தலையங்கம்

அன்று அனிதா தொடங்கி, இன்று ஜெகதீஸ்வரன் வரை மாணவர்கள் நீட் தேர்வினால் மரணமடைந்துள்ளார்கள் என்றால், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வில் 400 மார்க் எடுத்தும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் சேரமுடியவில்லை. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தன்னுடைய லட்சியம் நிறைவேறாததால் மாணவர் ஜெகதீஸ்வரன் இறந்து போனார் என்றால், அந்த சோகம் தாளாமல் அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

இருண்ட, பிற்போக்குச் சக்திகளைத் தோற்கடிப்போம்!

கருத்தியல் திணிக்கப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட புதிய கல்விக் கொள்கை 2020 மிகவும் வசதியாக பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கடுமையான, பெரிய அளவிலான திருத்தங்களை பள்ளிப்பாடப் புத்தகங்களில் மேற்கொள்வதன் மூலம் அது அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புரட்சிகர இளைஞர் கழகம்-அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய இளைஞர்-மாணவர் மாநில சிறப்பு மாநாடு

2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

AISA - RYA அகில இந்திய மாணவர் கழகம் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்தும் மாணவர் - இளைஞர் மாநில மாநாடு 31 மார்ச் 2023

மோடியின் பிஜேபி அரசு, கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கல்வி மாஃபியாக்களுக்கு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விலை கூவி விற்று வருகிறது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் திறக்கிரோம், வெளிநாட்டுக் கல்வியை இந்தியாவில் வழங்குகிறோம் என்ற பெயரில், மேலை நாடுகளின் கல்வி குப்பைக் கூடமாய் இந்தியக் கல்வி முறை மாற்றப்படுகிறது. மேலை நாடுகளின் தரமற்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்விச் சந்தையில் இடம் அளிக்கப்படுகிறது.

தலையங்கம்

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பை எதிர்க்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு. இரு மொழிக் கொள்கை என்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு வைக்கும் ஒரு திட்டத்திற்கு ஆங்கிலத்தில்தான் பெயர் வைக்க வேண்டுமா? இந்தத் திட்டம் இப்போது எதற்காக? இதன் நோக்கம் என்ன? அந்த பவுண்டேசனுக்கு தலைவர் டிவிஎஸ் குரூப்பைச் சேர்ந்த வேணு சீனிவாசன். இவர்தான் இந்த பவுண்டேசன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம் படுத்தப் போகிறார்.