பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் நடந்து கொண்டிருக்க, 2024 பல நாடுகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக இருந்துள்ளது. நமது பிராந்தியத்தில், சிறீலங்கா அதன் வரலாற்றில், முதன்முறையாக ஒரு இடது சாய்வு கொண்ட ஆட்சியைக் கொண்டுவந்துள்ளது. பங்களாதேஷில் ஏற்பட்ட வெகுமக்கள் எழுச்சி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சமடைய வைத்துள்ளது; ஆனால், இங்கு பிற்போக்கு ஜமாத்-சார்பு சக்திகள் உறுதிப்பட்டிருப்பதால் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமற்றதாக உள்ளது. சிரியாவிலும் கூட, வெகு நாட்களாக காத்திருந்த மிகவும் அவப்பெயர் பெற்ற சர்வாதிகார ஆசாத் ஆட்சி விழுந்துள்ளது. ஆனால் அது, அமெரிக்க ஆதரவு இஸ்ரேலின் தாக்குதலால் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ், உடனடி ஆபத்தான தீவிர வலதுசாரி வெற்றியை தடுத்து நிறுத்தி விட்டது. ஆனால், அய்க்கிய அமெரிக்கா, ட்ரம்பின் மறுவருகை வழியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
ஆனாலும் வெகுநாட்களாக காத்துக்கிடந்த கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றத்தை 2024, இந்தியாவுக்கு தரவில்லை. பாஜக தனித்த பெரும்பான்மையை இழந்திருந்தபோதும் ஒரு கூட்டணி ஆட்சியாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் நிறுவப்பட்ட தேர்தல் வெளிப்படைத்தன்மை, நிறுவன நடுநிலைமை, பொறுப்பேற்பு இவற்றையெல்லாம் கேலிக்கூத்தாக்கி, அரியானாவில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டது, மகாராஷ்ட்ராவில், மிகவும் சமமற்ற, அய்யத்திற்கிடமான தேர்தல் போராட்டத்தால் வெற்றியை வாரிச் சுருட்டிக் கொண்டது. 2024 மக்களவை தேர்தலுக்குப்பிறகான விளைவுகள், பாசிஸ்ட் இரும்புப்பிடியிலிருந்து எளிதான தேர்தல் மூலம் வெளியேறிவிடலாமென இந்தியா எதிர்பார்க்க முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியிருக்கின்றன. ’இந்திய மக்களாகிய நம்மின்’ முன்னோர்கள், 1949, நவம்பர் 26 ல் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய போது நமது முன்னோர்கள் சொன்ன “ இந்திய மக்களாகிய நாம்” என்ற நமது துணிச்சல்மிக்க ஜனநாயக எழுச்சிக்கு குறையாத எதுவும் குடியரசை பாசிஸ்டுகளின் பிடியிலிருந்து விடுவிக்கமுடியாது.
மோடி அரசாங்கத்தின் பத்தாண்டுகால அனுபவமானது, அத்தகையதொரு எழுச்சிக்கான ஆற்றலை போதுமான அளவில் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் செயல்திறனில், பொருளாதாரம் மிகவும் வலுவிழந்த அம்சமாகவே உள்ளது; 1990 களின் தொடக்கத்தில் வந்த தாராளமயம்-தனியார்மயம்-உலகமயத்தை ஒருவாறு வரவேற்ற வெகுமக்கள் மனநிலை, சூறையாடும், கொள்ளையிடும் சலுகைசார் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக தெளிவாக திரும்பத் தொடங்கியுள்ளது. இயற்கை வளங்களையும் பொருளாதார உள்கட்டமைப்புகளையும் கண்மூடித்தனமாக, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெருங்குழுமக் குடும்பங்களுக்கு உடைமை மாற்றம் செய்துவிடுவது என்பதானது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெரிய அளவிலான வேலை இல்லாதிண்டாட்டத்தையும், நீண்ட காலத்திற்கான பற்றாக்குறையையும்,தாவிஎகிறும் விலைவாசி உயர்வையும் வாழ்வாதார நெருக்கடியையுமே பொருள்படுத்துகின்றன. அதானி குழுமத்திற்கெதிராக அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அரசாங்கம் அதானி குழுமத்தை முரட்டுத்தனமாக பாதுகாப்பதிலிருந்து இந்த அரசாங்கம் பெருங்குழும ஆதரவை தீவிரமாகச் சார்ந்திருப்பதைக் காட்டுகிறது. விவசாயிகள் இயக்கம், பெருங்குழும அபகரிப்புக்கு எதிரான ஆற்றல்மிகு வெகுமக்கள் எதிர்ப்பின் காட்சியை நமக்கு ஏற்கனவே காட்டியிருக்கிறது.
