பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் நடந்து கொண்டிருக்க, 2024 பல நாடுகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக இருந்துள்ளது. நமது பிராந்தியத்தில், சிறீலங்கா அதன் வரலாற்றில், முதன்முறையாக ஒரு இடது சாய்வு கொண்ட ஆட்சியைக் கொண்டுவந்துள்ளது. பங்களாதேஷில் ஏற்பட்ட வெகுமக்கள் எழுச்சி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சமடைய வைத்துள்ளது; ஆனால், இங்கு பிற்போக்கு ஜமாத்-சார்பு சக்திகள் உறுதிப்பட்டிருப்பதால் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமற்றதாக உள்ளது.