தோழர் வினோத் மிஸ்ராவின் 26வது நினைவுநாள்:

ரலாற்றின் முக்கியமான பிரச்சனைகள் எப்போதும் தெருக்களில்தான் தீர்வு காணப்படுகின்றன என்று தோழர் வினோத் மிஸ்ரா, 1998 டிசம்பரில் மத்தியக் கமிட்டிக்கு  அளித்த இறுதிக் குறிப்பின் மூலம் நமக்கு நினைவூட்டியிருந்தார். ஏற்கனவே, தனது அருவறுப்பான தலையைத் தூக்கத் தொடங்கிவிட்டிருந்த பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கெதிராக  அனைத்தும் தழுவிய முன்முயற்சியை மேற்கொள்ளுமாறும், போராட்டத்தை தீவிரப்படுத்துமாறும் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு தோழர் வி எம் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடி பள்ளிகளை கல்வித்துறையோடு இணைப்பதை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இகக(மாலெ) வலியுறுத்தல்!

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில விழிப்புணர்வு, உயர்நிலை கண்காணிப்புக் குழுக்கூட்டங்களில் வந்த வேண்டுகோள்களை அடுத்து ஆதிதிராவிடர்/பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், இந்து அறநிலையத்துறை, வனத்துறை பள்ளி, கல்லூரிகளை அரசின் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது என்றும் இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி பாதுகாக்கப்படும் என்றும் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் என்ற முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வுகளை அரித்துப்போகச் செய்யும்: இகக(மாலெ)

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் கடிதத்திற்கு இகக(மாலெ) அளித்துள்ள பதிலில் இந்த முன்மொழிவு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத் துக்கு விரோதமானது என்று சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் சாவு மணி அடிக்கிற செயலாகும்.

தோழர் என்கே: நினைவுகள் அழிவதில்லை

தோழர் என்கே மீது பலருக்கும் மிக உயர்ந்த மரியாதை ஏற்பட்டதற்குக் காரணம் அவர் மிகமிக எளிமையானவர். வாழ்நாள் முழுக்க மிகமிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து உதாரணமாக திகழ்ந்தவர். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர். அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர்களை போராட்டங்களில் அணிதிரட்டியவர் என்பது ஆகும்.

பிரியாவிடை தோழர் என். கே

நான் மட்டுமல்ல வேறு யாரும் கூட அதை நம்ப மறுப்பார்கள். ஆனால், அது திடீரென்று நடந்து முடிந்து விட்டது. நமது இதயத்தை சுக்குநூறாக்கும் உண்மை செய்தியாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கு தோழர்.என்.கே வின் நண்பர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கும் கூட. அதேபோல் நாட்டுப்புற, நகர்ப்புற தொழிலாளர்களுக்கு, பிரிக்கால் தொழிலாளர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள், திட்டத் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அவரை வெகுமக்கள் தலைவராகப் பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைக்காக நிற்கக்கூடிய தலைவராகப் பார்த்தார்கள்.

தோழர்.என்.கே.நடராஜன் அவர்களுக்கு செவ்வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக் கமிட்டி, தோழர் என்.கேவின் திடீர் மரணத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.

நீண்ட கால கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் என்.கே, தமிழக கட்சி வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சிப் பொறுப்புகளை முன்மாதிரியான கடப்பாற்றுடனும் விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வந்திருக்கிறார். அவரது 40 ஆண்டுகால நீடித்த கட்சி வாழ்க்கையில் அவர் தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடப்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பாளராக பல துறைகளிலும் பல மாவட்டங்களிலும் செயலாற்றி இருக்கிறார்.