தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டிற்கு எதிரான பொய் புரட்டுக் கருத்துக்களை திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்று அழைப்பதைவிட, தமிழகம் என்று அழைப்பதே சரி என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசினார் ஆர்.என்.ரவி. அடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், மரபிற்கு மாறாக, தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுத்த உரையில், சிலவற்றைத் தவிர்த்தும் தானாக சிலவற்றைச் சேர்த்தும் வாசித்தார்.