கருத்தியல் திணிக்கப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட புதிய கல்விக் கொள்கை 2020 மிகவும் வசதியாக பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கடுமையான, பெரிய அளவிலான திருத்தங்களை பள்ளிப்பாடப் புத்தகங்களில் மேற்கொள்வதன் மூலம் அது அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் கலை மற்றும் இலக்கியத்தில், அறிவியல் மற்றும் சமூக நெறிமுறைகளில், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிர்வாக நெறிமுறைகளில் என எல்லாவற்றிலும் முஸ்லீம் 'படையெடுப்பாளர்களுடைய ஆழமான பங்களிப்புகளை அழிப்பது தேசியவாதத்தின் பெரும் சாதனை என வெளிப்படையாக, பெருமையாகச் செயல்பட்டார்கள் என்றால், தற்போது முடிந்தவரை தந்திரமாக சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நீக்கியுள்ளார்கள். இதற்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலாக எழுந்த விமர்சனத்தின் காரணமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்னிப்பு கோரி விளக்கம் அளித்தார்கள். பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அது நீக்கப்பட்டிருப்பினும், மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் இந்தப் பகுதியை, முன் போலவே படிப்பார்கள் என்றனர். இதில் மறைக்கப்பட்ட உண்மை என்னவென்றால், யாரெல்லாம் அ) பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் அறிவியல் பாடத்தில் சேர வேண்டும் மற்றும் ஆ) உயர் வகுப்புகளில் உயிரியல் பாடத்தை தங்கள் பாடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு அச் சந்தர்ப்பம் வாய்க்கும் என்பதுதான். யாரெல்லாம் இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றவில்லையோ அவர்களுக்கு இச் சந்தர்ப்பம் கிடைக்காது அடிப்படை அறிவியல் பற்றிப் படிப்பதற்கான உரிமை பறிக்கப்பட்டுவிடும். அதேபோல், உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்கு பின்னர் சூழ்நிலைகளின் கட்டாயத்தால் பள்ளிப் படிப்போடு நிறுத்தப்படும் பெருவாரியான மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
இவ்வாறாக, (வரலாற்றுப் பாடத்திட்டம் போலவே) முடமாக்கப்பட்ட உயிரியல் பாடத் திட்டத்தால் பெரும்பான்மை யான மாணவர்களுக்கு தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதில் அடிப்படையான மிக முக்கியமான பகுதியை கற்க வாய்ப்பில்லாமல் போய்விடும். திட்டத்தை சேறாக்கி, தேசத்தை ஏமாற்றும் தந்திர வழியாகும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் 'மாணவர்களுக்குச் சுமையைக் குறைப்பதற்கு' இந்த மாற்றங்கள் தற்காலிகமாக அறிமுகப்படுத் தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், பள்ளிக்கூடங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிய பின்னரும் இந்த மாற்றங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இது (மக்களுக்கான, இப்போது மாணவர்களுக்கான ) ஒரு பிரச்ச னையை, மாணவர்களைப் பலிகடாவாக்கி தனக்குச் (பாஜகவுக்குச்) சாதகமாக மாற்றிக் கொள்ளும் மோடி பாணியின் மற்றொரு துர்நாற்றமடிக்கும் நிகழ்வாகும்.
எப்படியிருந்தாலும், 'இஸ்லாம் அபாயம்' பற்றிப் பேசும் வெறியர்கள் ஒரு இந்துத்துவ கண்ணோட்டத்துடன் இந்திய வரலாற்றைச் சிதைக்கவும் சீர்குலைக்கவும் ஏன் தலைகீழாக நிற்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எதற்காக அறிவியல் மீதான தாக்குதல்கள்? நல்லது, சீர்குலைக்கப்பட்ட அடக்குமுறை மதவாதத்தை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டு வெறுப்பு காட்டுவது, எந்திரத்தனமான ஒழுக்கத்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் காட்டுவது ஆகியவற்றின் மூலம் பாசிஸ்டுகள் தங்களது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறார்கள்.
மாபெரும் அறிவியல் அறிஞர்கள் பலர் இருக்க டார்வினை ஏன் முதலில் குறி வைக்கி றார்கள்? ஏனென்றால், அவருடைய கண்டுபிடிப் பானது (அவருடைய தனிப்பட்ட ஆளுமை பற்றி அல்ல) மதத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்து வளமாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்க ளுக்கு மிகவும் வலிமையான எதிரியாக இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி விவரமாகப் பார்ப்போம்.
