங்கு தடையற்ற செயல்பாட்டை இந்தியா கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழல் என்பது, அறிவிக்கப்படாத ஆனால் மேலதிக பரவலான நிலையான நெருக்கடி நிலை பரவலாக உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், 1970 களின் நெருக்கடி நிலை என்பது அடிப்படையில், அரசியல் ரீதியாக எதிர்த்த, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்த அரசின் முரட்டுத்தனமான அத்துமீறலைக் குறிக்கும் அதேநேரத்தில், தற்போதைய கட்டம் பன்முகத்தன்மை, பலமத, பல மொழிகள் கொண்ட இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை கடுமையான, நீடித்த தாக்குதல்களுக்கு உட்படுத்துகிறது.
தீவிரமாகி வரும் பாசிசத் தாக்குதல்கள்
முப்பதாண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக அயோத்தி பரப்புரை இயக்க நாட்களில் இருந்தே இத்தகைய சூழல் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். பாபர் மசூதி இடிப்பை, 2002 குஜராத் இனப்படுகொலையைத் தொடர்ந்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லான வகுப்புவாத பாசிசத்தினுடைய எழுச்சியின்
நிச்சயமான அறிகுறியாக அல்லது முன்னெச்ச ரிக்கையாக நாம் அடையாளம் கண்டோம். நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆக்குவதற்கான கார்ப்பரேட்டுகளின் கூச்சல் பாசிசத்தின் மற்றொரு தெள்ளத் தெளி வான அறிகுறியாக வெளிப்பட்டது பெருந் தலைவருக்கு விசுவாசமான கார்ப்பரேட் ஆதரவு. 2014ல் இருந்து இந்திய பாசிசத்தின் மற்ற பண்பு அம்சங்கள், அச்சமூட்டுகிற விதத்தில் விரைவாகவும் தீவிர மாகவும் மேலெழுந்து கொண்டிருக்கின்றன
"இந்தியாவில் பாசிசம் என்பது, நிறுவன ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை (ஆகியவற்றை) நிர்வாகத்துறை சிறுமைப்படுத் துவது தலைக்குப்புற கவிழ்ப்பதாகும்; அரசு ஆதரவுடன், அரசு அல்லாத சக்திகள் குறிவைத்து இஸ்லாமியர் எதிர்ப்பு தாக்குதல்களை வெறித் தனத்துடன் நடத்துவதாகும்; தீவிரப்ப டுத்தப்பட்ட சாதிய, பாலின வன்முறையும் இந்திய தெருக்களில் நடத்தப்படும் காலித் தனத்தைக் கொண்டதுமாகும். மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளை ஒழித்துக்கட்டி அதிகாரம் முழுமையாக மையப்படுத்தப் படுதலோடு ஒரு சிலரின் கைகளில் திகைக்கச் செய்யுமளவு செல்வக் குவிதலையும் அரசு ஆதரவுடன் கட்டுப்படுத் தப்படாத கார்ப்பரேட் கொள்ளையையும் ஒன்றிணைத்ததைப் பற்றிய தாகும். பெருமளவிலான பொய்த் தகவல்கள், கவனச் சிதறல்களை ஏற்படுத்த சாத்தியமான ஒவ்வொரு ஆயுதத்தை பயன்படுத்தியும், சங்கப்படையினரின் சொந்த தொழில்நுட்பப் பிரிவு, சொல்பேச்சு கேட்கும் செல்லப் பிராணிகளாக உருமாற்றி வைத்திருக்கும் மைய நீரோட்ட ஊடகங்களை பயன்படுத்தியும் பிரும்மாண்டமான அளவில் மக்களின் சம்மதத்தை உற்பத்தி செய்வது பற்றியதாகும். எதிர்கருத்துகளை மௌனமாக்க, துன்புறுத்த கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்துவது, நீதியின் அடிப்படை அம்சங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் ஒழித்துக்கட்டுவது, குடிமக்களை அதிகாரமற்றவர்களாக்க, அவர்களை முடியாட்சி
அல்லது காலனிய ஆட்சியின் குடிமக்களாக மாற்ற பயங்கர, அச்சுறுத்தல் நிறைந்த சூழலை உருவாக்குவது பற்றியதாகும்.
