வழக்கறிஞர்களின் உரிமையை முடக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் முகம்மது யூசுப் மற்றும் முகம்மது அப்பாஸ் இருவரும் தேசிய புலனாய்வு முகமை(NIA)யால் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜரானார்கள் என்பதற்காக அவர்களையும் குற்றவாளிகள் ஆக்கி கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. இது வழக்கறிஞர்களின் உரிமையை மட்டுமின்றி வழக்கறிஞர்கள் தொழிலையே முடக்கும் செயல் ஆகும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும் அச்சட்டத்தின் படி குற்றவாளிகள் என்கிற சரத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மிகவும் மோசமான சரத்தாகும்.