டார்வின், அவருடைய முன்னோடிகள் மற்றும் சமகால உயிரியல் அறிஞர்களின் வேலைகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய நம்பிக்கையான இந்த பூமி, அதில் உள்ள தாவரங்கள், மனித இனம் உள்ளிட்ட மிருகங்கள் அனைத்தும் கடவுளால், அவர் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், உருவாக்கப்பட்டது என்பதை அடித்து நொறுக் கினார். வாழ்க்கையானது அதன் புராதான வடிவத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, அதனுடைய பரிணாம மானது இயற்கையாக தெய்வீகத் தேர்வால் அல்ல- எண்ணற்ற உயர்ந்த வடிவங்களுக்குள் ளாகி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்துக் காண்பித்தார். அவர் கடவுளை மறுத்து ஒரு வார்த்தை கூட உச்சரித்த தில்லை, ஆனால் அவருடைய அறிவியல் படைப்பானது கடவுள் என்பது கற்பனையானது எனக் காட்டியது.
பொது மக்களைப் பொறுத்தவரை இது மிகவும் மோசமானதும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும் பரிதாபகரமாக அதிர்ச்சி யளிக்கக் கூடியதுமாகும். ஆனால், மத அடிப் படைவாதிகளும் குழப்பவாதக் குழுக்களும் இவர் தங்களுக்கு நேரடியாகச் சவால் விடுகிறார் என்பதை உடனடியாகப் புரிந்து கொண்டார்கள். அவருடைய சமகாலத்தவர்களான கலிலியோ கையிலி மற்றும் புரூனோ பவர் ஆகியோர் கடவுளை நிந்தித்த கொடூரக் குற்றம் புரிந்தவர் களாக சித்தரிக்கப்பட்டார்கள். 1859ல் வெளியி டப்பட்ட 'இயற்கைத் தேர்வின் மூலமாக உயிரினங்களின் தோற்றம்' புத்தகம் மிகப் பெரும் மரியாதையைப் பெற்று, உலகம் முழுவதும் உள்ள இருண்ட, பிற்போக்குத்தன மான பின்தங்கிய சக்திகளின் தலைமுறைகளுக்கு நிரந்தரமான அடியைக் கொடுத்தது.
ஆனால், அந்த நேரத்தில் நல்ல மனம் கொண்டவர்களால் சகாப்தம் படைக்கும் இத் தொகுப்பானது அன்புடன் வரவேற்கப்பட்டது. அவர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய 'அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு' என்ற புத்தகமும் டார்வினின் மகத்தான படைப்பு வெளிவந்த அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. மார்க்ஸும் ஏங்கல்ஸும் அந்த புத்தகத்தை பெரும் ஆச்சரியத்துடன் ஆழ்ந்து கவனித்துப் படித்தார்கள். அதற்கடுத்த ஆண்டு ஏங்கல்ஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் "நமது பார்வைகளுக்கான இயற்கை வரலாற்று அடித்தளத்தை இந்த புத்தகம் கொண்டுள்ளது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதி 1873ல் வெளியிடப் பட்டபோது, ஒரு புத்தகத்தில் தனது கையொப் பத்தைப் போட்டு அதை டார்வினுக்கு அனுப்பி வைத்தார் மார்க்ஸ். பின்னர் டார்வின், மார்க்ஸிற்கு நன்றி தெரிவித்து, "நம்முடைய ஆய்வுகள் வெவ்வேறானவை என்ற போதிலும், நாம் இருவரும் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள தீவிரமாக விரும்புகிறோம் என்றும் நீண்ட கால நோக்கில் இது மனித குலத்தின் மகிழ்ச்சிக்கு நிச்சயமாக அணிசேர்க்கும் என்றும் நான் நம்புகிறேன்' என எழுதியிருந்தார்.
அது எவ்வளவு உண்மையானது! ஒவ்வொரு விசயத்திலும் இருவருக்குமிடைய பல மைல்கள் தூரம் என்றிருந்தாலும், அறிவொளி அளிக்கும் பெரும் பணியில், அதன் மூலம் மனிதகுல விடுதலைக்கான பணியில் இருவரும் தோழர் களாக இருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏங்கல்ஸ், பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய வாக்கியமான "இயற்கையின் இயல்பான வளர்ச்சியின் விதியை டார்வின் கண்டுபிடித்தார் என்றால், மார்க்ஸ் மனித வரலாற்றின் வளர்ச்சியின் விதியைக் கண்டு பிடித்தார்" என்று இருவரையும் இணைத்துக் குறிப்பிட்டார்.