இந்திய பாசிசத்தை இயக்கும் சக்தி ஆர்எஸ்எஸ்
அடிப்படையில் மோடியின் ஆட்சி வெறும் எதேச்சதிகார ஆட்சியில்லை அதுவொரு பாசிச ஆட்சி என்பதை எது தீர்மானிக்கிறது என்றால் கவனமாகத் திட்டமிடப்பட்ட இந்த புதிய ஒழுங்கை கொண்டு வந்ததில் ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்குதான். இத்தாலியில் முசோலினியின் கீழ் உலகம் கண்ட முதல் பாசிச ஆட்சி யிலிருந்தும் அதனைத் தொடர்ந்து ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் முழு வளர்ச்சியடைந்த பாசிச செயல்திட்டத்தி லிருந்தும், உலகத்திலேயே முதன்முதலில் தோன்றிய பாசிசத்திலிருந்து உத்வேகத்தைப் பெற்று 1925 இல் ஆர்எஸ்எஸ் பிறந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இறக்குமதி செய்யப்பட்ட கருத்தியலை, இந்தியாவின் கடந்த காலத்திலிருந்து பெற்ற மிகவும் பிற்போக்கான சமூக, கலாச்சார மரபுகளுடன், குறிப்பாக, பார்ப்பனிய சாதிய அமைப்பு முறை, ஆணாதிக்கம், முஸ்லிம்களுக்கு எதிரான கொடிய வெறுப்பு ஆகியவற்றுடன் இணைத்து, இந்து தேசியவாதம் அல்லது இந்துத்வா என சவார்கர் குறிப்பிட்டதன் அடிப்படையில் இந்தியாவை ஒரு இந்து நாடாக வரையறுத்தது.
முசோலினியும் ஹிட்லரும் மிக விரைவி லேயே அதிகாரத்தை கைப்பற்றி, இரண்டாவது உலகப்போரில் அழிந்த போது, இந்திய பாசிஸ்டுகள் மைய அதிகாரத்தை கைப்பற்ற நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஹிட்லர் காலத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களான மிகை தேசியவாத கருத்தியல், அணிதிரட்டல் தொழில்நுட்பம், இனப்படு கொலைத் திட்டங்கள் ஆகியவற்றோடு, கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான கணினி யுக தொழில்நுட்பங்களை ஆயுதமாகக் கொண்ட இன்றைய இந்திய பாசிசம்தான் அநேகமாக மிகவும் அனுபவம் வாய்ந்த பாசிச ஆட்சியாக இருக்கும். இந்து மேலாதிக்கவாத மிகை தேசியவாதத்துடன் அமெரிக்க சார்பு வெளிநாட்டு கொள்கைகளை இணைப்பதன் மூலம் அது, உள்நாட்டு ஆதரவையும் உலக ளாவிய அங்கீகாரத்தையும் பெற முயற்சிக்கிறது. அதன்மூலம், இந்திய சந்தைக்கு உலகளாவிய ஈர்ப்பையும் உலகளாவிய மூலதனத்துடன் கார்ப்பரேட் இந்தியாவின் வளர்ந்துவரும்
ஒருங்கிணைப்பையும் அமெரிக்கா, இஸ்ரேல் உடைய நெருங்கிய கூட்டாளியாக இந்தியாவின் நீண்டகால பங்கையும் நெம்பித் தள்ளுகிறது.
ஆமாம், பிரிக்ஸ் அமைப்பிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தியா ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கிலிருந்து, ஓரளவு தன்னாட்சியையும் இடைவெளியையும் பராமரிக்க, அங்கே ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இடத்தை பகிர்ந்து கொள்கிறது. ஆனால், டிரம்ப், நேதன்யாகு, போரிஸ் ஜான்சன் தற்செயலாக, இந்த மூன்று தலைவர்களும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டனர். அது போன்ற தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் கூடிக் குலாவும் மோடியினுடைய செயல்கள்தான் மோடி அரசாங்கத்தினுடைய வெளிநாட்டுக் கொள்கையின் உண்மையான திசையையும் உந்துதலையும் வெளிப்படுத்துகிறது. 2002 இனப்படுகொலை நடந்து நீண்ட காலத்திற்கு பிறகும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய உலகிலுள்ள பல்வேறு நாடுகள் குஜராத் முதல் அமைச்சர் மோடிக்கு விசா வழங்க மறுத்து விட்டன. உலகளாவிய அரசியலில் வலதுசாரி அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் எழுச்சியால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய உலகிலிருந்து பிரதம மந்திரியாக மோடிக்கு கிடைத்த தீவிரமான ஆதரவு, டிரம்ப்பின் குடியரசு தலைமையையும் டிரம்ப்புடன் மோடிக்கு இருந்த சிறப்பு நல்லுறவையும் தாண்டி நீடித்தது.
அதன் நீண்டகால பாசிச வடிவமைப்பான இந்து ராஷ்டிராவை அடைய ஆர்எஸ்எஸ்சின் தாக்குதல் தன்மைமிக்க பங்கும் அதன் பரந்த வலைப்பின்னலும், அரசு நிறுவனங்களை கீழ்நிலைபடுத்துதலும் அரசின் ஆதரவுடன், தண்டனையிலிருந்து விலக்கு பெற்ற இனப்படு கொலை செய்யும் அரசு சாரா நபர்களின் ஒருங்கிணைந்த பயன்பாடும், நம்பகமான கார்ப்பரேட் அனுசரணையும், ஏகாதிபத்தியத்தின் நீண்டகால ஆதரவும் ஆகியன நான்கு முக்கிய ஆதாரங்கள் ஆகும். இதன் வழியாக மோடி ஆட்சியானது, அதிகரித்துவரும் விரைவுடன் சங்கின் பாசிச செயல்திட்டத்தை முன்னேற் றுகிறது. 2014 இல் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சிக்கு வந்தது. தற்போது அது எதிர்கருத்து இல்லாத ஜனநாயகமாக இந்தியாவை மாற்ற முறைப்படியான தேடலை மேற்கொள்கிறது.
