கர்நாடகாவில் விவசாய சங்கத் தலைவர்களை தாக்கிய சங்கிகளுக்கு வன்மையான கண்டனம்!
இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள காந்தி பவனில், கர்நாடக ராஜ்ய ரைதா என்ற விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போது, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ராகேஷ் திகைத், யுத்வீர் சிங், கவிதா குருகண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில், விவசாயிகளுக்கு, விவசாயிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக ஒரு தொலைக்காட்சி வன்மத்துடன் நடத்தி வருகிற பொய்ப் பிரச்சாரத்தை மறுத்து விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் ஓடி வந்து ராகேஷ் திகாயித்தின் முகத்தில் தொலைக்காட்சி சேனலின் மைக்கைக் கொண்டு தாக்கினார்; மற்றொருவர் மை வீசி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் "ஜெய் மோடி" என்ற முழக்கங்கள் போட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக, காவல்துறை பிடித்து வைத்துள்ள பாரத் ஷெட்டி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜகவின் மாநில துணைத் தலைவர் விஜயேந்திரா, தற்போதைய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் ஆகியோருடன் இருக்கும் படங்கள், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக மற்றும் கர்நாடக அரசின் முழு ஆதரவு இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக- ஆர்எஸ்எஸ் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; இந்த நிகழ்ச்சியின்போது அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
எச்சரிக்கை :
சங்கிகளின் தென்னிந்திய பரிசோதனை சாலையாக கர்நாடகம் மாறிவருகிறது; பாஜக ஆட்சி மற்றும் கட்சி விவசாயிகளின் விரோதி என்பதும் தெளிவாகிறது. காவிப்பாசிசத் தாக்குதல்களுக்கு, பாஜக ஆட்சிக்கு, ஆட்சியாளர்களுக்கு தக்க முறையில் விவசாயிகள் பதிலடி கொடுப்பார்கள்.
அகில இந்திய விவசாயிகள் மகாசபை, AIKM தமிழ்நாடு.