இதனால்தான், மார்க்ஸூம் டார்வினும் எல்லா இடங்களிலும் பொதுவான எதிரிகளைக் கொண்டுள்ளார்கள். 'ஆச்சார்யா' தீன தயாள் உபாத்யாயா, டார்வின் கோட்பாட்டிற்கு எதிராக, அவருடைய (பாஜகவின்) தத்துவத்தை முன் வைத்தார்: "பொருத்தப்பாடுடன் உயிர்வாழ்தலே வாழ்க்கையின் ஒரே அடிப்படை என்பது டார்வின் கொள்கையாகும். ஆனால், அனைத்து வாழ்வின் அடிப்படை ஒற்றுமைதான் என்பதை இந்த நாட்டில் நாம் பார்த்தோம்...' என்னவொரு தகுதியில்லாத முட்டாள்தனமான ஒரு மறுப்பு! அந்த மாபெரும் உயிரியியல் அறிஞர், வாழ்க்கையின் ஒரே அடிப்படை பொருத்தப்பாடுடன் உயிர்வாழ்தல் என்று ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை.
அறிவியல் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்தது. சங்கிகள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசின் நேரடி ஆதரவுடன் அது ஆழப்படுத் தப்பட்டது. 2014ல் பிரதமர் மோடி பந்தை முதலில் உருட்டிவிட்டார். பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கு பிள்ளையாரின் யானைத் தலையும் மரபியல் அறிவியல் இருந்ததற்கு கர்ணனின் மர்மமான பிறப்பும் சாட்சிகளாகும் என்றார். கட்டுக் கதைகளும் பொய்ச் செய்திகளும் கணக்கில் லாமல் பரப்பப்பட்டன. 2018ல் மனித வள முன்னேற்ற அமைச்சராக இருந்த சத்யபால் சிங் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளி யிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது அறிவியல் ரீதியாக தவறானதாகும். ஏனென்றால், ஒரு குரங்கு ஒரு மனிதனாக மாறியதை ஒருவரும் பார்த்ததில்லை" என்றார். இந்தியாவில் உள்ள மூன்று அடிப்படை அறிவியலுக்கான கல்விக்கூடங்கள் ஒன்று சேர்ந்து, மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புக்கு எதிரான வெக்கக் கேடான இந்தத் தாக்குதலை கண்டித்தன. இந்திய தேசிய அறிவியல் கல்விக் கூடத்தின் முன்னாள் தலைவரும் சர்வதேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயிரியியல் அறிஞருமான ராகவேந்திர கடாக்கர், சத்யபால் சிங்கின் பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமானது அறிவியல் பற்றியது அல்ல, அரசியல் பற்றியது என்று குறிப்பிட்டார். என்டிடிவிக்கு பேட்டி யளிக்கும் போது, அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும் அரசியல் ரீதியாக துருவச் சேர்க்கை உருவாக்குவது உண்மையிலேயே ஆபத்தாகும். அதை நாம் எதிர்த்தாகவேண்டும் என்றார். எதிர்ப்புகள் காரணமாக, அரசாங்கம் பின்வாங்கியது, அரசாங்கத்திற்கும் அமைச்சரின் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை என்றது.
ஆனால், அந்த பின்வாங்குதல் தற்காலிகமானது, இன்னும் நன்கு திட்டமிட்ட பிரச்சாரத் திற்கான முன்னோட்டம். பாஜக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தது, இம் முறை அதன் சொந்த பலத்தில் வந்தது. பண்டைக்கால அறிவு, ஆராய்ச்சி என்ற பெயரில் கட்டுக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் நோக்கத்துடன் ஆராய்ச்சி மையங்களில், பல்கலைக் கழகங் களில் போலி அறிவியல் நடவடிக்கைகளை துடிப்புடன் செயல்படுத்தியதைக் கண்டோம். 2019லேயே, ஆந்திரப் பிரதேச பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நாகேஷ்வர ராவ், 106வது இந்திய அறிவியல் மாநாட்டின் மேடையை தன் கருத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். டார்வின் கோட்பாட்டைவிட தசாவதாரம் (விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் வாயிலாக மனிதர்களின் பரிணாமம்) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைக் கொடுத்துள்ளது என்றார். அந்தக் கூட்டத்தில், நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகளை நீக்கும் தாள்கள் கூட முன் வைக்கப்பட்டன. உயர் மட்டத்திலிருப்பவர் களின் வழிகாட்டுதலின்படி, நிதி வழங்கும் நிறுவனங்களான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் போன்றவை, பசுவின் மூத்திரம், பசுவின் சாணம், ஆன்மீக விவசாயம், மருத்துவ ஜோசியம் உள்ளிட்ட பண்டைய அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு பெரும் ஆதரவு அளித்தன. நாம் மேலே விவரித்தபடி இது புதிதாக வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2020ன் வெற்றிகரமான சுற்றுசூழல் பகுதியாகும்.
