1956, அக்டோபர் 14 அன்று, பாபாசாகேப் அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களுடன் புத்தமதத்தை தழுவினார். அந்த ஊர் நாக்பூர், அந்த இடம் தீக்ஷாபூமி(மதம் மாறிய மண்) என்று அழைக்கப்படுகிறது, அந்த இடத்தில், டிசம்பர் 18, 2001 அன்று அப்போதைய ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களால் ஒரு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அது, நாக்பூரிலுள்ள ஒரு பாரம்பரிய கலாச்சார மய்யமாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அசோகா விஜய தசமியான இந்த நாள், பேரரசர் அசோகர் கலிங்கப் போரால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு மனம் மாறி வன்முறையை துறந்து புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிற நாளை, ஆண்டு தோறும் நினைவுகூரும் நாளாகும். அம்பேத்கர், இந்தியாவில் புதிய புத்த இயக்கத்தை தொடங்கு வதற்கு இந்த நாளை தேர்ந்தெடுத்தார், அதன் வாயிலாக அம்பேத்கரிய புத்தர்கள் என்ற முற்றிலும் புதிய மதத்தை வழங்கியிருக்கிற தென்றால், இதே விஜயதசமி நாளில் தோற்று விக்கப்பட்ட, இதே நாக்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கிற ஆர்எஸ்எஸ், அந்த நாளை பொது இடங்களில் வெளிப்படையாக ஆயுதங் களை காட்சிப்படுத்தி அதை வணங்கி கொண்டாடி வருகிறது.
இந்த இரண்டு வரலாறுகளும் இரண்டு நேர் மாறான போக்குகளை உயர்த்திக் காட்டுகிறது. அம்பேத்கரது தம்ம சக்கர ப்ரவர்த்தன், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கான தீர்மான கரமான தேடுதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆ ர்எஸ்எஸின் ராணுவவாத ஆணாதிக்க கலாச்சாரமோ வெறுப்பு, வன்முறை, ஒடுக்கு முறை அடிச்சுவட்டை மட்டுமே விட்டு வைத்தி ருக்கிறது. இந்த ஆண்டு, தில்லி அம்பேத்கர் பவனத்தில், சில ஆயிரம் பேர் அம்பேத்கரது புகழ் பெற்ற 22 கட்டளைகளை திரும்பக் கூறி, புத்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த நேர்மாறான வேறுபாடு தேசத்தின் தலைநகர் தில்லியில் ஒரு புதிய கூர்மையை பெற்றிருக்கிறது. இந்த நிகழ்வு ஆர்எஸ்எஸுக்கு முடிவற்ற எரிச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது, இந்த நிகழ்வில் இருந்தாரென்ப தற்காக தில்லி அரசாங்கத்தின் சமூகநலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமிற்கு எதிராக சங்கிப் படைகள் ஒரு நச்சுப் பிரச்சாரத்தை நடத்தி, அந்த அமைச்சரை பதவி விலகச் செய்திருக்கிறது.
