முதுநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதி ஸீரோ பெர்சன்டைல் : ஒன்றிய பாஜக அரசின் சமூக அநீதி

"முதுநிலை மருத்துவ பட்ட படிப்புக்கான மூன்றாவது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு '0' பெர்சைன்டைல் இருந்தால் போதும்" என்று தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவ தற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப் பட்டிருக்கிறது.

*பூஜ்ஜியத்திற்கு கீழே மதிப்பெண் போனாலும் இடங்கள் :

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான சட்டம் 2023ஐ உடனே திரும்பப்பெறுக !

பரந்தூர் விமானநிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள், எட்டுவழிச் சாலை எனத் தமிழ்நாட்டில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், பொது மக்கள் வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுவரும் பின்னணியில், கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) என்ற சட்டம் 2023" (TamilNadu Land Consolidation (for Special Projects) Act 2023) விவசாயிகள் விரோத, சுற்றுச்சூழல் விரோத மசோதா சட்டமன்றத்த

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், மன்னர்கள் காலச் செங்கோல்! தமிழர் பெருமிதமா, மதப் பண்பாட்டின் மீட்டுருவாக்கமா ?

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ம் தேதியன்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதும், அதேநாளில் புதிய நாடாளுமன்றம் ஆரவாரமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் சைவ மடாதிபதிகள் / ஆதீனங்கள், சைவப் பண்டாரங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். 'பழங்குடியினரான குடியரசு தலைவர் விழாவிற்கு அழைக்கப்படவில்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளும் விழாவைப் புறக்கணித்தன.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் :

தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற பாஜக தீவிரமான முயற்சி களை மேற்கொண்டு வருகிறது; மற்றொருபுறம், ஆர்எஸ்எஸ் பாரத (இந்துத்துவா) கலாச்சாரத்துடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை இணைக்க காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புனித யாத்திரைப் பயணங்களாக தமிழ்நாட்டு மக்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கும், குஜராத்திற்கும் அழைத்துச் செல்வதுடன், இந்துத்துவா கருத்தியலை புகுத்தும் கோயில் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !