கார்ப்பரேட் கொள்ளை,மதவெறி நஞ்சு என்ற இரட்டை நோய்களிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்

2014ல் இருந்தே பாஜகவின் தேர்தல் பேரணிகளில் 'இரட்டை எஞ்சின் அரசாங்கம்' என்ற கூற்றை அடிக்கடி கேட்கிறோம். இந்தக் கூற்று, பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் மாநிலங்களிலும் தனக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப் பயன்படுத்தப்படும் மோடிஷா ஆகியோரின் மிகவும் விரும்பத்தக்க உருவகமாகும். தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் இப்போது பொருளாதாரத்தை விவரிக்க விமான போக்குவரத்தின் சொல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.