விரைவில் இந்த நாட்டில் பாஜக மட்டுமே ஒரே
கட்சியாக மீதம் இருக்கும் என பாஜகவின்
தலைவர் கூறுகிறார். அதே நேரத்தில், அடுத்த
50 ஆண்டுகளுக்கு பாஜக தான் இந்தியாவை
ஆளும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா
பீற்றிக் கொண்டேயிருக்கிறார்.
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில்
கம்யூனிஸ்டுகளின் பங்கு
இந்தியா நிச்சயமாக பாசிச அபாயத்தை எதிர்கொள்கிறது. இந்திய மக்களின் பல்வேறு பிரிவினருடைய குறிப்பிடத்தக்க போராட்ட இயக்கங்களை சமீப ஆண்டுகள் கண்டன. ரோஹித் வேமுலாவின் நிறுவன படுகொலையை அடுத்து நிகழ்ந்த மாணவர்களின் போராட்ட இயக்கத்தில் இருந்து, குஜராத்தின் உனாவில் நடைபெற்ற கொடுமைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தலித் புத்தெழுச்சி, குடியுரிமை சட்டத்தில் பாரபட்சமான, பாகுபாடான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஷாஹீன் பாக் போராட்டம், இந்திய விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்ப ரேட்டுகளின் வசமாக்குவதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்திய ஓராண்டு வரை நீண்ட இந்திய விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்ட இயக்கம் என வெறுப்பு, அச்ச உணர்வு, கடுமையான ஒடுக்குமுறை ஆகிய வற்றை எதிர்த்து ஆற்றல்மிக்க, தீர்மான கரமான போராட்ட இயக்கங்களின் தொடர் வரிசையை நாம் கண்டோம். மக்களின் போராட்ட இயக்கங்களும், கூட்டமைப்புவாதத்தை தகர்க்கும் பாசிசமும், எதிர்க்கட்சிகள் மீதான அனைத்து விதமான தாக்குதல்களும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் செயல்பாட்டிற்கும் பெருமள விற்கான ஊக்கம் அளிக்க துவங்கியுள்ளன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் குறிப்பிடத்தக்க பிரிவினர் ஆர்எஸ்எஸ் மற்றும் வெறுப்பு, வன்முறையை தூண்டிவிடும் அதன் ஆபத்தான பரப்புரைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தயங்குகின்றனர். மேலும், தங்களது எதிர்ப்பை மோடி ஆட்சிக்கு எதிராக மட்டுமே சுருக்கிக் கொள்ள விரும்பு கின்றனர். அதிலும் கூட, அரசின் ஒடுக்குமுறை, குடிமக்களின் அரசியல் சுதந்திரம், தனியார் மயமாக்கத்திலிருந்து விலகி மக்களின் நலன்களுக்கானதாக கொள்கைகளின் திசைவழியை மாற்றியமைக்க வேண்டியதன் தேவை குறித்த கேள்விகள் பெருமளவிற்கு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
மிகவும் உறுதியான, விரிவான, தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதிலும், நீடித்த போராட்டத்தின் வழியாக பாசிசத்தை தோற்கடிப்பதிலும் தான் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். கம்யூனிஸ்டுகள் களத்தில் தொடர்ச்சி யான போராட்ட இயக்கங்களை கட்டமைத்து, அந்த ஆற்றலை திரட்டிக்கொண்டு பாசிச சக்திகளை முறியடிக்க, நாடாளுமன்ற எதிர்கட்சி முகாமில் ஒற்றுமையையும் செயலூக்கத்தையும் முன்னெடுக்க உதவ வேண்டும். பாசிச சக்திகள் ஏற்கனவே பெற்றிருக்கிற ஆற்றலையும் ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் முன்னேற்றத் துக்கும் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் ஜனநாயக சக்திகளுக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பது தெளிவாகிறது.
