தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கோவில்- மடங்களின் குத்தகை விவசாயிகளின் நில உரிமைகள் மற்றும்  பண்ணை அடிமைத்த னத்திற்கு எதிரான தியாக வரலாற்றைக் கொண்டுள்ள புகழ்பெற்ற தஞ்சை மாவட்ட செங்கொடி விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு  1970 களில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவையில் துவங்கி மாநிலம் முழுவதும்  ஆட்சியாளர் களுக்கு எதிராக பெருந்திரளான விவசாயிகளை அணிதிரட்டி துப்பாக்கி சூடுகளை சந்தித்து உயிர்நீத்த பச்சை துண்டு தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் போராட்ட வரலாறு குறிப்பிடத் தக்கதாகும்.

நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் தமிழ்நாட்டு விவசாயத்தில் ஏகாதிபத்திய, முதலாளித்துவ கொள்கைகள் மற்றும்  திட்டங்களால் உருவான மாற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து விவசாயிகள் இயக்கம் மாற்றத்தை சந்தித்தது. புதிய கோரிக்கைகள் உருவாகின.

ஆற்றுநீர் பங்கீடு, பாசன வசதி கட்டமைப் புகளை உருவாக்குவது, இலவச மின்சாரம், கடன்கள் தள்ளுபடி மற்றும் பயிர் இழப்பீடுகள், குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் மானியங்கள், விளைபொருள்களுக்கான சந்தைகள்/ கொள்முதல் நிலையங்களை வலுப்படுத்துவது போன்றவை முன்னுக்கு வந்தன.

தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டங்கள் துவங்கி மத்திய வன உரிமை சட்டம் -2006 வரையிலான பல்வேறு சட்டங்கள், நிலமற்ற ஏழைகளுக்கு விவசாய நிலம் வழங்கும் அரசாணைகள், நிர்வாக நடவடிக்கைகள் எதுவுமே, நிலமற்ற ஏழைகளுக்கு, குத்தகை விவசாயிகளுக்கு, தலித் மற்றும் பழங்குடியினருக்கு எந்த வகையிலும் நிலங்களை வழங்கவில்லை. மாறாக, அவர்கள் பரம்பரை பரம்பரையாக சாகுபடி செய்துவந்த விவசாய நிலங்களை இழக்கவே நேரிட்டது. மற்றொரு புறம், அதிகரிக்கும் கடன்கள் மற்றும் ஏழ்மையின் காரணமாக, விவசாய நிலங்கள் துண்டாடப்பட்டு சிறு நில உடமைகள் அதிகரித்தன. இத்தகைய வளர்ச்சியை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பரந்த விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் சார்பிலான நோக்கு நிலையிலிருந்து, தமிழ்நாட்டு விவசாயக் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை.

மாறாக, ஒட்டுமொத்த விவசாயத்திலும் குலக்/பணக்கார விவசாயிகளின் ஆதிக்கம் உருவானது. வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாய நிறுவனங்கள், மார்கெட்டிங் கமிட்டிகள், கொள்முதல் அமைப்புகள் துவங்கி அரசியல் கட்சிகளின் கிராமப்புற தலைமைகள் வரை பணக்கார விவசாயிகள் கோலோச்சினர். ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட பணக்கார விவசாயிகளுக்கே சேவை செய்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் விளைவு தான்தலித்துகள், பெண்கள் மீது அதிகரித்து வரும் கொடுமைகள் மற்றும் சாதியாதிக்க கொலைகள் ஆகியவை ஆகும்.

தமிழ்நாடு விவசாயத்தின் மீதான புதிய தாக்குதல்களும், எதிர்வினையும்:-

விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுதல், வேளாண் விளைபொருள் களுக்கான கட்டுப் படியாகக் கூடிய விலை, கடன் பிரச்சினைகள் தமிழ்நாடு விவசாய சமூகத்தின் மய்யமான பிரச்சினைகளாக உருவாகியுள்ளன.”

