தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் (ஏஐசிசிடியு) சார்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம் 2.10.2023 அன்று நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், கால முறை ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரியும் விற்பனையாளர்களின் பிரச்சினையை தீர்க்கக் கோரி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்திடவும் அலுவலக நாட்களில் போராட்டம் நடத்தினால் தான் நமது கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படையில் டிசம்பர் 7 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்கள் அகில இந்திய தொழிற்சங்கம்(ஏஐசிசிடியு) நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க ஒன்றுபடுவோம். கூட்டத்தில் ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் டி.சங்கரபாண்டியன், டாஸ்மாக் விற்பனையாளர் சங்க சிறப்புத் தலைவர் இரணியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.