அம்பேத்கரின் மேற்கோளின் படி,இந்துராஷ்டிராவை இந்தியாவுக்கான மாபெரும் பேரிடரென நாம் கண்டால் அதற்கான எதிர்வினை என்பது மீட்பும் நிவாரணமும் என்ற உடனடி பேரிடர் மேலாண்மை அணுகுமுறையாக மட்டும் இருக்க முடியாது. அதன் இறுதிவரை சென்று மறுகட்டுமானம் என்ற சவாலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆழ்ந்த நுண்ணறிவுடன் இந்தியாவினுடைய அரசமைப்புச் சட்ட பயணத்தின் முரண்பாடுகளை பெருகிவரும் சமூகப் பொருளாதார சமத்துவ மின்மை, அரசியல் சட்ட ஜனநாயகம் என்னும் மேலோட்டமான அழகு படுத்தலுக்கும் அதற்கு பின்னே உள்ள ஜனநாயகமற்ற சமூக நிலைமைகளுக்கும் இடையே உள்ள எதிரெதிர் தன்மையின் முன்பு தேர்தல் சமத்துவத்தின் வளர்ந்துவரும் நிலையற்ற, பொருத்தமற்ற தன்மையை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். பாசிசத்திற்கான பதில் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும், அதன் உள் முரண்பாடுகளை நீக்கிவிட்டு சமூக வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் அதனை விரிவாக்கம் செய்து மேலும் முழுமையான தாகவும் நிலைத்ததாகவும் மாற்றுவதில் தான் இருக்கிறது. வரலாற்று ரீதியாக சோசலிசத்தின் வாக்குறுதி என்பது இதுதான். மிகச் சரியாக இந்த சோசலிசக் கனவை எதிர்கொண்டு நசுக்க இத்தாலியில் நூறு வருடங்களுக்கு முன்பு
பாசிசம் எழுந்தது. அரசமைப்புச் சட்டத்தின் பார்வை யையும் இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சோசலிச, மதச்சார்பற்ற, ஜனாயகக் குடியரசு எனக் குறிப்பிடுகிற பிரகடனத்தையும் மெய்யான யதார்த்தமாக மாற்றுவதன் வழியாகவே, இன்றைய இந்தியாவில் வளர்ந்து வரும் பாசிசத் தாக்குதலுக்கான உண்மையான பதிலை வழங்க முடியும்.
சர்வதேச சூழல்: ஆழமடைந்துவரும் நெருக்கடி, எதேச்சதிகாரம், போர்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, உலகம் முழுவதும் உள்ள வெறித்தனமான வலதுசாரி சக்திகளின் எழுச்சி என்ற உகந்த உலகளாவிய சூழ்நிலையில் இந்தியாவில் பாசிசத் தாக்குதல்கள் தீவிரமாகி வருகின்றன.
வலதின் இந்த எழுச்சிக்கு துணை செய்வது
உலக மூலதனத்தின் நீடித்த, ஆழமான பொருளாதார வீழ்ச்சியின் தற்போதைய கட்டம் கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக மாபெரும் இடையூறுக்கு ஆட்பட்டு மேலும் சிக்கலாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆபத்தான போரை பிப்ரவரி 2022 லிருந்து நாம் கண்ணுற்று வருகிறோம். அதேபோது ஏமனும் பாலஸ் தீனமும் முறையே சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகியவற்றால் தொடர்ந்து நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவை இலக்காகக் கொண்டு சுற்றி வளைப்பதற்கான புதிய புதிய வழிமுறைகளை கண்டறிய அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக ரஷ்யாவை இககமாலெ திட்டவட்டமாகக் கண்டித்தி ருக்கிறது. உடனடி போர் நிறுத்தத்திற்கும் உக்ரைனின் இறையாண்மைக்கு உறுதியளிக்க, அமைதியை திரும்பக் கொண்டு வரவும் வலியுறுத்தியது. ரஷ்ய பேரினவாதத்தையும் உக்ரைன் அடிப்படையில் ரஷ்யாவின் நிலப்பகுதி, கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி யெனவும், உக்ரைனின் இறையாண்மை மிக்க இருத்தல் என்பது லெனின் செய்த தவறு அது சரிசெய்யப்பட வேண்டும் எனவும் காணும் அதன் யுரேசிய விரிவாக்கத்துவத்தையும் கூட நாம் கண்டித்தோம். இப்போது நடந்து கொண் டிருக்கும் போருக்கான நியாயப் படுத்தலாக நேட்டோவின் கிழக்கத்திய விரிவாக் கத்தை துணைக்கழைக்கும் ரஷ்யாவின் விவரணை களையும் நாம் ஏற்கவில்லை.
