தோழர் சரோஜாவுக்கு செவ்வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மு..சரோஜா 1.2.2022 அன்று வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். அவருடைய இறுதி நிகழ்ச்சி 2.2.2022 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இகக(மாலெ) புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மோதிலால், முற்போக்கு பெண்கள் கழகத் தோழர் விஜயா, புதுவை மாவட்டச் செயலாளர் புருசோத்தமன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்த தோழர் சரோஜாவுக்கு செவ்வணக்கம்!