கட்சியின் 10 வது காங்கிரஸ் சுட்டிக் காட்டியது: "கிராமப்புற பொருளாதாரத்தை நவகாலனிய பெருந் தொழில் குழும மறு கட்டமைப்பு செய்வதற்கு மோடி அரசாங்கம் கொள்கைகளை, திட்டங்களை உருவாக்கி வருகிறது. பெருவாரியான விவசாயிகளை வெளியேற்றி விவசாய நிலத்தை பெரு முதலாளி களுக்கும், ரியல் எஸ்டேட்டாக மாற்றவும், சாகுபடியாளர்களை ஒப்பந்த விவசாயிகளாக மாற்றவும் வழிவகுக்கிறது."

90களில் அறிமுகப்படுத்தப்பட்ட நவதாராள வாத முதலாளித்துவ  கொள்கைகள் மற்றும் பெருமுதலாளித்துவ சார்பு வளர்ச்சி பாதையால், தொழிற்பேட்டைகள் துவங்கி நெடுஞ்சாலைகள் வரையிலான பல்வேறு பொது திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் விவசாய நிலங்களை பறிப்பது நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாண்டில் மட்டுமே, சிப்காட் தொழிற் பேட்டைகள், கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மனைகள் ஆகியவற்றிற்காக, சுமார் 25 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஏழை, நடுத்தர விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெருவணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவ கம்பெனிகள், விவசாய உற்பத் தியிலும், சந்தைப்படுத்துவதிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளன; கடும் விதிகளைப் போட்டு விவசாயிகளை கடும் நெருக்கடிக்குள் தள்ளி வருகின்றன. அரசு சார்ந்த விவசாய கடன்கள் சுருங்கிப் போய் தனியார் கடன் நிறுவனங்கள் பல்கிப் பெருகிவிட்டன; அநியாய வட்டி மற்றும் கெடுபிடி வசூல் வழியாக விவசாயிகளை வாட்டி வதைக்கின்றன. விவசாய விளைபொருள்களை இலாபகரமாக சந்தைப்படுத்துவதற்கு தேவை யான வலுவான மார்க்கெட்டிங் கட்டமைப்பு / கொள்முதல் மய்யங்கள், திட்டங்கள் இல்லாத காரணத்தால் தனியார் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டு தற் கொலைகள் செய்து கொள்வது அதிகரித்தது. ‘கடனிலிருந்து விடுதலைகோரும் கோரிக்கைகளும் போராட்டங்களும் எழுந்தன.

கார்ப்பரேட் நில அபகரிப்புத் திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நுழைந்து விட்டன.  எனினும், அதிமுக ஆட்சிக் காலமான கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டு விவசாயம் நேரடியாக கார்ப்பரேட் சூறையாடலுக்கு இலக்கு ஆகியது. ஒன்றிய பாஜக அரசின் விசுவாசமான அடிமையாக தமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கம் செயல்பட்டு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்விவசாய சமூகத்தின் மீது வன்முறையை கட்டமைத்து கார்ப்பரேட் சூறையாடல் திட்டங்களை அமலாக்க துடித்தது. மீத்தேன்/ ஹைட்ரோகார்பன் திட்டங்கள், எட்டுவழிச் சாலை போன்ற நெடுஞ்சாலை திட்டங்கள், கெயில் எரிவாயு குழாய் பதிப்பது துவங்கி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பது வரையிலான பல்வேறு திட்டங்களுக்கு தங்களுடைய நிலங்களை விவசாயிகள் இழக்க வேண்டிய அச்சுறுத்தல் உருவானது. தங்களு டைய மிகச் சிறிய நிலங்களை பாதுகாத்து கொள்ள உறுதிமிக்கப் போராட்டத்தில் விவசாயிகள்  இறங்கினர். சில தருணங்களில், ஒருசில இடங்களில் நம்பிக்கை இழந்தும், எதிர்ப்பு தெரிவித்தும் உயிர்களையும் கூட மாய்த்துக் கொண்டனர். ‘பெரிய திட்டங்களுக்கு நிலங்களை வழங்க முடியாதுஎன்பதற்கான தமிழ்நாடு விவசாயிகள் போராட்டங்கள் தொடர்கின்றன.

