கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு:

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கனியாமூர் சொல்லும் செய்தி: கல்விக்கும் விடுதலை வேண்டும்

ஜூலை 13, தமிழ்நாட்டிற்கு மற்றுமொரு துயரமான நாள். சின்ன சேலத்துக்கு அருகிலுள்ள கனியாமூரிலுள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தற்கொலையென்று பள்ளி நிர்வாகம் சாதிக்கிறது. பொது சமூகம் இது ஒரு பச்சைப் படுகொலை என்று நம்புகிறது. பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மையா? பொது சமூகம் நம்புவது உண்மையா? எது உண்மை என்பதை அரசின் காவல் துறையும் நீதிமன்றமும் நிரூபித்தாக வேண்டும். தனியார் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்கள் குற்ற நிறுவனங்களாக மாறிவருகின்றன. சென்ற ஆண்டு மே மாதம் முதல் பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ள கொடூர குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கல்வி தனியார்மயமும் காவிமயமும் மாணவர்களைக் கொல்லும்!

மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை.