தலையங்கம்

பாஜக சங்கிகள் திடீரென தாய் மொழிக் கல்வி பற்றிப் பேசுகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் ஆர்எஸ்எஸ்-ன் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் தாய் மொழிக் கல்வி பற்றியும் மக்கள் தொகை கட்டுப்பாடு, சிறுபான்மை யினரிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துதல், பெண்கள் அதிகாரம் பற்றி எல்லாம் பேசவிருக்கிறார்களாம். மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறைச் செயலாளர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, சட்டம் தொடர்பான படிப்பை தாய் மொழியிலேயே படிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அனைவருக்கும் நீதி எளிதாகக் கிடைக்கும் என்றும் பேசியுள்ளார்.