இம்முறையும் கூட, எதிர்ப்புகள் செத்துப் போய்விடவில்லை. இந்திய அளவில் சுதந்திர மான அறிவியல் அறிஞர்கள் மற்றும் கல்வி யாளர்களைக் கொண்ட 'பிரேக்த்ரு சயின்ஸ் சொஸைடி' என்கிற குழு ஒன்று 1800க்கும் அதிகமான அறிவியல் அறிஞர்கள், அறிவியல் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்ட ஒரு திறந்த மடலை இந்த ஆண்டு 20ம் தேதி எழுதியுள்ளார்கள். பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்வதை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை விவரித் துள்ளார்கள். அதில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்...
" உயிரியல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிந்து கொள்வது புரிந்து கொள்வது என்பது உயிரியல் பாடத்தின் ஒரு பகுதியாக அல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் இவ்வுலகைப் புரிந்து கொள்வதற்கான முக்கியமான ஒன்றாகும். பரிணாம உயரியலானது அறிவியலின் ஒரு பகுதியாகும். சமூகங்களில், தேசங்களில் மருத்துவம் முதல் மருந்து கண்டுபிடிப்பு, தொற்று நோயியல், சூழலியல், மனோதத்துவம் வரை வரிசையாக நாம் சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். மேலும் வாழ்க்கை அரங்கில் மனிதர்கள், அவர்களின் வாழ்விடங்கள் தொடர்பான நம்முடைய புரிதல்கள் பற்றியும் பேசுகிறது. நம்மில் அநேகர் வெளிப்படையாக அதை உணரவில்லை என்றபோதிலும் இயற்கைத் தேர்வுக் கொள்கைகள், தொற்றுநோய் பரவல்கள் எவ்வாறு ஏற்படுகின்றன அல்லது ஏன் சில உயிரனங்கள் அழிந்து போகின்றன உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன.
பரிணாம வளர்ச்சியின் புரிதல் என்பது மிக முக்கியமாக அறிவியல் மனப்பான்மையையும் உலகளாவிய பகுத்தறிவுப் பார்வையையும் கட்டமைக்கிறது. டார்வினின் வலிமிகுந்த கண்டுபிடிப்புகளும் அவருடைய கூரிய நுண்ணறி வுகளும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கச் செய்தது. அது மாணவர்களுக்கு அறிவியல் செயல்முறையையும் விமர்சனபூர்வ சிந்தனையின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுக்கிறது. பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் உயிரியல் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமான இந்தப் பாடத்தைப் பற்றி ஒரு படிப்பும் இல்லாமல் செய்வது கல்வியின் கேலிக் கூத்தாகும்.
இதன் கீழ்க் கையொப்பமிட்டுள்ள அறிவியல் அறிஞர் கள், அறிவியல் ஆசிரி யர்கள், கல்வியாளர் கள், அறிவியலை பிரபலப்படுத்து பவர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள்... ஆகிய நாங்கள் பள்ளிக் கல்வியில் மீண்டும் டார்வின் கோட்பாட்டை கொண்டு வரும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.”
நாம் இப்போது ஓர் அழைப்பு விடுக்க வேண்டியதிருக்கிறது. மதச்சார்பின்மை கொண்ட, ஒத்திசைவு மதிப்புகள் கொண்ட, அறிவியல் மனப்பான்மை கொண்ட நாம் மிகவும் போற்றுகின்ற நம் அன்புக்குரிய தேசத்தை இருண்ட பள்ளத் திற்குள் கொஞ்சம் கொஞ்ச மாகத் தள்ளுவதற்கு நாம் அனுமதிக்கலாமா? முடியாது. நாம் அனைவரும், குறிப்பாக நம்முடைய மாணவ மற்றும் இளந்தோழர்கள், நாம் பணிபுரியும் களங்களில் இருந்து 18000த்திற்கும் அதிகமாகக் கையொப்பமிட்ட வர்களுடன் இணைந்து, அறியாமை, தெளிவின்மை மற்றும் அறிவியலுக்கு எதிரான ரதத்தை திருப்பி அனுப்பிடுவோம். ஆரோக்கிய மான கல்விக்காக, அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்காக நாம் போராடுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)