இருப்பினும், உக்ரைனும் ரஷ்யாவும் இந்தப் போரில் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் போது, உலகத்தின் பெரும்பகுதி இதற்கு பெரும் விலை கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் போரில் நேரடியாக எந்தவொரு பங்கெடுப்பையும் மேற்கொள்ளா மலேயே அமெரிக்கா மிகப்பெரும் பலன்களை அனுபவிக்கிறது என்னும் உண்மையை கவனிக்கத் தவறிவிடக் கூடாது. வரலாற்று ரீதியாக, பனிப்போர் முழுவதிலும், சோவியத் துக்கு பிந்தைய காலங்களிலும் தனது புவிசார் அரசியல், இராணுவ மேலாதிக்கத்தை நீடித்திருக்க அது நேட்டோவை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, வார்சா ஒப்பந்தம் சிதறிய பிறகு நேட்டோ தொடர்ந்திருப்பதில் எந்த நியாயமு இல்லை. ஆனால், நேட்டோவைக் கலைப்பதற் மாறாக, நேட்டோவை விரிவாக்குவதை நோக அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது. நேட்டோ உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 12 என்பதிலிருந்து தற்போது 30 ஆக உயர்ந் துள்ளது. இந்த விரிவாக்கம், ரஷ்யாவையும், சீனாவிடம் அது அதிகரித்து வரும் ஒத்துழைப் பையும் கட்டுப்படுத்த மட்டுமல்லாது, ஐரோப்பா ஒரு இணை அதிகாரமாக எழுவதை தடுப்பதற் கும் தான். உக்ரைன் தனது இறையாண் மையை பாதுகாப்பதற்கான உதவி எனக் கூறிக் கொள்ளும் இந்த சமயத்தில் கூட, பெரும்பகுதி நிலங்க ளையும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளையும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதோடு சேர்ந்து, கட்டுப்பாடுகளை நீக்கியும் தொழிலாளர் சட்டங்களை வெட்டிக் குறைத்தும் உக்ரைனிய பொருளாதாரத்தை திறன்மிக்க விதத்தில் காலனியாக்க, அமெரிக்கா வும் கார்ப்பரேட் மூலதனமும் பரபரப்பாக செயல்படுகின்றன. நியூயார்க் பங்கு வர்த்தக மையத்தில் 'உக்ரைனுக்கு நன்மை' என அவர் அழைக்கும் இந்த மாபெரும் விற்பனையை அதிபர் செலேன்ஸ்கி துவக்கினார்.
இஸ்லாமிய வெறுப்பு மிகுந்த, 'நீடித்த சுதந்திரத்திற்கான நடவடிக்கை' அல்லது தீவிரவாதத்தின் மீதான உலகளாவிய போர் எனக் கூறப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்கா தற்போது பனிப்போர் சகாப்த சூழலை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறது. அதேவேளையில், ஒருசில அமெரிக்க ஆதரவு கருத்தியலாளர்களும் பரப்புரையாளர்களும் ரஷ்ய-சீன கூட்டணியை, இரண்டாம் உலகப் போரின் அச்சு நாடுகளான ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் போன்றது எனவும் அடையாளம் காணத் துவங்கி விட்டனர். உலகத்தில், புதுப்பிக்கப்பட்ட இந்த பாசிச அபாயத்திற்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய கூட்டணியையும் பரிந்துரைக்கிறார்கள். 'ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யும்' அதன் இரத்தம் தோய்ந்த, தீய வரலாற்றை இந்த உலகம் மறந்து விட்டது என்ற எண்ணத்தில், ஜனநாயகத்திற்கான உலக வீரனாக தன்னிச்சையாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதன் மூலம், நெருக்கடிகளால் சரிந்து வரும் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய தொடர் குற்றங்களின் நீண்ட அணிவரிசையை மறைக்கவும், ஒரு துருவ உலகில் ஆதிக்கம் செலுத்தும் தன்னுடைய தனித்துவ வடிவமைப்பை மறுஉறுதி செய்யவும் முயற்சித்து வருகிறது. அமெரிக்க ஒரு துருவ உலகிற்கு மாறாக பல்துருவ உலகம் போட்டியிடும் உலக சக்திகளின் உள்நாட்டு குணாம்சங்கள் எதுவாயினும், உலகமுழுவதுமுள்ள முற்போக்கு சக்திகளுக்கும் இயக்கங்களுக்கும் நவதாராளவாத கொள்கைகளை திரும்பப்பெறச் செய்வது, சமூக மாற்றம், அரசியல் முன்னேற்றம் போன்ற தேடல்களுக்கு, ஒரு பல்துருவ உலகம் உண்மையிலேயே மிகவும் நன்மைக்குரியதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி முதலாம் உலகப் போரை மட்டும் உருவாக்கவில்லை. ஏகாதிபத்திய சங்கிலியின் மிகவும் பலவீனமான கண்ணியை துண்டித்த நவம்பர் புரட்சியையும் நிகழச் செய்தது. அதனுள் மோசமான உள் சிதைவுகள் சீர்கேடுகள் இருந்தபோதிலும், பாசிசத்தை