மத நாடாளுமன்றம் என்ற பெயரில் நடத்தப்படும்
வெறுப்புக் கூட்டங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவோம்
நாட்டின் தலைநகர் டெல்லியில், உத்ரகாண்ட் ஹரித்துவாரில், சத்திஸ்கர் ராய்பூரில் நடத்தப்பட்ட கூட்டங்களில் காவி உடைத் தலைவர்கள் இஸ்லாமியர்களை இனப்படு கொலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். மேலும் இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். மத நாடாளுமன்றம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டங்கள், பயங்கரவாத வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்களால் தலைமை தாங்கப்பட்டன. இவர்கள் தீவிரவாத, பயங்கரவாத கருத்துக்களை விதைக்கும் பயிற்சிகளை வெளிப்படையாகவே நடத்து கிறார்கள். இந்து குழந்தைகளுக்கு ஆயுதங்களைக் கையாளக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அவர்கள், காந்தியைக் கொன்ற, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதியான கோட்சேவின் கருத்துக்கு தாங்கள் விசுவாசமான வர்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கி றார்கள். எல்லாரையும் உள்ளடக்கிய ஜனநாயக இந்தியாவை கோட்சேவின் இந்தியாவாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். இவர்களது வார்த்தைகள்தான் பாஜகவின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அதன் தலைவர்களிடமும் பிரதிபலிக்கின்றன. பெங்களூரூவைச் சேர்ந்த பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒட்டுமொத்தமாக தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்பவேண்டும் என்றார். பின்னர் அந்த பிரச்சனைக்குரிய அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு தொடங்கும் போது, பாஜகவாலும் அதன் அரசாங்கங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட சங்கிகளின் பயங்கரவாத வன்முறை நிகழ்ச்சி நிரல் இந்தியா எதிர் கொள்ளும் மிகப் பெரும் அபாயமாக மாறியுள்ளது.
நாட்டில் வேலைகளுக்காக, பட்டினியை ஒழிப்பதற்காக, சுகாதாரம், கல்வி, சமூகநீதி, சமத்துவம் ஆகிய கோரிக்கைகளுக்காக விவசாயி கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் எல்லாரும் நாடாளுமன்றங்களை, சட்டமன் றங்களை வீதிகளில் நடத்திக் கொண்டி ருக்கும் போது, ஏன் மதத்தை, நம்பிக்கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வெறுப்புக் கூட்டங்களை நடத்துவதில் மும்முரமாக இருக்கின்றன இந்தச் சங்கிக் கும்பல்கள்?. பதில் வெளிப்படையானது. அவர்களுடைய இரண்டு கண்களும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களில் இருக்கின்றன. வேலை, விவசாயம், சுகாதாரம், கல்வி என அனைத்து முனைகளிலும் இந்த பாஜகவின் குற்றமயமான தோல்வியை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன்தான் இந்த வெறுப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேவேளை, எல்லாரையும் உள்ளடக்கிய ஜனநாயக இந்தியாவை ஏதேச்சதிகார இந்து தேசமாக மாற்றும் சங்கிகளின் கேடு கெட்ட நோக்கத்திற்கும் இந்தக் கூட்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
பஜ்ரங்தள் போன்ற சங்கி அமைப்புகளுக்கும் முக்கிய இந்துத்துவ நிறுவனங்களுக்கும் இப்போது வெறுப்பை உமிழும் யதி நரசிம் மானந்த், சாத்வி அன்னபூர்ணா போன்றவர்கள் தலைமை தாங்குகிறார்கள். (ஜூனா அகடாவிற்கு நரசிம்மானந்த் தலைவர்). இந்துக் குழந்தைகளின் மனத்திற்குள் விஷத்தை விதைக்கும், அவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தும் இந்த ஆண், பெண் சாமியார்களின் செயல்தான் இந்துக்களுக்கு மிகப் பெரிய அபாயமாகும்.
