சேலத்தில் SKM ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் கைது
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்
பெயரளவில் பாஜக கட்சியினரை மட்டும் வைத்து அந்த குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குழுவை ஐக்கிய விவசாயிகள் சங்கம் நிராகரித்தது. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மீண்டும் மோடி அரசு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதை கண்டித்தும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் சங்க செயலாளர் என். கே. செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் AIKM ஏ ஐ கே எம் சார்பில் வி.அய்யந்துரை, அன்பு மற்றும் தோழர்கள்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்பழகன், ஏ ஐ கே கே எம் எஸ் சார்பில் எம். ஆர்.நடராஜன், மோகன், AIKS சார்பில் ஏ சின்னதம்பி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கரய்யா உள்ளிட்டு பலர் பங்கேற்று காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.