முறியடித்து இரண்டாம் உலகப்போரை வெற்றிக் குறிப்புடன் முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலமாக, காலனிய எதிர்ப்புப் போராட்டங்களும் புரட்சிகர இயக்கங்களும் வெற்றிகரமான முடிவினை எட்டுவதில் சோவியத் யூனியன்தான் வெற்றி பெற்றது. தொடர்ந்து வந்த பல பத்தாண்டுகளில், சோவியத் யூனியன் உள்நாட்டில் தேங்கிப் போய்விட்ட போதும், அமெரிக்கா உடனான நீடித்திருக்க முடியாத ஆயுதப் போட்டியிலும் வல்லரசுக்கான போட்டியிலும் மாட்டிக் கொண்டிருந்த போதிலும், அது அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு எதிர்சக்தியாக இருந்ததனால், பல மூன்றாம் உலக நாடுகளும் யக்கங்களும் ஏகாதிபத்திய பிடியில் சிக்காமல், குறிப்பிடத் தக்க விதத்தில் ஒப்பீட்டு அளவிலான தன்னாட்சி யுடன், தங்கள் சொந்த வழியை பின்பற்றிச் செல்ல உதவியது. நமக்கு மிக அருகாமையிலுள்ள வங்காளதேசத்தின் விடுதலை ஒரு முக்கிய உதாரணமாகும். சோவியத் யூனியன், வார்சா ஒப்பந்தம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தனியொரு வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இந்த உலகம் ஒருதுருவமாக மாறிவிட்டதைப் போலவே தோன்றியது. வலதுசாரி தத்துவவிய லாளர்களின் குரலில், ஃபுகுயாமா தனது பெருவெற்றிபெற்ற 'த எண்ட் ஆப் ஹிஸ்டரி அண்ட் த லாஸ்ட் மேன்' (வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்) எனும் புத்தகத்தில், தாராளவாத ஜனநாயகத்தின் உலகளாவிய ஆட்சியின் உச்சபட்ச அரசு வடிவம் என இந்தக் கட்டத்தை வரையறுத்தார். மறுபுறத்தில், சாமுவேல் ஹன்டிங்டன் அமெரிக்காவிற்கு ஒரு புதிய 'பகைவனின்' தேவையை அங்கீகரித்தார். இந்த புதிய சகாப்தத்தை, பனிப்போரின் யதார்த்தமான கருத்தியல்களுக்கு இடையேயான மோதலுக்குப் பதிலாக, 'நாகரீகங்களுக்கு இடையேயான மோதல்' என விவரித்தார். அமெரிக்காவையும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகையும் மையத்தில் இருத்தி தனது பிளவுக் கோட்டை அவர் வரைந்தார். ரஷ்ய அரசியல் தத்துவவியலாளரும் பகுப்பாய்வு வல்லுநருமான அலெக்சாந்தர் டுகின் ரஷ்யாவை மையத்தில் கொண்ட யூரேசியாவை மேற்கத்திய ஆதிக்கத்திற்கு இறுதித் தீர்வாக சித்தரித்தார். இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து ஃபுகுயாமா கூட 'வரலாற்றின் முடிவிற்கு ஒரு முடிவு' என இதனை அழைத்தார். அமெரிக்க தலைமையின் கீழ் உலகத்தில் உள்ள தாராளவாத ஜனநாயகங்கள் ஒன்றிணைந்து, தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்த வழியிலேனும் சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகளைத் தோற்கடிக்க வேண்டுமென திமோத்தி ஸ்னைடர், அன்னி ஆப்பிள்பாம் போன்ற அமெரிக்க வரலாற்றியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இத்தனை காலமும், குறிப்பாக போருக்கு பிந்தைய உலகில், அமெரிக்கா மிகச் சரியாக இதைத் தானே செய்து கொண்டிருப்பதாக உரிமை கொண்டாடுகிறது. முடிவற்ற போர்கள், கொடூரமான ஆக்கிரமிப்புகள், தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கங்களையும் உள்ளிட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள், அமெரிக்கா ஆதரவிலான 1 இராணுவப் புரட்சிகள், நேரடி போர்கள் வழியிலான படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துதல் அல்லது சர்வாதிகார, பிற்போக்கான, - ஒடுக்குமுறை ஆட்சிகளுக்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பதுதானே அதற்கு பொருள். இந்தோனேசியாவிலிருந்து சிலி 5 வரையிலும், மிகச் சமீபத்திய நிகழ்வுகளான ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் என உலகம் முழுவதும் 'ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வது அல்லது பாதுகாப்பது' என்ற பெயரால், அமெரிக்காவின் தலையீட்டால் ஏற்பட்ட வன்முறையையும் அழிவுகளையும் நாம் கண்டிருக்கிறோம். அதனால், ஏகாதிபத்தி யத்தின் வரலாற்றை ஒற்றை பரிணாமத்திலான உலகளாவிய விவரணையாக அல்லது எளிமையான, ஜனநாயகம் எதிர் சர்வாதிகாரம் என்ற இருமையாக