அரைகுறையான, கைவிடப்பட்ட சிங்கூர் திட்டத்திற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு என்பது மேற்கு வங்க மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதி

சிங்கூரில் அரைகுறையான, கைவிடப்பட்ட நானோ தொழிற்சாலைத் திட்டத்திற்காக இழப்பீடு கோரிய வழக்கில், செப்டம்பர் 1, 2016 முதல் மீட்புக் காலம் வரை ஆண்டுக்கு 11% வட்டியுடன் ரூ. 765.68 கோடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்க மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பணத்தை மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகம் (WBIDC) கொடுக்க வேண்டும்.