தோழர் என் கே பெயரால் உறுதி ஏற்போம்; புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியாக முன்னேறிச் செல்வோம்!

தோழர் என்கே நம்மை விட்டு பிரிந்து இரண்டாண்டுகளாகின்றன. 2022, டிசம்பர் 10 (மனித உரிமை நாள்) அன்று திண்டுக்கல் மாவட்டக் கமிட்டிக் கூட்டத்திலிருந்தபோது, இறந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த கட்சியையும் அதிர்ச்சியடைய வைத்தது. எழுபதுகளின் பிற்பாதியில் திண்டுக்கல்லிலிருந்து தொடங்கிய தோழர் என் கே வின் புரட்சிகர பயணம் 2022 ல் திண்டுக்கல்லிலேயே முடிவுக்கு வந்தது. ஆனால், ஏறத்தாழ அவரது அரை நூற்றாண்டுகால கம்யூனிஸ்ட் வாழ்க்கைப் பயணம் நம்மை தொடர்கிறது.