இந்த நிகழ்வு, அம்ஆத்மி கட்சியின் அரசியல் பற்றியதொரு தீவிர கேள்வியையும் எழுப்புகிறது. தில்லி, பஞ்சாபிலுள்ள அலுவல கங்கள் அனைத்திலும் பகத்சிங், அம்பேத்கர் படத்தை வைப்பதை கட்டாயமாக்கியுள்ள இக்கட்சி, அம்பேத்கர் மரபை பின்பற்றியதற்காக தனது சொந்த அமைச்சரையே திடுதிப்பென கைவிட்டுவிட்டது. சங்கிப் படையின் இஸ்லா மிய பூச்சாண்டி வெறுப்புப் பிரச்சாரம், பொய்கள், வன்முறையை எதிர்கொள்ள பல தருணங்களில் தில்லியிலுள்ள அம்ஆத்மி கட்சி, தனது ஸ்லாமிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்களை குழிக்குள் தள்ளிவிட்டதையும் காணமுடிந்தது. மதமாற்றமென்பது குற்றச் செயலல்ல, அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையாகும். சாதிப் படிநிலை, ஒடுக்குமுறையிலிருந்து வெளியேற ஒரு வழியாக, இந்து மதத்திலிருந்து வெளியேறும் உரிமை தலித்துகளுக்கு எப்போதும் உண்டு. தற்செயலாக, அதேநாளில், ஆர்எஸ்எஸ் நிறுவன நாள் உரையில், மோகன் பகவத், சாதி, வர்ணம் ஆகியவற்றை கடந்த காலத்தவையாகக் கருதி மறந்துவிட வேண்டுமென்று இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தலித்துகள் புத்த மதத்தை தழுவியதற்காகவும் அம்பேத்கரின் புகழ்வாய்ந்த 22 கட்டளைகளைத் திரும்பக் கூறியதற்காகவும் ஆர்எஸ்எஸ் நடத்திய நச்சுப் பரப்புரை, இன்னமும் கூட ஆர்எஸ்எஸ் இந்தியாவின் ஒடுக்குமுறை, சாதிய அமைப்பை பாதுகாப்பதில் எந்த அளவு உறுதிப்பாடு கொண்டிருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது. சாதி முடிந்துபோன கதை என்று பசப்புவதால் சாதியை வெற்றிகொண்டுவிட முடியாது.1936 லியே அம்பேத்கர் அறுதியிட்டுக் கூறியதுபோல சாதியை அழித்தொழிப்பதன்மூலம் மட்டுமே அதை வெற்றிகொள்ள முடியும்
ஆர்எஸ்எஸ் ஒரு பரந்துபட்ட (அனைவரையும்) உள்ளடக்கிய அமைப்பாக பரிணமித்து வந்துள்ளது போன்ற ஒரு உணர்வு உருவாக்கப் பட்டு வருகிறது. மோகன் பகவத், 5 இஸ்லாமிய அறிவாளிகளுக்கிடையிலான சந்திப்பு போன்ற நிகழ்வுகள், இந்திய இஸ்லாமியர்களை இந்தியக் குடிமக்களாக ஒப்புக் கொள்வதன் "தயார் நிலையை''க் காட்டுவதாகவும் மேலும், பகவத் மசூதிக்கும் மதரசாவுக்கும் (இஸ்லாமியப் பள்ளி) செல்வதும் மாற்றத்தின் அறிகுறியாகவும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இது மிகப்பெரிய பொய்ச் செய்தியைத் தவிர வேறல்ல! பகவத் மதரசாவுக்கு சென்றார். அங்கு படிக்கும் மாணவர்களிடம் குரானோடு கீதையையும் படிக்கச் சொல்லியிருக்கிறார். ஆர்எஸ்எஸ்ஆல் நடத்தப்படும் வித்யாமந்திர்கள், (அங்குள்ள மாணவர்களிடம்) இப்போது முதல் குரானையும் படிக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளப்படுமா? அவரது செய்தியின் உள் அர்த்தத்தை நாம் பார்ப்போமெனில், கர்நாடகாவின் பீதரில் தசரா நாளில் பாரம்பரியமிக்க, மசூதி, மதரசாவில் காவிப்படை ஒன்று நுழைந்துபூஜை நடத்த
முயன்றது.