சமூக சமத்துவம், பாலின நீதி இவ்விரண்டும், பெரும் பிரிவு இந்திய மக்களை தீர்மானகரமான எதிர்ப்பில் தூண்டுவிக்கும் மற்றொரு தளமாகும். மிகச்சமீபத்தில் கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி முதுநிலைப்பட்ட பயிற்சி மருத்துவர் கொடூரமாக வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு எதிராக வெகுமக்களின் கோபத்தின் அலையைக் குறிப்பிடலாம். மோடி ஆட்சியில், ஆணாதிக்க, பெண்வெறுப்பு எதிர்வினை இளம் பெண்களை வன்முறை வழியில் தார்மீக காவல்செய்வதிலிருந்து தொடங்கி, வன்புணர்வாளர்களை (குறிப்பாக தலித், இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை) பாதுகாப்பது, வரவேற்பு விழா நடத்துவது; மேலும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க காப் பஞ்சாயத்துகளை உள்நாட்டு ஜனநாயக நிறுவனங்களாகக் கொண்டாடுவது போன்றவையும் எதிர்ப்பை சந்திக்காமல் இல்லை. அம்பேத்கர் குறித்து, மாநிலங்களவையில் அமித்ஷா கூறிய இழிவான கருத்தும் இந்தியாவின் சக்திமிக்க சாதி எதிர்ப்பு திருஉருக்கு எதிரான இந்த அவமதிப்புக்கு எதிராக பொங்கி எழுந்த வெகுமக்கள் கோபமும் சமூக நீதி, சமூக சமத்துவம் தொடர்பான பிரச்சனையில் பாசிஸ்ட்களின் ஆழந்த சங்கடத்தையும் சேதத்தையும் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது.
இந்திய மக்கள் கைகளில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம், உண்மையில் இந்தியாவின் காலனிய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமும் அதன் உத்வேகமூட்டும் மரபும் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, இறையாண்மைகொண்ட குடியரசு என்று பிரகடனம் செய்த, விடுதலைப் போராட்ட லட்சியத்தில் எழுந்த அரசமைப்புச் சட்டமுமாகும். சற்றும் சளைக்காத பாசிச ஆயுதமயமான மதவெறி வெறுப்பு, பார்ப்பனிய மேலாதிக்கம், ஆணாதிக்கம் இவற்றுக்கு எதிராக, விடுதலை இயக்கத்தின் கனவுகளும் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியா லட்சியமும் துடிப்பான ஜனநாயகத்துக்கும் சமத்துவ சமூக அமைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட தேடுதலுக்கான மிகவும் ஆற்றல் கொண்ட மேடையாக இருக்கும்.
2025ல் கம்யூனிஸ்ட்கள், பாசிஸ்ட்கள் இருவருமே அவர்களது இயக்கத்தின் நூறாவது ஆண்டை தங்கள் சொந்த மண்ணில் கடைப்பிடிக்கும் போது, ஒவ்வொரு இந்திய கம்யூனிஸ்டும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப எழுந்து நிற்கவேண்டும்; பாசிச பேரழிவிற்கெதிராக மிகப்பெரும் வெற்றிகளுக்கான ஆண்டாக 2025 அய் மாற்றிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)