இந்து ராஜ்யம் அமைப்பதுதான் ஆர்எஸ்எஸ் - பிஜேபி - மோடியின் கனவு!
- இந்து ராஜ்யம் என்றால் இந்துக்களின் ஆட்சி அல்ல, உழைக்கும் இந்து மக்களின் ஆட்சி அல்ல, ஏழை, எளிய மக்களின் ஆட்சி அல்ல. இந்துத்துவ மதவெறியர்களின், கார்ப்பரேட் பண முதலைகளின், அதானி - அம்பானிகளின் ஆட்சி. அதுதான் பிஜேபி சொல்லும் இந்து ராஜ்யம். ஆகவே, வேண்டாம் மோடி!
- இந்து ராஜ்யம் என்றால் அங்கு மதச்சார்பின்மைக்கு இடம் கிடையாது.
- பன்மைத்துவம் கொண்ட இந்தியத் தாய்த்திருநாடு இந்து தலிபான்கள் ஆட்சியாக மாற்றப்படும்.
இந்து ராஜ்யத்தில் பெயருக்குக் கூட ஜனநாயகம் இருக்காது.
- கடந்த பத்தாண்டுகளில் மக்களவையில் விவாதங்களே இல்லாமல் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, வரலாறு காணாத வகையில், 146 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, விவாதமே இல்லாமல் பல மக்கள் விரோதச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
- டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜிரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா பிஆர்எஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிதா, செந்தில் பாலாஜி... இப்படி எண்ணற்ற சட்டவிரோத கைதுகள்!
- பாமகவை வளைத்துப் போட்ட கைது நடவடிக்கைப் புகைப்படங்கள்.
- நாம் தமிழர் கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை (ரெய்டு).
- தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்.
- ஊழலை எதிர்க்க வேண்டும். அதில் இரு கருத்து இருக்க முடியாது.
- ஆனால், எதிர்க்கட்சிகளை மிரட்ட, எம்எல்ஏக்கள், எம்பிக்களை மிரட்டி வாங்கிட ஒரு தந்திரமாக அதைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- காங்கிரஸ் இல்லாத இந்தியா அல்ல, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா - இதுதான் இந்து ராஷ்ட்ரா!
அதனால்தான், வேண்டாம் மோடி!
ஒற்றை ஆட்சி
- இந்தியத் தாய்நாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சம் பன்மைத்துவம். அதைத் துடைத்தெறிந்திட துடிக்கிறது மோடி - பிஜேபி ஆட்சி.
- ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே உடை, ஒரே உணவு, ஒரே சிவில் சட்டம், ஒரே இனம் - இப்படி பன்மைத்துவத்தை ஒழித்து ஒற்றைத் தன்மையை, ஒற்றை ஆட்சியை நிறுவுவதையே தனது லட்சியமாகக் கொண்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்கிறது ஆர்எஸ்எஸ் - பிஜேபி
- டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதனிடத்தில், மனு (அ)நீதியை, காட்டுமிராண்டிகால சட்டத்தை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும். இதுதான் மோடி- பிஜேபியின் கனவு.
- அதற்காகத்தான் 400 தொகுதி, மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறார் மோடி.
- நமக்குத் தேவை ஒரு நவீன இந்தியக் குடியரசு.
- மன்னர்கால, காட்டுமிராண்டிகால, சர்வாதிகார பாசிச ஆட்சி வேண்டாம்.
அதனால்தான், வேண்டாம் மோடி!
மனு(அ)நீதி என்ன சொல்கிறது?
அதனால்தான், வேண்டாம் மோடி!
விவசாயிகள் விரோத மோடி ஆட்சி
- விவசாயம் செய்ய அருகதை உள்ளவர்கள் அதானிகளும் அம்பானிகளும்தான், விவசாயிகள் அல்ல என்கிறது.
- உணவுக்காக விவசாயம் என்பது போய் சந்தைக்காக விவசாயம் என்கிறது.
- விவசாயத்தை வணிகமயமாக்குகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமானது என்கிறது.
- விவசாயத்தில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்துகிறது.
- சாமான்ய மக்கள் விவசாயத்தை விட்டு ஓட வேண்டுமென அதை நஷ்டகரமாக்குகிறது.
- சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்குமாறு நிர்ப்பந்தப்படுத்துகிறது.
- இடுபொருட்கள் விலை அதிகரிக்கிறது.
- விளைபொருட்களுக்கு போதுமான விலை, குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட மறுக்கிறது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.
- புதிய நிலக் கையகப்படுத்தும் சட்டங்கள் மூலம் விவசாயிகள் விளை நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.
அதனால்தான், வேண்டாம் மோடி!
விவசாயத் தொழிலாளர்கள் விரோத மோடி ஆட்சி!
- நூறு நாள் வேலைத் திட்டத்தை நாற்பது நாள் வேலைத் திட்டமாக சுருக்கி விட்டது.
- ஆதாரோடு வங்கிக் கணக்கை இணைப்பது என்ற பெயரில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.
- நகர்ப்புற முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு, மலிவான கூலி பெறும் தொழிலாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விவசாயத் தொழிலாளர்களை கிராமப்புறத்திலிருந்து வெளியேற்றி, நகரங்களுக்கு குடிபெயர கட்டாயப்படுத்துகிறது.
- குறைந்தபட்ச கூலியும் கூட மறுக்கப்படுகிறது.
- தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ஊதியபாக்கியை மறுத்து வரும் மோடி அரசு தேர்தல் சமயத்தில் கூலியை உயர்த்துவதாக நாடகமாடுகிறது.
