பீகாரில் இளைஞர்-மாணவர்களின் எழுச்சி

ஜனவரி 26 அன்று, நாடு குடியரசு தினக்கொண் டாட்டத்தில் மூழ்கி இருக்கும் போது, பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் வீதிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் போராட் டத்தில் குதித்தனர். பீகாரில், பல மணி நேரத்திற்கு பாட்னா ரயில் நிலையம் ஸ்தம்பித்தது. பாட்னா தவிர, நவாடா, முசாபர்பூர், பக்சர், சாசாராம், சீதாமரி, அரா, போஜ்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்வண்டி போக்குவரத்து பல மணி நேரங்களுக்கு தடை பட்டது. பல தொடர்வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டன அல்லது நேரம் மாற்றப்பட்டது. கயாவில், ராஜ்கிர்-& புதுதில்லி & ஷ்ரம்ஜீவி விரைவு வண்டியின் சிலபெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங் களில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை, இளைஞர்கள் எரித்தனர். உத்தரப்பிர தேசத்தில் போராடிய இளைஞர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது. அதில் பலர் காயமடைந்தனர்.

என்ன நடந்தது? ஏனிந்த போராட்டம்?

இருப்புப்பாதை ஆளெடுப்பு ஆணையம் (RRB), 2019 ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பு ஆணை வெளியிட்டது. அதன்மூலம், இருப்புப்பாதைத் துறையில் ரூ.19,900 முதல் ரூ.35,400 வரையிலான அடிப்படை மாத ஊதியத்திற்கு, தொழில்நுட்பம் சாராத 35,281 பணி இடங்களுக்கு ஆளெடுக்கப் போவதாக அறிவித்து இருந்தது. அதற்கு, 1.25 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், முதற்கட்ட தேர்வுகள் முடிந்து இரண்டாம் கட்டத்  தேர்வுகளுக்கு 7 லட்சம் பேர்களுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதாக முடிவுகள் ஜனவரி 15 அன்று, வெளியிடப்பட்டன. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக வேலைக்கு விண்ணப்பித் தவர்கள் புகார் சொல்கின்றனர். மேலும், ஆரம்ப அறிவிப்பில் இரண்டாம் கட்ட தேர்வுகள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை எனவும் சொல்கிறார்கள்.

இருப்புப்பாதை நிர்வாகமும், அரசாங்கத் தரப்பினரும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கி றார்கள். ஆனாலும், இந்தப் போராட்டங்களின் காரணமாக, முதல்கட்டத் தேர்வுகளை ரத்து செய்வதாக, இருப்புப்பாதை நிர்வாகம் அறிவித் துள்ளது. மேலும், இதுகுறித்து உயர்மட்ட விசார ணைக்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட பல மாணவர் அமைப்புகள்  ஜனவரி 28 அன்று பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அகில இந்திய மாணவர் கழகத்தின் பொதுச் செயலாளரும்பீகார் எம்.எல்..வுமான சந்தீப் சவுரவ், இருப்புப்பாதை அமைச்சகத்தால் அமைக்கப்பட் டுள்ள விசாரணைக்குழு என்பது, உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தல் வரை, போராட்டத்தை தள்ளிப்போடுவதற்கான சதி என்று கூறினார். மேலும், இப்பிரச்சினை தொடர்பாக, தேர்வு எழுதியவர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் உள்ளது என்றும் சொல்கிறார். இருப்புப்பாதை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும், முதலில் அறிவித்தது போன்று நான்காம் நிலை பணிக்கு ஒரு கட்டத் தேர்வு மட்டுமே வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும், வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அகில இந்திய மாணவர் கழகம் எழுப்பியுள்ளது.

நாட்டில், வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு, கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என  2014 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் பிஜேபி சொன்னதை அவர்கள் வேண்டு மானால் மறந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டின் வேலையற்ற இளைஞர்கள் மறக்கவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் மட்டுமே, சுமார் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என தங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மைய நிறுவனத்தின், முதன்மை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் தெரிவித் துள்ளார். வேலையில்லா விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் சொல்கிறார். இந்தப் பின்னணியில் தான் மாணவர், இளைஞர்கள் தங்கள் கோபத்தை போராட்டமாக வெளிப்படுத்தி உள்ளார் கள்.

பாசிச பிஜேபி அரசாங்கத்திற்கு எதிராக, 2020ல், குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்ட இயக்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2021ல், விவசாயிகளின் போராட்ட இயக்கம், தற்போது வேலை வாய்ப்புக்காக 2022ல், இளைஞர்-மாணவர்களின் போராட்ட இயக்கம் என செயலற்று இருக்கும் எதிர்க் கட்சிகளுக்கு, மக்கள், தங்கள் போராட்ட இயக்கங்களின் மூலம் வழிகாட்டு கிறார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்னானது எனக் கேட்டதற்கு பக்கோடா விற்று வாழுங்கள் எனத் திமிராக பதில் சொன்னவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த ஆணவப் போக்கிற்கு இந்தியாவின் இளைஞர்-&மாணவர்கள் முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது-செந்தில்