ஹிஜாப் அணிந்திருக்கும் முஸ்லிம் மாணவிகளைக் குறிவைத்துத் தனிமைப்படுத்துவது குறித்த பெண்ணியவாதிகள், ஜனநாயக அமைப்புகள், தனிநபர்களின் அறிக்கை
1. கடலோர கர்நாடகாவில் துவங்கி, மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிகழ்வான, வகுப்பறைகளிலும், கல்வி வளாகங்களிலும், ஹிஜாப் மீதான தடை என்பது ஒரு வெறுப்புக் குற்றமாகும். மாட்டுக்கறி வைத்திருப்பது, முஸ்லிம்கள் குழுவாக நமாஸ் செய்வது, பாங்கு ஓதுவது, குல்லா அணிவது, உருது மொழி பேசுவது போன்ற பல்வேறு செயல்களை சாக்குப்போக்குகளாகச் சொல்லி இந்து மேலாதிக்கவாதிகள், முஸ்லிம்கள் மீது கும்பல் படுகொலைகள்/தனிமைப்படுத்துதல்/விலக்கி வைத்தல் ஆகியவைகளை நிகழ்த்து கிறார்கள். இந்து மேலாதிக்கவாதிகள், முஸ்லிம் பெண்களை "இணைய வெளியில் ஏலம் விடுதல்", அவர்களின் பாலியல் மற்றும் மகப் பேறு உரிமையை அடிமைப்படுத்த அறைகூவல் விடுத்தல் ஆகிய தொடர் நடவடிக்கைகளின் வரிசையில், பிரிவினையைத் திணிப்பதற்கும், முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்துவதற்குமான சமீபத்திய சாக்குப்போக்கு ஹிஜாப் ஆகும்.
2. கர்நாடகா மாநிலம் மாண்டியாவிலிருந்து வந்த காணொளியில் காவி துண்டு அணிந்திருந்த கும்பல் ஹிஜாப்/பர்தா அணிந்திருந்த ஒரு பெண்ணைச் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு அவரைப் பயமுறுத்தியது, முஸ்லிம்கள் மீதான கும்பல் தாக்குதல்களுக்கு ஹிஜாப் எப்படி ஒரு எளிதான அடுத்த சாக்குபோக்காக அமையும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
3.பள்ளிகளும், கல்லூரிகளும் ஒருமைத்துவத் திற்குப் பதிலாக பன்மைத்துவத்தை வளர்க்கவே இந்திய அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருக்கிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மாணவர்களுக்கு இடையே உள்ள மாறுபட்ட, ஏற்றத்தாழ்வான பொருளாதார வர்க்க வேறுபாடுகளைக் குறைக்கவே கல்வி நிலையங்களில் சீருடைகள் உள்ளன. ஒரு பன்மைக் கலாச்சார நாட்டில் ஒருமை கலாச்சாரத்தை திணிப்பதற்காக அல்ல. இதற்காகத்தான் வகுப்பறைகளில் மட்டுமல்ல, காவல்துறையிலும், இராணுவத்திலும் கூட சீக்கியர்கள் தலைப்பாகை (டர்பன்) அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கா கவேத்தான் இந்து மாணவர்கள் எந்த விமர்சனமும், சர்ச்சையுமின்றி பள்ளி, கல்லூரிச் சீருடைகளுடன் பொட்டு, திலகம், திருநீறு, நாமம் வைத்துக்கொள்கிறார்கள். அதுபோலவே, முஸ்லிம் மாணவிகள் அவர்களுடைய சீருடைக ளுடன் ஹிஜாப் அணிந்து கொள்வது நிகழ வேண்டும்.
4. அனேகமாக, உடுப்பியிலுள்ள கல்லூரிகள் ஒன்றின் விதிமுறைகள் சீருடையின் வண்ணத் தோடு பொருத்தமாக இருக்கும் வரை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொள்ள அனுமதி வழங்குகிறது. கல்வி நிலையங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இடையூறுகளுக்கு உண்மையான காரணம் ஹிஜாப் அல்ல. இந்து மேலாதிக்கவாத அமைப்புகள் ஹிஜாபை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு காவித் துண்டுகளுடன் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்கள் தான் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து விட்டன. ஆக, காவித்துண்டுகள், ஹிஜாப் ஆகிய இரண்டையுமே தடை செய்வதென்பது நியாயமான, நீதியான தீர்வல்ல. ஏனென்றால், சில முஸ்லிம் பெண்கள் வழக்கமாக ஹிஜாப் அணிவதை போலன்றி, ஹிஜாப் மீதான தடையில் வெற்றி காணவும், முஸ்லிம் பெண்களை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்து மேலாதிக்கவாதிகள் இந்த நிகழ்வுகளில் காவி துண்டுகளை அணிந்தனர்.
