தலித்துகள் புத்தமதத்திற்கு மாறுவது கண்டு சங்கிப் படைகள் அஞ்சுவதேன்?

1956, அக்டோபர் 14 அன்று, பாபாசாகேப் அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களுடன் புத்தமதத்தை தழுவினார். அந்த ஊர் நாக்பூர், அந்த இடம் தீக்ஷாபூமி(மதம் மாறிய மண்) என்று அழைக்கப்படுகிறது, அந்த இடத்தில், டிசம்பர் 18, 2001 அன்று அப்போதைய ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களால் ஒரு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அது, நாக்பூரிலுள்ள ஒரு பாரம்பரிய கலாச்சார மய்யமாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அசோகா விஜய தசமியான இந்த நாள், பேரரசர் அசோகர் கலிங்கப் போரால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு மனம் மாறி வன்முறையை துறந்து புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிற நாளை, ஆண்டு தோறும் நினைவுகூரும் நாளாகும்.