குறைத்துவிட முடியாது. உக்ரைன் அதன் இறையாண்மையை வெற்றி கரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; ருஷ்ய மக்கள், சிறு குழுவினராட்சியையும், புடின் ஆட்சியின் கொடூர ஒடுக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டும்; சீனாவில், மோசமான நிலையில் உள்ள சிறுபான்மை மக்கள் சிறந்த உள்நாட்டு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பெற வேண்டும் எனவும் விரும்புகிறோம். ஆனால், ரஷ்யாவையும் சீனாவையும் கட்டுப் படுத்துவது என்ற அமெரிக்க போர்த் தந்திரம் என்பது மேற்கூறிய இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற் காகவும் இந்த உலகம் பல் துருவமாக மாறுவதை தடுப்பதற்காகவுமே என்பதை நாம் அங்கீகரித்தாக வேண்டும். உலக ஊடகங்களின் கண்களில், . உக்ரைன் போர், உலகிலுள்ள மற்ற மோதல்கள் போர்களையும் மறைத்து விட்டது, அழித்து விட்டது என்ற போதிலும்கூட, உலகில் தற்போது உக்ரைனில் மட்டுமே போர் நடந்து கொண்டிருக்க வில்லை. ஆக, ஒரு போருக்கான தீர்வு என்பது இன்னொரு மோதலில் அமைதியும் நீதியும் 5 நிறுவப்படுவதற்கு இட்டுச் செல்லாது. ஏனெனில், அனைத்து போர்களும் தங்களுடைய சொந்த காரணங்களையும் பின்னணிகளையும் கொண்டிருக்கின்றன. எனவே, அமைதி, நீதி, ஜனநாயகத்தின் சக்திகள் படையெடுப்பு, ஆக்கிரமிப்புக்கான ஒவ்வொரு அநீதியான போருக்கு எதிராகவும், ஒவ்வொரு அடக்குமுறைக்கும் ஜனநாயக மறுப்பிற்கும் எதிராகவும் குரல் கொடுத்தாக வேண்டும். தேசத்தின் முன்னுரிமையை சர்வதேச கடமையுடன் இணைப்பது கம்யூனிஸ்டுகளாகிய அல்லது மிகவும் பொதுப்படையாக இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகள்/நீரோட்டங்களின் ஜனநாயகவாதிகளான நமக்கு, இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது குறித்த முதன்மையான, கட்டாயமான கேள்வியை மீண்டும் கொண்டு வருகிறது. கம்யூனிசம் என்பது சர்வதேச தத்துவமும் இயக்கமும் என்பதால் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்னும் பதாகையை உயரத் தூக்கி பிடித்திருக்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் சர்வதேச பதில் வினையை எப்போதும் நம்முடைய தேசப் பணியோடு இணைக்க வேண்டும். இந்த இணைப்பை பற்றி சொல்வது எளிது, செய்வது கடினம். பல்வேறு சந்தர்ப்பங்களில் (கம்யூனிச) இயக்கம் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தவறிழைத்தது அல்லது பிழைசெய்ததற்கு இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தில் கடந்த 100 ஆண்டுகளின் வரலாறு சாட்சியாக உள்ளது. இந்த சவாலை புரிந்து கொள்ள சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் அடித்தளமான அடிப்படைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள தொழி லாளர்கள் ஒன்றிணைந்து சர்வதேச அளவில் மூலதனத்தை எதிர்த்துப் போராடித் தோற்கடிக்க வேண்டும் தெளிவான என வலியுறுத்தப்பட்ட, மிகத் அறைகூவலுடன் கம்யூனிஸ்ட் அறிக்கை நிறைவடைந்திருந்தது என்பது உண்மைதான். தேச எல்லைகளை மதிக்காத, ஒவ்வொரு துளை வழியாகவும் விரிவடைந்து கொண்டே செல்லும், அனைத்தையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் சரக்காக மாற்றிய மைக்கும் மூலதனத்தின் உள்ளார்ந்த போக்கி னையும் அறிக்கை அடிக்கோடிட்டு காட்டி யிருந்தது. எனவே, தொழிலாளர் வர்க்கமும் உலக அளவில் சிந்தித்து செயல்பட வேண்டும். அதேநேரத்தில், ஒவ்வொரு தேச அரசுகளிலும் பாட்டாளி வர்க்கம், மூலதனத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்; தேசத்தின் விருப்பத்தையும், அடையாளத்தையும் வரைய றுக்கும் (மூலதனத்தின்) அதன் அதிகாரத்தையும் அகற்ற வேண்டும்; தானே தேசமென அறிவித்துக் கொள்ளவேண்டும் என அறிக்கை மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது. தேசத்திற்குள்ளேயே இருக்கும்ஒன்றின் சொந்த ஆளும் வர்க்கத்தினரிடமிருந்து பாட்டாளி வர்க்கம் தனது சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு முக்கிய விசயமாகும். கம்யூனிஸ்ட் அறிக்கையின் மையக் கருத்தை