திருக்கோவிலூர் கோட்டாட்சியர் இடம் வீட்டுமனை கேட்டு மனு!

ஆகஸ்ட் 25, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆரிநத்தம் பஞ்சாயத்தில் கூட்டி கிராமத்தில் சர்வே எண் 7/2 –ல் மனை பட்டா கேட்டு 2018-ல் இருந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் இடத்தை பார்வையிட்டு தனி நபர் ஆக்கிரமிப்பை கடந்த 13.08.2022-ல் அகற்றி இது அரசாங்க இடம் என்று போர்டு வைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்களுக்கு பட்டா கொடுப்பதாக உத்தரவாதம் செய்தார்.

இதன் அடிப்படையில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 101 நபர்கள் வீட்டுமனை வேண்டி CPIML கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, ஏழுமலை, கந்தசாமி, ஆறுமுகம், லோகநாதன், தணிகாசலம் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது

கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் வீட்டு மனைபட்டா அளிப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.