- நிலமின்றி, வீடின்றி, வருமானமின்றி அனாதைகளாக, மேலும் வறியவர்களாகத் தவிக்கும் விதத்தில், விவசாயத் தொழிலாளர்களை, அவர்கள் வாழ்க்கையை நாசப்படுத்துகிறது.
அதனால்தான், வேண்டாம் மோடி!
தொழிலாளர் விரோத மோடி ஆட்சி!
புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்
- பணி நிரந்தரம் என்பது கிடையவே கிடையாது. வேலைக்கு ஆலாய்ப் பறக்கும் உதிரிப் பாட்டாளிகளாக தொழிலாளர்கள் மாற்றப்படுகின்றனர்.
- குறைந்தபட்ச ஊதியம் (சுமார் ரூ 15,000) பறிக்கப்படுகிறது. தரைமட்ட ஊதியம் (இன்று நாளொன்றுக்கு ரூ 178 மாதத்திற்கு ரூ 5340) வழங்கினால் போதும் என்கிறது.
- பணி நிலைமைகள் கடுமையானதாக்கப்படுகின்றன.
- இ எஸ் அய், பி எஃப் கட்டாயமில்லை.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர மறுக்கிறது.
- ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமும் கிடையாது, சம உரிமைகளும் கிடையாது.
- சங்க அங்கீகாரம் அறவே கிடையாது.
- வேலை நிறுத்த உரிமை பறிக்கப்படுகிறது. வேலை நிறுத்தம் சட்டவிரோதமாக்கப்படுகிறது.
- வேலை நிறுத்தம் செய்தால், தொழிலாளர் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
- மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்ட அந்த சட்டங்கள் ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
- தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
அதனால்தான், வேண்டாம் மோடி!
மாணவர் விரோத மோடி ஆட்சி!
- நீட், க்யூட் என எண்ணற்ற தமிழ் மாணவர் விரோத நுழைவுத் தேர்வுகள்
- இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு நியாயமே என வாதாடும் ஆட்சியாளர்கள்.
- அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்துவதையே தமது கடமையாகக் கொண்ட கல்விக் கொள்கை.
- கல்வித் துறையில் சாதி ஏற்றத் தாழ்வு போல ஏழை - பணக்காரன் ஏற்றத் தாழ்வு.
- கல்வி எட்டாக் கனியாகி விட்டது. ஏழைகளுக்கோர் கல்வி. செல்வம் படைத்தவர்களுக்கோர் கல்வி என ஏற்றத்தாழ்வு.
- வளாக ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு விட்டது. மாணவர் சங்கத் தேர்தல்களே நடத்தப்படுவதில்லை.
- அறிவார்ந்த, அறிவியல்பூர்வமான கல்வி முறைக்கு மாறாக, மூடத்தனத்தைக் கற்பிக்கும் அடிமைக் கல்வி முறை.
அதனால்தான், வேண்டாம் மோடி!
இளைஞர் விரோத மோடி ஆட்சி!
- வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.
- கல்வி, திறமைக்கேற்ப வேலை கிடைப்பதில்லை.
- வேலை கொடுக்க வக்கில்லாத அரசு, இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறது.
- அரசுப் பணிகளில் பலப்பல லட்சக்கணக்கான வேலையிடங்கள் காலியாகவே இருக்கின்றன.
- தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை இல்லை.
- வேலையில்லாக் காலத்துக்கு (வேலைதேட) வேலையற்றோர் நிவாரணமும் இல்லை.
- பெண்கள் வேலை பார்க்க சரியான பாதுகாப்பு இல்லை.
- பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் இல்லை.
அதனால்தான், வேண்டாம் மோடி!
பெண்கள் விரோத மோடி ஆட்சி!
- பெண்கள் மீது பாலியல் வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து விட்டன.
- அவமரியாதைக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
- பெண்கள் தம் விருப்பப்படி மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
- காதலிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. மீறி காதலித்தால் ஆர் எஸ் எஸ் குண்டர் படைகள் தாக்குகின்றன.
- ஒழுக்கக் காவலர்கள் என்ற பெயரில் இளம் பெண்கள் தாக்கப்படுகின்றனர். கூட்டுப் புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
- பில்கிஸ் பானு மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு அரசு பாதுகாப்பு!
- குற்றவாளிகள் விடுதலையானால், இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
- தலித் பெண்கள் மீது பல மடங்கு அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்கள்!
அதனால்தான், வேண்டாம் மோடி!
கூட்டமைப்புக்கு எதிரான மோடி ஆட்சி
- பல மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிற ஓர் ஒன்றிய அரசு என்பதைத்தான் அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், மாநிலங்களை நகராட்சிகள் போல உரிமையற்றதாக மாற்றிட எத்தனிக்கிறது மோடி ஆட்சி.
- ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளை, முதன்மைச் செயலாளர்கள் முதல் அனைத்து அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து, ஒன்றிய சாம்ராஜ்யத்தை உருவாக்கப்பார்க்கிறது.
- ஜி எஸ் டி மூலம் வரி வசூல் செய்து, அதை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டியதை மறுப்பதன் மூலம், மாநில அரசுகளை பொருளாதாரரீதியாக நசுக்குகிறது.
- இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மொழி உரிமையை, தேசிய இன உரிமையைப் பறிக்கிறது.
- இப்படி, சமூக, பொருளாதார, அரசியல்ரீதியில் கூட்டமைப்புத் தத்துவத்தை ஒழித்துக்கட்டப் பார்க்கிறது.
அதனால்தான், வேண்டாம் மோடி!