திமுக அரசாங்கத்தின் அணுகுமுறை:-

புதிதாக ஆட்சியமைத்துள்ள திமுக அரசாங்கம் முன்வைத்துள்ள வேளாண் பட்ஜெட் கண்கவர் அறிவிப்புகளாக உள்ளது. இலட்சக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடியை அதிகரிப்பது பற்றிய, சாகுபடி நடைபெறும் நிலங்களில் இருபோகம், முப்போகம் என சாகுபடி கொள்ளளவை அதிகப் படுத்துவது பற்றிய புள்ளிவிவரங்களை மட்டுமே  விவரிக்கிறது; அதற்கேற்ற விரிவானத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி மவுனம் சாதிக்கிறது.

தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன பகுதிகளின் (குறிப்பாக காவிரி, பாலாறு, பெரியாறு போன்ற பிறமாநிலங்களில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள் ஓடும் ஆற்றுப் பாசனபகுதிகளின்) பாரம்பரிய மான நதிநீர் உரிமை, சட்டபூர்வமான தண்ணீர்  பங்கீடு தொடர்பான நதிநீர் தாவா பிரச்சி னைகள் பல்லாண்டுகளாக நீடித்து வருகிறது. இதன் மீதான கொந்தளிப்புமிக்க விவசாயிகள் போராட்டங் களும், அரசியல் விவாதங் களும் தொடர்கதை யாக உள்ளன. இத்தகைய பின்னணியில், சாகுபடி நிலப்பரப்பை விரிவுபடுத்திட, சாகுபடியாகும் விளைபொ ருள்களின் கொள்முதல் அளவை அதிகரிக்க தேவையான பாசன கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சொல்லப் படவில்லை. ஆறு மற்றும் ஏரிகளில் நடைபெறும் மணல் கொள்ளைகளை தடுப்பது துவங்கி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாருவது, பொது மராமத்துப் பணிகளை கட்டமைப்பது வரையிலான பணிகளுக்கான விரிவானத் திட்டங்கள் எதுவும்  இல்லை.

கோரிக்கைகள்:-

1) 'தமிழ்நாட்டு விவசாய சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும்' என்ற வேளாண் பட்ஜெட் அறிவிப்பை ஆக்கபூர்வமான வழிமுறைகளில் செயல்படுத்திட:

) கோவில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை சாகுபடி செய்து வரும் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக்கு!

) நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலத்தை வழங்குவது என்ற வாக்கு றுதியை நிறைவேற்றும் வகையில்,

உச்சவரம்பிற்கு அதிகமான நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை கிராமப்புற ஏழை குடும்பங்க ளுக்கு 2 ஏக்கர் வீதம் வழங்கிடு!

) 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தி, பழங்குடி யினருக்கான நிலங்களை வழங்கிடு!

) பரம்பரை பரம்பரையாக புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்துவரும் தலித் மற்றும் பழங்குடி ஏழை விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றாதே!

2) 'பொதுத் தேவை' என்ற பெயரால், ஒன்றிய அரசால் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் விரோத, விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு ஒப்புதலை வழங்காதே!

3) விவசாயிகளை, விவசாய நிலத்தை சூறையாடுகிற, கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பான ஒப்பந்த விவசாயத்தை ஒழித்துக் கட்டு!

4) விவசாயத்தை இலாபகரமாக்குவதற்காக, வேளாண் விளை பொருள் களுக்கான குறைந்த பட்ச ஆதார விலைகளை உறுதிப்படுத்துவது, சந்தைப்படுத்துவதற்கான  மார்கெட்டிங் சொசைட்டிகள், கொள்முதல் மையங்களை வலுப்படுத்துவது, இடுபொருள்கள் விலைகளை குறைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை அமல் படுத்திடு!

மார்க்கெட்டிங் சொசைட்டி, பிஏசிபி உள்ளிட்டவற்றில் ஆளும் கட்சி அரசியல் வாதிகள், ஒப்பந்ததாரர்கள், நிதிசூதாட்டப் பேர்வழிகள் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டு! அனைத்து அமைப்புகளுக்கும் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்து!

