மோடியின் பிஜேபி அரசு, கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கல்வி மாஃபியாக்களுக்கு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விலை கூவி விற்று வருகிறது.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் திறக்கிரோம், வெளிநாட்டுக் கல்வியை இந்தியாவில் வழங்குகிறோம் என்ற பெயரில், மேலை நாடுகளின் கல்வி குப்பைக் கூடமாய் இந்தியக் கல்வி முறை மாற்றப்படுகிறது. மேலை நாடுகளின் தரமற்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்விச் சந்தையில் இடம் அளிக்கப்படுகிறது.
கல்வி எட்டாக்கனியாகி வருகிறது. கல்விக் கட்டணங்கள் விண்ணுயரப் பறக்கிறது. இல்லம் தேடி கல்வி என்ற பெயரில், பள்ளி - கல்லூரிக் கல்வியை, முறைசார் கல்வியை ஒழித்திடும் நவீன திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோலோச்சும் இடமாக அது மாறி வருகிறது.
உயர்கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் தொழிலாளர் பயிற்சிக் கூடங்களாக மாற்றப்படுகிறது. அறிவுசார் கல்வி, அறிவை வளர்க்கும் கல்வி என்பதற்குப் பதிலாக, கேள்வி கேட்க இயலாத, அடிமைக் கல்வி முறைக்கு வித்திடுகிறது புதிய கல்விக் கொள்கை. ஆங்கில ஏகாதிபத்திய மெக்காலே கல்வி முறையைப் போலவே, இன்று மோடி-ஷா கல்வி முறை புகுத்தப்படுகிறது.
கல்வியில் ஆள்வோர் - அடிமை; அறிவாளி நிர்வாகி -மூடத் தொழிலாளி; சிந்திக்கும் செல்வந்தர் மக்கள் - சொல்லும் வேலை செய்யும் எடுபிடிகள்
என்பதாக கல்வியில் ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலை, திட்டமிட்டு உருவாக்கப் படுகிறது.
இந்தித் திணிப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டே, அதன் கூடவே செத்த மொழி சமஸ்கிருத திணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. வேலை இல்லா இளைஞர் பட்டாளத்தை வளர்ப்பதன் மூலம் காவிப் படைக்கு ஆள் சேர்க்கும் திட்டம் அரங்கேறுகிறது. அக்னிபத் என்ற பெயரில் ராணுவத்தி லும் காண்ட்ராக்ட் முறை. இளைஞர்களின் நாட்டுப் பற்றை வியாபாரம் செய்ய எத்தனிக்கிறார் மோடி.
திமுக அரசு சொல்லும் தமிழக கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட்டுகளுக்கு தொழிலாளரை சப்ளை செய்யும் கொள்கையாக இருக்கக் கூடாது. அரசு கல்வி கூடங்களை திறப்பதாக, தனியார் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்துவதாக இருக்க வேண்டும்.
கல்வி என்பது மாணவர்களின் பலபரிமான அறிவாற்றலை, சிந்தனைத் திறனை, எதையும் கேள்வி கேட்கும் விமர்சன மனப்பான்மையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் சார் கல்வி முறையாக இருக்க வேண்டும்.
கல்விக்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லாத நிலையை ஒழித்து, அறிவாற்றலை வளர்க்கும், வேலை வாய்ப்புகளை வளர்க்கும் கல்வி முறையாக இருக்க வேண்டும்.
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் சமூகக் கூடம், (அப்பல்லோ மருத்துவ மனை & ஜாஸ் பிளக்ஸ் தியேட்டர் அருகே) கலைஞர் கருணாநிதி நகர், மதுரை.