5. ஹிஜாப் அணிந்திருக்கும் முஸ்லிம் மாணவிகளைத் தனி வகுப்பறைகளில் அமர வைப்பது அல்லது அவர்கள் விரும்பும் முஸ்லிம் களால் நடத்தப்படக்கூடிய கல்லூரிகளுக்கு அவர்களை மாற்றுவது என்பது பிரிவினையை தூண்டுவதன்றி வேறல்ல. கடலோர கர்நாடகா வில் 2008 லிருந்து, இந்து மேலாதிக்கக் குழுக்கள் பிரிவினையைத் திணிப்பதற்காக வன்முறை களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். மேலும், இந்துக்களும், முஸ்லீம்களும் வகுப்பறைத் தோழர்களாக, நண்பர்களாக, காதலர்களாக ஒன்றிணைந்து இருப்பதைத் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார்கள். இதற்கிணையாக, மதுவிடுதி களுக்குச் செல்லும், "மேற்கத்திய" உடையணியும், முஸ்லிம் ஆண்களைக் காதலிக்கும்/திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் மீதும், இந்து மேலாதிக்கக் குழுக்கள் தீவிரத் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள் என்பதையும் கட்டாயமாக நாம் நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கெதிரான வெறுப்புக் குற்றங்களும், முஸ்லிம், இந்துப் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வெறுப்புக் குற்றங்களும் - ஒரே இந்து மேலாதிக்கவாத குற்றவாளிகளால் நிகழ்த்தப்படும் - ஒன்றிணைந்த இரட்டை குற்றங்களாகும்.
6."தீவிரவாதக் குழு"க்களுடன் "அவர்க ளுடைய தொடர்பை ஆராய" ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களின் தொலைபேசிப் பதிவு களை ஆய்வு செய்வதற்கான, கர்நாடக உள்துறை அமைச்சரின் ஆணை, நம்மை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. நேற்றுவரை, பாரபட்சமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காகவும் அல்லது உண்மையில், எந்த வகைப் பாரபட்சத்திற்கு எதிராகப் போராடி யதற்காகவும் முஸ்லிம்கள் "தீவிரவாதிகள்", "சதிகாரர்கள்" என குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். தற்போது - பல இந்து, சீக்கிய சமூகத்துப் பெண்களும் ஒரே காரணத்திற்காக, ஒரே மாதிரி, தலையில் முக்காடு போட்டு மூடிக் கொள்ளும் நாட்டில்; இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், முதல் பெண் குடியரசுத் தலைவரும்கூட, எவ்வித விமர்சனமும், சர்ச்சையும் இன்றி, தங்களுடைய புடவைகளால் தங்கள் தலையில் முக்காடு போட்டு மூடியிருந்தனர் - ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்கள் சதிகாரர்களாக சித்தரிக்கப் படுகின்றனர்.
7. இளம்பெண்களும், பெண்களும் அவர்கள் எப்படி உடை அணிகிறார்கள் என்பதற்காக, அவமானப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படாமல் கல்வி கற்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் தலைக்கு மேல் என்ன இருக்கிறது என கவனிப்பதற்கு மாறாக, அவர்களின் தலைக்குள் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தக் வேண்டும். அவள் ஜீன்ஸ் அல்லது அரைக்கால் சட்டை அல்லது ஹிஜாப் அணிந்திருக்கிறாள் என்பதற்காக, அவள் கல்லூரிக்குள் நுழைய முடியாது என சொல்லப்படும் ஒவ்வொரு பெண்களுக்காகவும், நாங்கள் துணை நிற்கிறோம்.
8. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து இருக்கிறார்களா இல்லையா என்று பார்க்காமல் அவர்கள் மதிக்கப்படவேண்டும், அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுடன் ஒருமைப்பாடு தெரிவிக்கிறோம். கர்நாடக முஸ்லிம் மாணவிகள் தங்களுடைய சொந்த விருப்பத்திலேயே ஹிஜாப் அணிகிறார்கள் என நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம், எனவே, அவர்களின் அந்த விருப்பம் மதிக்கப்பட வேண்டும்.