இஸ்லாமியரையும் தலித்துகளையும் விளிம்பு நிலைக்குத் தள்ளுவதுதான் சங்கி பாஜகவின் திட்டம் எனும் உண்மையை புரிந்து கொள்வதொன்றும் கடினமில்லை. "இஸ்லாமியர் கள் மத்தியில், அச்சம், பாதுகாப்பின்மை பற்றிய பொய்யான கருத்து பரப்பப்படுவதாக" மோகன் பகவத் கூறுவது நம் காதுகளில் விழுகிறது. தில்லியில் ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், இஸ்லாமியர்களை முழுவதுமாக புறக்கணிக் கோரும் அழைப்பையும் அதே மேடையில் மற்றொரு பேச்சாளர் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்ததையும் காணமுடிகிறது. நடக்கவிருக்கும் குஜராத் தேர்தலின் முன்னோட்டமாக, குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களும் கார்பா நடன நிகழ்ச்சிகளும் இஸ்லாம் விரோத வெறுப்பு, வன்முறையின் பொது நிகழ்ச்சியாக ஆக்கப் பட்டதைக் கண்டோம். இஸ்லாமியர்கள், சமூக விழாக்களில் கூட பங்குபெறக் கூடாதென தடைசெய்யப்பட்டனர், காவல்துறையினரும் குண்டர்களும் வெளிப்படையாகவே (இஸ்லா மியர்களை) கட்டி வைத்து காவல்துறையினர் பிரம்பால் அடிப்பதையும் அதை ஆமோதிக்கிற வகையில் கூட்டத்தினர் ஆரவாரம் செய்ததையும் பார்க்க முடிகிறது. இதுபோலவே, "சாதி கடந்த காலம்'' எனும் பேச்சுகூட, இட ஒதுக்கீடு கொள்கையை சீர்குலைக்கவும் சாதிக் கொடூரங்களை அற்பமானதாகக் காட்டவும் தலித்துகள், ஆதிவாசிகள் மதம்மாறும் அரசமைப்புச் சட்ட உரிமையை மறுக்கும் நோக்கமுடையதுமாகும்.
ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, குறித்து விழித்துக்கொண்ட ஆர்எஸ்எஸ், சில அவசர சரிசெய் நடவடிக்கை களை மேற்கொள்ளச் சொல்லி, மோடி அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தம் செய்வதாக தோன்றும் உணர்வைத் தவறெனக் கருத முடியாது. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர், தத்தாத்ரேய ஹோசபலேஸ், ஸ்வதேஷி ஜாகரன் மஞ்ச் நிகழ்வில் பேசும்போது வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி கருத்துக் கூறியுள்ளார். மோடி, "இலவசங்களுக்கு” எதிராக கொந்தளிப்பது, வேலை தேடுவோரிடம் வேலை அளிப்பவராக மாற வேண்டும் என்று புத்திமதி கூறுவது, குடிமக்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்துவதற்கு மாறாக கடமைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும், என்று பேசுவது இவை அனைத்தும்ஒரே திட்டத்தின் ஒரு பகுதிதான். மோகன்பகவத் தனது விஜயதசமி உரையில், (நமது) கணிப்பிற்கேற்றாற் போல மோடி அரசாங்கத்தை பறையடித்து பாராட்டியது மட்டுமின்றி, சங்கிப் படைகளுக்கு மிகவும் பிடித்த பரப்புரை பொருட்களின் மீது கவனம் குவித்திருக்கிறார். இந்தியாவின் மதவாரியான மக்கள் தொகை சமன்பாடு, (அவர்களது) அனுமானத்தின்படி அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையாக மாறிவிடுவார்கள் அல்லது இஸ்லாமியர் மக்கள் தொகை மிகவேகமாக அதிகரித்து வருவதால் இந்தியா மற்றுமொரு பிரிவினையை சந்திக்க நேரிடும் என்று அறிவுப் பிறழ்ச்சியை (சித்தப்பிரமையை) ஏற்படுத்தும் (மற்றவர்களுக்கு புரியாமல் அவர்களுக்கு மட்டுமே புரிகிற வகையில்) நாய் விசில் ஊதுகின்றனர். ஆர்எஸ்எஸ் அதன் நூறாவது ஆண்டை கொண் டாடுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளன. இறையாண்மை கொண்ட, ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற குடியரசு எனும் இந்தியாவின் அரசமைப்பு லட்சியத்தின் மீது போரை தீவிரப்படுத்திவரும் நிலையில், அதன் நூற்றாண்டு திட்டம் பற்றிய ஏராளமான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)