போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை உதாசீனப்படுத்திய திமுக அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிமுக, திமுக ஆட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த 2023 டிசம்பர் 19 அன்று ஆளுங்கட்சியின் தொமுச தவிர்த்து மற்ற அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கின.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் சென்னை ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. நவதாரளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்த அரசும் தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகளின் போராட்டத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். நன்கு கட்டமைக்கப் பட்டத் தொழிற்சங்கங்களை கொண்டிருக்கிற ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்துக்கு மீண்டும் மீண்டும் வருகின்றனர்.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.