பின்பற்றியே, நவம்பர் புரட்சியின் மூலமாக, தேசத்தின் எல்லைகளுக்குள்ளேயே சோசலிசத்தை கட்டியெழுப்புவதன் சாத்தியங்கள் முதலில் யதார்த்தமாக்கப்பட்டது. சோசலிச/கம்யூனிச இயக்கத்தின் தேச, சர்வதேச பரிமாணங்களையும், கடமைகளையும் இணைப்பதிலுள்ள சவாலின் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச அமைப்புகள் எதிர் கொண்டன. சர்வதேச தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் செய்தியையும் உணர்வையும் முதலாவது அகிலம் பரப்பியது. அராஜகவாதி களுக்கும் சோசலிசவாதிகளுக்கும் இடையேயான முதல் முக்கிய கருத்தியல் எல்லைக்கோட்டை பிரித்து நிறுத்துவதில் அது தலைமையேற்றது. போட்டியிட்டுக் கொண்டிருந்த தேசியவாதம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல்போர் - ஆகியவற்றின் நெருக்குதல்களின் கீழ் சோசலிச அகிலம் என அழைக்கப்பட்ட இரண்டாவது அகிலம் வீழ்ந்தது. கம்யூனிஸ்ட் அகிலம் என அழைக்கப்பட்ட மூன்றாவது அகிலம், வெற்றி பெற்ற சோசலிச புரட்சியின் உணர்வை பரப்பியதுடன், காலனிகளிலும் அரைக் காலனிகளிலும் நடைபெற்ற தேச விடுதலை போராட்ட இயக்கங்களிலிருந்து, தாராளவாத ஜனநாயகங்களில் நாடாளுமன்ற பாதையிலான போராட்டங்கள் வரை, அதிதீவிர பிற்போக்கின் வடிவமான பாசிசத்தை எதிர்கொண்டது வரை வேறுபட்ட பல மாறுபாடான பின்னணிகளில் வளர்ந்து வரும் கம்யூனிச இயக்கங்கள் வலுப்பெறவும், வடிவம் பெறவும் உதவியது. இருப்பினும், தேசிய நிலைமைகளை விலை யாகக் கொடுத்து சர்வதேச நிலைமை களுக்கு முன்னுரிமை வழங்கியதிலுள்ள வரம்புகளையும் சிக்கல்களையும், சீனாவிலும் இந்தியாவிலும் நிகழ்ந்த கம்யூனிச இயக்கங்களின் மாறுபாடான அனுபவங்கள் வெளிப்படுத்தின. மைய வழிகாட்டுதல்களுக்கு எதிராக, தங்களு டைய - சொந்த வழியை உருவாக்கி கொண்டதில் சீன இயக்கம் வெற்றி பெற்ற அதே நேரத்தில், சர்வதேச பின்னணியின் வழிகாட்டு தலுடன் தேசிய இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் தேச யதார்த்தத்தின் சிக்கல்களுக்கும் செவி சாய்ப்பதில், இந்திய இயக்கம் பல்வேறு தருணங்களில்தவறிழைத்தது. சோவியத் யூனியன் மீதான நாஜி ஜெர்மனியின் படையெடுப்பை தொடர்ந்து, இரண்டாம் உலகப் போர் குறித்த கம்யூனிஸ்டு களின் அணுகுமுறை ஏகாதிபத்திய யுத்தம் என்பதிலிருந்து மக்கள் யுத்தம் என்பதாக திடீரென மாற்றமடைந்த போது இந்த பிரச்சனை மிகவும் வெளிப்படையாக முன்னுக்கு வந்தது. இந்தியாவினுடைய சொந்தக் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்வதற்கு முன்னுரிமை வழங்கத் தவறியதால், இந்திய கம்யூனிச இயக்கம் மேற்கொண்ட செயல்தந்திர பிழையானது, இயக்கம் ஒரு தற்காலிக பின்னடைவைச் சந்திக்க காரணமாகியது. மேலோங்கிய வகையிலும் பின்தங்கியதுமான, விவசாய சமூகத்தில் வெற்றிபெற்ற சீனப் புரட்சியிலிருந்து உத்வேகத்தை பெற மிகச் சரியாகவே முயற்சித்த நமது சொந்த இகக(மாலெ) இயக்கம், அதேவேளை, இந்திய யதார்த்தத்திற்கு சுதந்திரமான பதில்வினை யாற்றுவதை குறைத்து மதிப்பிட்டு, சீனாவின் நம்பிக்கைக்குரிய சாயலாக நமது கட்சியையும் இயக்கத்தையும் வெளிப் படுத்தும் விதமான முழக்கங்களை உருவாக்கிதவறிழைத்திருந்தோம். இன்றைக்கு இந்திய கம்யூனிச இயக்கம் பாசிசத் தாக்குதலைத் தோற்கடிப்பதில் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பினை எதிர்கொள்கிறது. ஆழமடைந்து வரும் நீண்டகால பொருளாதார மந்தநிலை, சர்வாதிகார ஆட்சிகளின் எழுச்சி, சூழலியல் மாற்றங்களால் விளையும் பேரழிவுகள் என்ற சர்வதேசப் பின்னணியும் கூட, இவற்றை எதிர்கொள்ள அனைத்து முற்போக்கு சக்திகளிடமிருந்தும் ஒன்றுபட்ட சக்தி வாய்ந்த எதிர்வினையைக் கோருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கும் போர்வெறிக் கூச்சல் களுக்கும் எதிராக ஒன்றிணைந்து, தங்களுக்குரிய பகுதிகளில் சர்வாதிகார சக்திகளை எதிர்த்தும், இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டத்தை தீவிரப்படுத்திட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)