9. பெண்கள் எதனை அணிய வேண்டுமென தேர்ந்தெடுக்கிறார்களோ, மூடிக்கொள்ள அல்லது மூடாமலிருக்க வேண்டுமென தேர்ந்தெடுக்கி றார்களோ அது அவர்களின் 'விருப்பம்' ஆகும். இது, ஒழுக்கமாக மற்றும் ஒழுக்கமின்றி இருப்பது பற்றிய வரையறையாக இருக்க முடியாது. ஆனால், வேறுபட்ட பல்வேறு மதங்களின் சம்பிரதாயங்களிலும், ஆணாதிக்க திணிப்பிற்காக இப்படித்தான் சொல்லப்படுகிறது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் இப்படித்தான் உடையணிய வேண்டும் என்று சொல்ல முயற்சிப்பதை நிறுத்துங்கள் - மாறாக, பெண்கள் என்ன உடையணிந்து இருக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப் படாமல் அவர்களை மதியுங்கள். ஒரு பெண் "அளவுக்கும் அதிகமாக தன்னை காட்டிக் கொள்கிறாள்" அல்லது அவள் "ஒரு நல்ல இந்து/முஸ்லிம்/கிறித்துவ/சீக்கிய பெண் போல உடையணிய"வில்லை என நீங்கள் நினைத்தால், உங்களுடைய ஆணாதிக்க பார்வை மற்றும் அவள் உங்களது உரிமைக்கு உரியவள் என்ற உங்களது உணர்வே சிக்களுக்கான அடிப்படையாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு பெண்ணும், அவளுடைய பாதையை அவளே வடிவமைத்துக் கொள்வது, அவளுடைய நம்பிக்கையில் எந்த சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பது எவற்றை ஒதுக்கித் தள்ளுவது என முடிவெடுப்பது என்பதை மதிப்பதில் பெண்ணிய, ஜனநாயக கொள்கைகள் அடங்கி உள்ளது.
10. மாண்டியாவில், முஸ்லிம் பெண்ணைச் சுற்றி கும்பலாக கூச்சலிட்டதில் பங்கு கொண்ட அமைப்புகள், தனிநபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். நாடு முழுவதும் ஹிஜாப் அணிந்து இருக்கும் பெண்களை மிரட்டும் எந்த ஒரு முயற்சியையும் தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் காவல்துறையினரையும், பொதுமக்களையும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
11. அரசு ஆதரவுடன், இந்து மேலாதிக்கக் குண்டர்கள் நிகழ்த்தும் மிரட்டல்களை எதிர்கொள்ளும் வேளையில், தங்களுடைய கண்ணியம், உரிமைகளுக்கான போராட்டத்தில் தைரியமாகப் போராடும் முஸ்லிம் மாணவிகளின் துணிச்சலுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அவர்களுடைய பல இந்து, கிறித்துவ நண்பர் களும் இந்தப் போராட்டத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள் என இந்த முஸ்லிம் மாணவிகள் தெரிவிப்பதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். - மேலும், மாணவிகள், பெண்கள் மீது பெண்ணின வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு "உடை கட்டுப்பாடுகளை" திணிக்கும் எந்த முயற்சிகளையும் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும், குடிமக்களும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், ஆவாஷ் இ நிஷ்வான்,
பெபாக் கலெக்டிவ்,
பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றம், எதிர்ப்புக்கான பெண்ணியவாதிகள்,
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு,
இந்திய தேசிய பெண்கள் சம்மேளனம்,
சிவில் உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு, சாஹேலி.
அனுராதா பானர்ஜி, சாஹேலி, புதுதில்லி. அருந்ததி துரு என்ஏபிஎம்.
சயனிகா ஷா, குயா பெண்ணிய களப்பணியாளர், கல்வியாளர், மும்பை.
மீரா சங்கமித்ரா, என்ஏபிஎம்.
நந்தினி ராவ், புதுதில்லி.
நவேது நில்லதிதார், கர்நாடகா.
போஷாலி பாசக், எஃப்ஏஓடபிள்யு, எஃப்ஐஆர், கொல்கத்தா.
சஃபூரா ஜார்கர், ஆய்வு அறிஞர். களப்பணியாளர், ஜாமியா மிலியா இஸ்லாமியா.
பிருந்தா குரோவர், வழக்கறிஞர், இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் பலர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)