சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குறிச்சி ஊராட்சி மக்கள், தாங்கள் வசித்து வரும் வீட்டுமனைகளுக்கு, பட்டா  கேட்டு இரண்டாண்டு காலமாக  தொடர்ந்து  போராடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகம் பட்டா  கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு செல்ல, கட்சி குறிச்சி உள்ளூர் கமிட்டி சார்பில், 15-11-2024 அன்று வெள்ளி  காலை 10.00 மணியளவில், குறிச்சியில் இருந்து 40 கி.மீ சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல நடைபயணம் திட்டம் இடப்பட்டது.  நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது; எனினும், தடையை மீறி சுமார் 80 பேர் அணிதிரண்டனர். 

 

குறிச்சி உள்ளூர் கமிட்டி செயலாளர் குபேந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர் R. வேல்முருகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் V.அய்யந்துரை மற்றும் மாவட்டக்  கமிட்டி உறுப்பினர்கள் அன்பு, பாலு ஆகியோர் உரையாற்றிய பின்னர் நடைபயணம் துவங்கியதும் காவல்துறை சுமார் 50 பேரை கைதுசெய்து மண்டபத்தில் வைத்தது. பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.