இந்தியாவைக் காக்க ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களுக்கும் மற்றுமுள்ள தலைவர் களுக்கும் மாநாட்டு பிரதிநிதிகளுக்கும் அனைத் திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் வணக்கத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!

'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள்.

ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு - பயிற்சிப் பட்டறை

தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் முறியடித்த பின்னணியில் மே 7,8-2023 இரு நாட்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு கூட்டமும் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர்கள் இரணியப்பன், கோவை பாலசுப் பிரமணியன், கரூர் பால்ராஜ், சேலம் வேல் முருகன் ஆகியோர் கொண்ட குழு தலைமை தாங்கி நடத்தியது. நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாஜக ஆளும் மணிப்பூரில் பழங்குடிகளுக்கு பாதுகாப்பின்மையும் இன வன்முறையும்!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா வாக்காளர்களைப் பார்த்து காங்கிரஸ் வெற்றி பெற்றால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தபோது, பாஜக ஆளும் மணிப்பூரில் மோசமான இன வன்முறை வெடித்தது. அது திட்டமிடப்பட்ட கலவரம் என்பதற்கான அனைத்து அடையாளங் களையும் கொண்டிருந்தது. ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் 'இரட்டை இயந்திர அரசாங்கம்' உள்ளது என்றது. மணிப்பூரில் அரசிலமைப்புச் சட்டப் பிரிவு355ஐ பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய இரட்டை இயந்திர ஆட்சி, கண்டதும் சுட உத்தரவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 50ஐத் தாண்டியது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தெளிவற்ற, நடைமுறைச் சாத்தியமற்ற தொலைதூர வாக்களிப்புத் திட்டம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கான தொலை தூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு, பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இகக (மாலெ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது, முற்றிலும் தெளிவற்றது என்று  கூறியுள்ள இகக(மாலெ), வாக்களிக்கும் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்காக உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் பற்றிய எந்தவொரு உறுதியான வரையறையையும் வழங்காமல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்குவதை நோக்கி அவசரமாக செயல்படு வது குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது. 

ஊர் தோறும் ஊராட்சி தோறும் மக்களிடம் செல்வோம்

மார்ச் 20 ல் தொடங்கிய சட்டப்பேரவை தொடர்ந்து நடந்து வருகிறது. பல துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடந்து வருகின்றன. ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து கூறுவதானால், நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை ஆட்சியாளர்களின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. விவசாய அமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நிதியமைச்சர் காட்டிய பாதையிலேயே உள்ளது.

பாஜகவின் பொய் பிரச்சாரத்தை, போலிச் செய்திகளை, வதந்திகளை, அதன்தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்திடுவோம்!

பீகார் தொழிலாளர் மற்றும் பிற வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த போலி செய்திகள் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் வெள்ளமெனப் பெருகி ஓடியது. ஹோலி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளரை, அவர்கள் மீதான தாக்குதல் காரணமாக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்று கெடுநோக்குடன் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. இந்த போலிச் செய்தியை சரிபார்க்காமலே பல்வேறு ஊடகங்க ளும் பத்திரிகைகளும் எடுத்துக் கொண்டு செய்தி வெளியிட்டன.

டிசம்பரின் செய்திகள்: நாட்களும் நடப்புகளும் - 2

டிசம்பர் 5: 75 நாட்கள் மர்ம சினிமாவின் இறுதிக்காட்சி சோகமாக முடிந்து போனது. டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது மரணத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள "அம்மாவின் ஆட்சியே" விசாரணை ஆணையம் அமைத்தது! ஆனால் திமுக ஆட்சியிலும் ரகசியம் வெளிவரவில்லை. எம்ஜிஆர் இறந்தபிறகு இரண்டு துண்டுகளான அதிமுகவை வெற்றிகரமாக ஒன்றுபடுத்தி, இறப்பு வரை தனது சுருக்குப்பையில் வைத்திருந்த 'இரும்புப் பெண் மணியால்' அவரது இறப்புக்குப்பிறகு நான்கு துண்டுகளானதை அவரால் 'வானுலகத்திலிருந்து' வேடிக்கை தான் பார்க்கமுடிந்தது!

வாலாட்டிக் குழையும் ஊடகங்களைத் தொடர்ந்து வாலாட்டிக் குழையும் நீதித்துறையை அரசாங்கம் விரும்புகிறதா?

கடந்த சில நாட்களாக மோடி அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முறையை, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரென் ரிஜுஜுவும் மாறி மாறி வெளிப்படையாக தாக்கிப்பேசி வருகின்றனர். அதோடு 2015 இன், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை சட்ட விரோதமென தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, "மக்களின் தீர்ப்பை" மதிக்காத செயல் என்று கூறி, குடியரசு துணைத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.

நூற்று முப்பது கோடி மக்களின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் பாசிச ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னால், இந்த ஆட்சி முடிவுக்கு வரும்

தோழர்களே!

நாம் பதினோராவது கட்சிக் காங்கிரசை நோக்கிய தயாரிப்பில் இருக்கும்போது தமிழ் நாட்டில் 11ஆவது மாநில மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். 11வது கட்சி காங்கிரஸ் வரும் பிப்ரவரியில் பாட்னாவில் நடக்க விருக்கிறது.