5) தனியார் கடன்கள் மற்றும் கந்துவட்டித் தொல்லையால் நிகழும் விவசாயிகள் தற்கொலை களைத் தடுத்து நிறுத்திட, கந்துவட்டித் தொழி லுக்கு தடை விதித்திடு! ஏழை சிறு, குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கிடு!

6) நீர்ப்பாசன கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக பொது செலவீனத்தை அதிகப்படுத்துஉடனடியாக குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்! திட்ட செயல்பாடுகளில் ஊழல் நடை பெறாமல்  கண்காணித்திட  விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொண்ட உள்ளூர் மட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு!

எதிர்கால வேலைத் திட்டம் :-

தமிழ்நாட்டில் பணக்கார விவசாயிகள் தலைமையிலான பல்வேறு விவசாய சங்கங்கள் கிளைத்துள்ளன. அதே சமயம், ஏழை நடுத்தர விவசாயிகளை அடித்தளமாகக் கொண்டபோராட்டப் பாரம்பரியம் மிக்க செங்கொடி சங்கங்கள் தலைமையிலான விவசாயிகள் இயக்கமும் தொடர்கின்றன. இன்றைய சூழலில் செங்கொடி விவசாயிகள் சங்க பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதற்கானக் கடமை நமக்கு உள்ளது என்ற நோக்குநிலையில் இருந்து எதிர்கால வேலைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில், ஆங்காங்கே சில மாவட்டங்களில் உள்ள  வேலைப் பகுதிகளில், ஏழை சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் நில உரிமை மற்றும் குத்தகை உரிமைகள் ஆகியப் பிரச்சினைகளில் இயக்கத்தை கட்டமைத்தோம். காவிரி டெல்டா மாவட்டம் துவங்கி எட்டுவழி சாலை எதிர்ப்பு இயக்கம் வரையிலான தலை யீடுகள் மற்றும் செயல்பாடுகள் என்றப் பின்னணியில்அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் முதல் மாநில மாநாட்டையும் கட்ட மைத்தோம்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க எழுச்சி ஒருபுறம், கார்ப்பரேட் சார்பு திட்டங்களுக்கான நில அபகரிப்புகளுக்கு எதிரான தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டங்கள் என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

1) ஏழை, நடுத்தர விவசாயிகள் மத்தியிலான நமது சொந்த அடித்தளத்தை வலுப்படுத்தும் கடமைகளில் ஊன்றி நின்றுக் கொண்டு, தற்போது நடைபெற்று வரும் மோடி ஆட்சியின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்திலும் இணைந்து கொள்ள வேண்டும்.

2) கார்ப்பரேட் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் எழுந்துவரும் விவசாயப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

3) கோவில், மட நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தைச் சொந்தமாக்குதல் மற்றும் கார்ப்பரேட் நிலப் பறிக்கு எதிரான பிரச்சினைகளில், சில மாவட்டங்களில்/ மையங்களில் மாநாடுகள், அணிதிரட்டல் ஆகியவற்றை நடத்தத் திட்டமிட வேண்டும்.

4) சில மாவட்டங்களில், ஏழை சிறு விவசாயிகள் மத்தியில் குத்தகை உரிமை உள்ளிட்ட நில உரிமை மற்றும் இன்னபிற பிரச்சினைகள் மீதான திட்டமிட்ட வேலைகளை தொடர்ச்சியாகக் கட்டமைக்க வேண்டும்.

உறுப்பினர் சேர்ப்பு, கிளைகள் துவங்கி மாவட்ட கமிட்டிகளை உருவாக்குவது வரை யிலான அமைப்பு வலைப்பின்னலை உருவாக்கு வதில்  ஈடுபட வேண்டும்.

5) திட்டமிடப்பட்ட நமது பணிகளை வலுப்படுத்திக் கொண்டு, அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM தமிழ்நாடு இரண்டாம் மாநில மாநாடு நோக்கி முன்னேற வேண்டும்.