இன்று மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியின் பிளவு படுத்தும் கொள்கைகளின் விளைவே அது. இந்தியாவில் முதலில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சாகின்பாக் போராட்டத்தை நாடு சந்தித்தது. இஸ்லாமிய மக்களும் ஜனநாயக இயக்கங்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதற்கடுத்து விவசாயிகள் விரோத வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக டெல்லி எல்லையிலே அமர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள். ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற அந்த போராட்டத்தின் விளைவாக மோடி அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல, தொழிலாளர்கள் விரோத 4 சட்டத் தொகுப்பு களுக்கு எதிராக தொழிலாளர்களும் வேறு வேறு வடிவங்களிலான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 4 சட்டத் தொகுப்புகளும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக் கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து கடுமையான எதிர் விளைவுகள் வரும் என்ற காரணத்தால் மோடி அரசாங்கம் அதை நிறுத்தி வைத்துள்ளது. சிலர் சொல்கிறார்கள் நாட்டில் ஏற்கனவே இருக்கக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்கள் அமைப்பாக் கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமானதாக இருக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு அவை உதவக்கூடியதாக இல்லை. வந்திருக்கக்கூடிய சட்டத் தொகுப்புகள் அமைப்புசாராத் தொழிலாளர் நலனிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்று சொல்கிறார்கள். முற்றிலும் தவறானது. போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை இந்த சட்டத் தொகுப்பு கள் பறிக்கின்றன. சர்வதேச அளவில் உயிர்த் தியாகம் செய்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி பெறப்பட்டது 8 மணி நேர வேலை உரிமை. இன்றைக்கு அந்த உரிமை பறிபோகும் சூழல் உள்ளது. இந்த சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் நலனிலிருந்து கொண்டு வரப்பட்டது அல்ல. ஆகவேதான், நாம் இவற்றை முதலாளிகள் நல சட்டத் தொகுப்புகள் என்று குறிப்பிடுகிறோம். இந்த சட்டத் தொகுப்புகள் வேலை அளிப்ப வருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக சமூக பாதுகாப்புச் சட்ட தொகுப்பு, இந்த சட்டம் தான் முக்கியமாக அமைப்பு சாராத் தொழிலாளர் களுக்கு, அதிலும் குறிப்பாக கட்டுமான தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கக்கூடிய சட்டத்தொகுப்பாகும். இந்த சட்டத் தொகுப்பில் தொழிலாளர்க ளுக்கான பாதுகாப்பு எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக இதுவும் வேலை அளிப்பவரின் பாதுகாப்புக்கான சட்டத் தொகுப் பாகவே உள்ளது. தொழிலாளர் ஈட்டுறுதி, வருங்கால வைப்பு நிதி போன்ற சட்டங்கள் எல்லாம் சமூகப் பாதுகாப்பு சட்டங்களாக இந்த நாட்டிலே கொண்டுவரப்பட்டன. தொழிலா ளர்கள் அவர்கள் செலுத்துகிற பிரீமியம் தொகைக்கு தகுந்தாற்போல் புதிய சட்டத் தொகுப்புப்படி பயன்கள் கிடைக்கும். அப்படி என்றால் வேலை அளிப்பவர்கள் முழுவதுமாக தங்களுடைய பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போல கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளி அதிகமாக பணம் செலுத்தினால் அதிக பயன்கள், குறைவாக பணம் செலுத்தினால் குறைவான பயன்கள் என்ற நிலையை உருவாக்குகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே சிறந்த சட்டமாக பீடித் தொழிலாளர் நலச் சட்டம் கருதப்படுகிறது. அச்சட்டத்தின் படி தொழிலாளர் களுக்கு வீடு கூட கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு கட்டுமானத் தொழிலாளர் களுக்கு வீடு கட்டுவதற்கு கடன் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் வீடு கட்ட கடன் பெற வேண்டுமானால் அவரிடம் வீடு கட்டுவதற்கான இடம் இருக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளியிடம் வீடு கட்டுவதற் கான இடம் கிடையாது. கட்டுமான தொழிலா ளர்கள்தான் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். பெரிய பெரிய நீர் தேக்கங்களைக் கட்டுகிறார்கள். பாலங்களை கட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் வாழ அவர்களுக்கு ஒரு அறை கிடையாது என்ற நிலைதான் உள்ளது. ஆகவே, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு என்பது முக்கியமான கோரிக்கையாகும். கட்டுமானத் தொழிலாளர்களின் ஊதியம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும். பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இன்றைக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்கச் ஆனால், சொல்லி கேட்கும் போது, மோடி அரசாங்கம் புதிதாக தரைமட்டக் கூலி என்பதைக் கொண்டு வருகிறது. அமைப்புசாராத் தொழிலாளிக்கு மாதம் ரூபாய் 4500 தரைமட்டக் கூலியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு எதிர்ப்பு குரல்கள் வந்தபின் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அந்தக் கமிட்டி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000 என்று அறிவித்தது. இப்போது மோடி ஆட்சி அந்த கமிட்டியைக் கலைத்து விட்டு புதிதாக ஒரு கமிட்டியை குறைந்தபட்சக் கூலியை நிர்ணயம் செய்யச் சொல்லிப் போட்டுள்ளது. பல தொழில்களில் எப்போதுமே சந்தைக் கூலியை விட நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் என்பது குறைவாக இருக்கும். ஆனால், கட்டுமானத் தொழிலை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கூலியை விட சந்தைக் கூலி அதிகமானதாக இருக்கும். கேரளாவில் வலுவான தொழிற்சங்க இயக்கம் இருக்கின்ற காரணத் தினால் அங்கே கூலி நிலைமைகள் மேம்பட்டதாக உள்ளன. தொழிற்சங்க இயக்கத்தால் அதைச் செய்ய முடிந்துள்ளது. ஆகவே, இந்த மாநாட்டின் முக்கிய தீர்மானமாக மோடி அரசின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான தீவிரமான போராட்ட இயக்கம் என்பது இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)