இந்தத் தலைவர்கள் இந்துக்கள் எல்லாரும் இஸ்லாமிய வியாபாரிகளை, வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். கோட்சேயின்கருத்தை ஆரத் தழுவி ஆயுதம் ஏந்துங்கள். ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்தொழியுங்கள் என அழைப்பு விடுக்கிறார் கள். இதைப் பார்த்துக் கொண்டு சங்கராச்சாரி யார்களும் ஆச்சாரியர்களும் சத்குருக்களும் இன்னும் பல இந்து மதத் தலைவர்களும் அமைதி காக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பின்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதமரும் உள்துறை அமைச் சரும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் புனித நாள். எல்லாருக்குமே விழாக் காலம். ஆனால், இந்தச் சங்கிகளோ கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் கொடும்பாவியை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களால் நடத்தப் படும் பள்ளிக்கூடங்கள் மற்றும் இதர நிறுவனங் கள் மீது இந்தச் சங்கிகள் வன்முறை வெறியாட்டம் நடத்துகிறார்கள். ஆதரவற்ற, செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கான நிதியை தடுத்து நிறுத்தியுள்ளது மோடி அரசு. இதோடு சேர்ந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரும் சங்கி பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாக்கப் படுகின்றனர்.
இந்திய மக்கள் மிக வேகமாக ஏமாற்ற மடைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தன்னுடைய தளத்தை இழந்து கொண்டிருக்கிறது. இமாசலப்பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தல் களில் பாஜக தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, சண்டிகார் மாநகராட்சித் தேர்தலில் பாஜக பெற்ற இடங்களிலும் சரி, வாக்குகளிலும் சரி படுதோல்வியைச் சந்தித்துள்ளது அதற்கான அறிகுறியாகும். மத வெறியைத் தூண்டுவதும் மத துருவச்சேர்க்கையுமே மோடி ஆட்சியின் கடைசிப் புகலிடமாக உள்ளது. விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலமாக விவசாய இயக்கங்கள், மற்ற மக்கள் போராட் டங்கள் ஒரு படி பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் போராட்டங்களால் உத்வேகம் பெற்ற உற்சாகமூட்டும் போராட்ட மனநிலையும் ஒருமைப்பாடும்கூட செயலற்றுப் போகும் என்று மோடி அரசு நம்புகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அதனுடைய மதவெறி விஷத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை ஒடுக்கி அதிகாரத்திலும் அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் தன்னுடைய பிடியை மறுஉறுதி செய்து கொள்ள முயற்சிக்கலாம்.
பாஜக தன்னுடைய நிகழ்ச்சி நிரலைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு தன்னுடைய சொந்த நிறுவனம் மற்றும் வலைப் பின்னல் மீது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் பலவீனத்திலும் பாஜக அல்லாத ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், காங்கிரஸில் உள்ள சில பிரிவுகளையும் தன்னுடைய சொந்த கருத்தாக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துகிறது. ராய்பூர் சம்பவத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டதும் பாகெல் அரசாங்கத்தின் அசட்டை யான அரைகுறை பதில்வினையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஆகவே, இந்துத்துவ நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைப்பாகி தீவிரமாகச் செயலாற்ற வேண்டியது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்கள் இயக்கத்திற்கும் ஒவ்வொரு குடிமகனுக் கும் கடமையாகும். சும்மா இருப்பது அதற்கு உடந்தையாகப் போவதன்றி வேறல்ல. பாஜகவால் தலைமை தாங்கப்படும் அபாய கரமான பயங்கரவாத பாராளுமன்றக் கூட்டங் களுக்கு எதிராக, ஒவ்வொரு மாநகரத் திலும் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சந்திலும் உள்ளூர்களிலும் எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டும். இதுவே புத்தாண்டின் தீர்மானமாக இருக்க வேண்டும்.
எம்எல் அப்டேட் தலையங்கம்
28 டிசம் 2021- 3 ஜன 2022
Image Thanks Justicemirror.com
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)